Penbugs
Cinema

” வெந்து தணிந்தது காடு “

இதுக்கும் உனக்கும்
எந்த சம்மந்தமும் இல்ல
நீ ஒதுங்கி போ சித்து,

முடியாதுன்னு சொன்னா
இதுல உன்னோட ரியாக்ஷன்
என்னவா இருக்கும் ராஜேஷ்..?

ஏற்கனவே உனக்கும் எனக்கும்
செட் ஆகாது இது என் பிரச்சனை
இதுல நீ இடையில வராத சித்து,

செட் ஆகாமையே இருக்கட்டும்
ஆனா நான் வருவேன் ராஜேஷ்,

அப்போ நீயா நானான்னு
பா** (பாத்துருவோம்) சித்து என்று
ராஜேஷ் சொல்லி முடிப்பதற்குள்
தாடை திரும்பும் அளவிற்கு அவன் வாயில் ஒரு பஞ்ச் வைத்தான் சித்து,

வாயின் ஓரத்தில் ரத்தம் கசிய
கீழே விழுந்தான் ராஜேஷ்,

சித்து தலையில் கனத்துடன்
மிகவும் உஷ்ணமாய் இருந்தான்,

அன்று கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!!

அந்த கல்லூரியில் கடைசி ஐந்து ஆண்டுகளாக படித்த எந்த மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை

இளங்கலை, முதுகலை என
பட்டம் வாங்க முன்னாள் மாணவர்கள் கடைசி ஐந்து வருட பேட்ச் என எல்லோரும் திரண்டு வந்திருந்தனர் கல்லூரிக்கு,

ஒரு பக்கம் ஆட்டம் பாட்டம்
என்று மாணவர்கள் குதூகலத்தின் உச்சியில் இருந்தனர்,

இன்னொரு பக்கம் மாணவர்கள்
தங்கள் துறைக்கு ஏற்ப தனித்தனியே
பட்டங்களை வாங்கிக்கொண்டிருந்தார்கள்,

நான் அவனை அடித்தது யாருக்கும்
தெரியாது நாட்களும் கடந்து சென்றது

என் வாழ்க்கையோட ஒரு சிறுதொடரான இந்த கல்லூரி வாழ்க்கை – ல
நான் ராஜேஷ அடிச்சது பின்னாடி
ஒரு தொடர் கதையா ஒரு தீரா பகையா
வளர்ந்து எனக்கு எதிரா நிக்கும்ன்னு
அன்றைக்கு எனக்கு தெரியாம போச்சு..!!

(ஐந்து வருடங்களுக்கு பின்)

சித்தார்த்..?..!!
நான் வேணும்னா வரட்டுமா பா..?

வேண்டாம் முடிஞ்சு
இந்த வந்துட்டேன் மி(அம்மா)..!!

மி, எந்திரிச்சு உட்காருங்க

சளிக்கும் இருமலுக்கும்
உங்கள ரொம்ப பிடிச்சுருக்கு போல
அதான் இங்க பாருங்க இவ்வளோ
Allopathy English Medicine Syrup
குடிச்சும் உங்களுக்கு இன்னும்
முழுசா சரி ஆகல,

இப்போ பாருங்க மி
என் கை பக்குவத்துல வச்ச
இந்த மிளகு ரசம் சாப்பிட்டா
எப்படி எல்லாம் கண் காட்டி வித்தை
மாதிரி பறந்து போயிடும் பாருங்க
என்று கை தாங்களாக
அவன் அம்மாவை சித்தார்த் தூக்கி
உக்கார வைத்தான்,

சுட சுட இருந்த தான் வடித்த சாதத்தில்
கொஞ்சம் மிளகு ரசம் ஊற்றி பிணைந்து
சித்தார்த் அவன் அம்மாவிற்கு
ஊட்டி விட்டான்,

அவன் அம்மா சாப்பிட்டதும்
தன் கைகளை கழுவிக்கொண்டு
அம்மாவின் தலையணையை
கட்டிலில் சரியாக வைத்துவிட்டு
அவர்களை உறங்க வைத்து விட்டு
தன் வீட்டின் மாடிக்கு சென்றான்,

நேரம் சரியாக இரவு எட்டு,
கையில் தன் மொபைலை பார்த்தவாறு
அதனுள் மூழ்கி திளைத்தான்,

Incoming Call Received..!!

ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா தியேட்டருக்குள் நுழையும் போது வரும் ஜிகர் தீம் தான் ரொம்ப வருஷமாக
சித்தார்த்தின் மொபைல் ரிங்டோன்,

ஏதோ புது Landline நம்பரில் இருந்து
அந்த Incoming Call வருகிறது,

ஹலோ, சார்
நாங்க கிரெடிட் கார்டு
ஆஃபர் பண்ணுறோம்
நீங்க எங்க ஒர்க் பண்றீங்கன்னு
தெரிஞ்சுக்கலாமா..? என்று
ஒரு பெண் அந்த காலில் பேசினாள்,

எதுவும் பேசாமல் அந்த அழைப்பை
பாதியில் துண்டித்தான் சித்தார்த்,

சித்தார்த்தின் அம்மாவின் குரல் கேட்டது,

சித்தார்த் கொஞ்சம் கீழ வரியா..?
அம்மாவின் குரல் கேட்டதும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான்,

மி மாடியில நின்னுட்டு இருந்தேன்
என்ன திடீர்னு கூப்பிட்டிங்க
நீங்க இன்னும் தூங்கலையா.?
என்றான் சித்தார்த்,

தூக்கம் வரல பா!
கொஞ்ச நேரம் அம்மாக்கு
தட்டி கொடுக்குறயா
அம்மா அப்படியே தூங்கிடுவேன்,
சரி மி வா தட்டி கொடுக்குறேன்
சித்தார்த் தட்டி கொடுக்க
அருகில் இருந்த ரேடியோ பெட்டியில்
ரஹ்மானின் ‘தீயில் விழுந்த தேனா” பாடல் மிதமான சத்தத்தில் ஒலிக்கிறது,

அம்மா உறங்கி விட்டார்கள்,

மீண்டும் சித்தார்த்தின் மொபைலில்
ஜிகர் தீம் ரிங்டோன் ஒலிக்கின்றது
Attend செய்கிறான்..!!

அந்த அழைப்பில் எதிரில் இருந்த குரல் :

**த்தா சித்து நாயே..!!
அப்பா இல்லாத பையன் தானடா நீ
நீயெல்லாம் என் மவன் மேல
கை வைக்கலாமா..?
உனக்கு என்ன தகுதி இருக்கு..? நாளைக்கு என் மவன் காலுல வந்து
நீ விழுந்து மன்னிப்பு கேக்கணும்
இல்லேன்னா உங்க அப்பன
கொன்னது மாதிரி உங்க ஆத்தாவுக்கும்
தேதி குறிச்சுடுவேன் பாத்துக்கோ,

மரியாதையா நாளைக்கு காலையில
பத்து மணிக்கு நீ அடிச்ச அதே
உன்னோட கல்லூரிக்கு வந்துரு
என்று சொல்லிவிட்டு
அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது,

சித்து அமைதியாய் இருந்தான்
இப்போ பேசுனது ராஜேஷோட அப்பா!

சலனம் இல்லாத ஐந்து வருட
நிம்மதியான வாழ்க்கையில்
ஆமை புகுந்தது போல
முன் செய்த வினை இன்று
மரமாக மாறி நிற்கிறது போல்
என்று சித்தார்த் மனதில் ஓடியது,

கொஞ்சம் ராஜேஷ் அப்பா பேசியதை
தன் Call Record – இல் இருந்து
திரும்ப திரும்ப கேட்டான் சித்தார்த்,

***

உங்க அப்பன கொன்னது மாதிரி
உங்க ஆத்தாவுக்கும்
தேதி குறிச்சுடுவேன் பாத்துக்கோ,

***

என்று ராஜேஷ் அப்பா கூறிய வார்த்தைகள் இவ்வளவு நாள் யாரை இழக்க கூடாதோ அவரை இழந்து விட்டு சித்தார்த் அவன் கோபத்தை தன்னுள் அடக்கி இந்த உலகத்தில் வாழ்ந்தானோ மொத்த கோபத்தின் பிறப்பிடமாய் புதிய மனிதனாக கண்ணில் வெறியுடன்
அவன் அம்மாவை எழுப்பினான்,

மி,
அப்பா எப்படி செத்தார்..?

மீனாட்சி (சித்தார்த் அம்மா) :

என்னப்பா திடீர்னு வந்து கேக்குற
அதான் உனக்கு தெரியுமே
அவருக்கு தான் ஹார்ட் – ல
ஒரு ஓட்டை இருந்துச்சே
போதிய வைத்தியம் பாக்க முடியாம
அப்பா நம்மல விட்டுட்டு போய்ட்டாருப்பா
இது உனக்கு தெரிஞ்சது தானே,

அது சரி
இப்போ ஏன் முகமெல்லாம்
வேர்த்து இருக்கு..?
ஒரு மாதிரி இருக்க..?
என்ன ஆச்சுப்பா என்று கேட்டாள்,

சித்தார்த் எப்போதும்
பேசும்போது கண்களை
கூர்ந்து கவனிப்பான்
எதிர் இருப்பவர்களிடம்,
அவன் அம்மா மீனாட்சி கண்ணில்
துளி அளவும் பொய்யில்லை என்பதை உணர்ந்தான்,

ஆனால் ராஜேஷ் அப்பா சொன்னது அன்று இரவு முழுவதும்
அவனால் தூங்க முடியவில்லை,

காலையில் அவரையும் ராஜேஷையும் நேரில் சென்று பார்க்கணும் என்ற தலை வலி வேறு புதிதாக இப்போது, ஆனால் அன்று நான் ராஜேஷை ஏன் அடித்தேன் என்று அவன் அப்பா என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை,

அது சரி எல்லா அப்பாவிற்கும் தான் பிள்ளை மீது தப்பு இருந்தாலும் பாசம் கண்ணை மறைத்து விடும் என்பது ராஜேஷ் அப்பாவிற்கும்
வெளிச்சம் தான் போல ஹ்ம்ம்,

இந்த இரவை கடப்போம்
என்று கண்களை மூடினான்,

(ஐந்து வருடங்களுக்கு முன்)

ராஜேஷ் பணக்கார வீட்டு பையன்
கொஞ்சம் பந்தாவாக
கல்லூரியில் சுற்றுவான்,
மிடுக்கான பணக்கார திமிர் என்பது
அவன் உதிரத்தில் கலந்த ஒன்று
கூடவே தன் இனப்பெருமையும்,

Gang Fight ல ஆரம்பிச்சு,
Friend லவ்க்கு அவங்க Gang கூட
சண்டைக்கு போய் கைகளவாகி,

இப்படி பல பிரச்சனையால
அவனுக்கும் எனக்கும் (சித்து)
அப்போ சுத்தமா செட் ஆகாது,

உறவுகள் தொடர்கதைன்னு
பெருசுங்க எல்லாம் சொல்லுவாங்க
எங்க ரெண்டு பேருக்குள்ள
இருக்குற இந்த உறவும்
ஒரு தொடர் கதையா தான்
இருக்கும்ன்னு அன்னக்கி நான் நினைக்கல,

ராஜேஷ் :

ஏன் டா உங்க ஆளுங்க எல்லாம்
படிச்சு பட்டம் வாங்கி என்ன டா பண்ணப்போறீங்க..?

அன்பு (சித்தார்த் Cousin Brother) :

ராஜேஷ் பாத்து பேசு!
இது காலேஜ் நம்ம படிக்க வந்த இடம்
இடம் பொருள் ஏவல் பார்த்து பேசு
நீ கேக்குற கேள்வி பேச இது இடம் இல்ல
அது போல நீ பேசுறதுல
இருக்க விஷயம் ரொம்ப தப்பானது!

ராஜேஷ் :

எங்க வீட்ல வீட்டு வேலை பாக்குறது
உங்க இனம் தான், நீயும் வேணும்னா வா
அவங்களுக்கு தரத விட ஒரு பத்து ரூபாய்
சேர்த்து தரேன், உனக்கு எதுக்கு டிகிரி எல்லாம் சொல்லு..?

அன்பு :

சிரித்தான்,
நீ கொடுக்குற சம்பளத்தை விட நான் உனக்கு பத்து ருபாய் இன்னும் சேர்த்து தரேன் ராஜேஷ் “ஒழுக்கமுறை” னா என்னான்னு கொஞ்சம் டியூஷன் போய் கத்துக்கிட்டு வா,

இருவரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து அன்புவை நோக்கி அந்த மர நிழலிற்கு சித்து வந்தான்,

அப்போது நடந்த சண்டையில் தான்
சித்து ராஜேஷின் வாயில் பஞ்ச் செய்தான்

ராஜேஷ் வாயில் ரத்தத்துடன்
கீழே சுருண்டு விழுந்தான்,

* (மீண்டும் நிகழ்காலம்)

காலை விடிந்தது
சூரிய அஸ்தமத்துடன்
சித்து ராஜேஷையும்
அவன் அப்பாவையும் பார்ப்பதற்காக
கொஞ்சம் முன்னதாகவே கிளம்பி
கல்லூரி சென்றான் தனது பைக்கில்,

கல்லூரியில் இருந்த
அந்த கார்டன் மாதிரியான
ஒரு சூழ்நிலையில்
கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும்
கிருஷ்ணன் கோவில் முன்
சித்தார்த் தனியாக அமர்ந்தான்
அவர்களின் வருகையை எதிர் நோக்கி,

ராஜேஷ் அப்பா மட்டும்
தனியே நடந்து வந்து
சித்தார்த்தின் முன் அமர்ந்தார்

சித்தார்த் மௌனம் காத்தான்
அவரும் ஏதும் பேசவில்லை,

ராஜேஷ் வரலையா..?
நான் உங்கட கொஞ்சம்
பேசணும் என்றான் சித்தார்த்,

பேசு என்றார்,

அன்னக்கி நான் ராஜேஷ
அடிச்சது உண்மை தான்,
ஆனா அன்னக்கி அவன் பேசுனது
ரொம்ப தப்பு, படிக்குற இடத்துல
ஜாதி, இனம் பேசுனான்,
அது பேச இது இடம் இல்லை
என்று சொன்னோம்
அவன் கேட்கவில்லை,
என்னுடைய கோபத்தினால்
நான் அவனை அடித்து விட்டேன்,
நான் அடிச்சுருக்க கூடாது
ஹ்ம்ம் என்றான் சித்தார்த்,

நீ அடிச்ச குற்ற உணர்வை
உணரணும் நீ
என்ன இருந்தாலும் என் பையன் பேசுனது தப்பா இருந்தாலும்
நீ அவன அடிச்சுருக்க கூடாது
எல்லாத்தையும் மறந்து போய்
தள்ளு வண்டில பல வருஷமா மருத்துவமனையில
தன்னையே மறந்து உட்கார்ந்து இருக்க
என் பையன் கால்ல விழுந்து
நீ மன்னிப்பு கேக்கணும் சித்தார்த்
என்கூட இப்போ நீ வந்து,

ஆமா ராஜேஷ் இப்போ
கோமா ஸ்டேஜ் போயிட்டான்
அன்னக்கி நீ அடிச்சதுக்கு அப்பறம்,

ஆமா,
நான் அடிச்சுருக்க கூடாது!
ஹ்ம்ம் அடிச்சுருக்கக்கூடாது சார்!
அன்னக்கி நான் அவனை
அடிக்க மட்டும் தான் செஞ்சேன்,
நான் அடிக்குறப்போ
அவன் கால் தடுமாறி கீழ விழுந்தான்,
ஆனா அதுல அவன் கோமா ஸ்டேஜ்
போகலன்னு எனக்கு நல்லா தெரியும்,

நாங்க சண்டைபோட்ட
அந்த மர நிழல் பக்கத்துல
கல்லூரி மைதானத்துல
பசங்க கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தாங்க,

நான் அடிக்குறப்போ
உங்க பையன் கீழ விழுகுறப்போ
அங்க பசங்க கிரிக்கெட் விளையாடுனாங்களே
அவங்க அடிச்ச லெதர் பந்து
(அதான் CORK BALL)
எதிர்பாராவிதமா உங்க பையன்
தலையில அடிச்சு கீழ சுருங்கி
விழுந்துட்டான்,
பசங்க தெறிச்சு ஓடிட்டாங்க,
மனிதாபிமானத்த கொஞ்சம்
தள்ளி வச்சுட்டு நானும்
அங்க இருந்து கிளம்பிட்டேன்,
இப்போ அதன் விளைவு
உங்க பையன் கோமா ஸ்டேஜ்,

சித்தார்த் பேசுவதை கேட்ட
ராஜேஷ் அப்பாவிற்கு
மேலும் கோபம் எரிதழலாக
மனதிற்குள் அணையா தீயாக எரிந்தது

ஏற்கனவே உங்களுக்கு
இரண்டு முறை ஹார்ட் அட்டாக்
வந்துருக்குல, எல்லாம் தெரியும்
இந்த ஐந்து வருஷம் ஏதோ ஒரு
இடுக்குல ஏதோ ஊர்ல நான்
எங்க அம்மா கூட தனியா இருந்தாலும்
உங்களையும் உங்க குடும்பத்தை
பற்றியும் வேவு பார்த்துட்டு தான்
இருக்கேன் இருந்தேன்,

என்ன காலம் தான் கை கூடி வரல..?

ஹ்ம்ம்!
இப்போ உங்க பையன்
ICU – ல இருக்கான்ல..? ஹ்ம்ம்
ஏதோ கார் Accident – ன்னு கேள்விப்பட்டேன், ஆனா ஒன்னு
உங்க பையனுக்கு என்னால வரவேண்டியது எல்லாம்
வேற யாரோ ஒருத்தங்க ரூபத்துல வருது,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் சொல்லுவாங்கல சார் அதான் இது,

Blood Pressure ரொம்ப
Increase ஆகுது போல,
மூஞ்செல்லாம் குப்புன்னு
வேர்த்துருக்கு பாருங்க,
இன்னொன்னும் சொல்லுறேன்
கேட்டுக்கோங்க Mr.சொக்கலிங்கம்,

அன்பு – ட்ட ஜாதி வச்சு
உங்க பையன் ராஜேஷ்
பேசுனதால தான் இப்போ இப்படி
நான் பேசுறேன் நினைக்குறிங்களா.?

எங்க அம்மாட்ட நான் கேட்டேன்,
நம்ம அப்பா எப்படி செத்தாருன்னு..?
அவங்க சொன்ன பதில் மிக தெளிவு,
அவங்க கண்ணுல பொய் இல்ல,
ஆனாலும் எனக்கு சந்தேகம்,

நீங்க வேற போன்ல பேசுறப்போ கோபத்துல ஏதோ உளறிட்டிங்க,

***

உங்க அப்பன கொன்னது மாதிரி
உங்க ஆத்தாவுக்கும்
தேதி குறிச்சுடுவேன் பாத்துக்கோ,

***

நான் தான் ஐந்து வருஷமா
உங்கள வேவு பாத்துட்டு தானே
இருந்தேன், அதனால இது முன்னவே
நான் விசாரிச்சது தான்,
அப்பறம் நீங்க போன்ல
உளறுனது வச்சு உறுதி பண்ணிட்டேன்,

எங்க அப்பாவோட உயிர் நண்பன்
அதான் உங்க வீட்டுல வேலை பார்த்து
போன வருஷம் மாரடைப்புல
இறந்து போனாரே கந்தசாமி அங்கிள்
அவர்கிட்ட இருந்து தான்
உண்மைய தெரிஞ்சுகிட்டேன்,

உங்க வீட்டுல உங்க கார் – க்கு
டிரைவரா வேலை பார்த்தாரே
Mr.சண்முகம் அவர் தான் எங்க அப்பா,
சம்பளம் கூட கேட்டதுக்கு செருப்பு தைக்குற கூட்டத்துல இருந்து வந்தவனுக்கு சம்பள உயர்வு
ஒன்னு தான் கேடோன்னு
அவரை திட்டி அனுப்பிச்சுட்டிங்க,
மனசு நொந்து போன மனுஷன்
அப்போ தற்கொலை பண்ணினார்,
ஆனா இது எங்க அம்மாக்கு கூட
தெரியாம மறைச்சுட்டிங்க பாருங்க ஹ்ம்ம்!

அவ்வளோதான்
இப்போ ICU – ல இருக்க
உங்க பையனுக்கு ஆக்சிஜன் வாயுவையும் பிடிங்கியாச்சு,
அவன் செத்துட்டான்
இப்போ உங்களுக்கு
போன் வரும் பாருங்க,

Mr.சொக்கலிங்கத்திற்கு Call வந்தது!
மகன் இறந்து விட்டான் சிகிச்சை பலனின்றி என்று டாக்டரிடம் இருந்து,

ஏற்கனவே இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்த சொக்கலிங்கம் பையன் இறந்த விஷயத்தை சித்தார்த் சொன்னதை கேட்டு அவசரமாக காரில் மருத்துவமனை கிளம்ப இருந்த நேரத்தில் காருக்குள்ளேயே மூன்றாம் முறையாக வந்த ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார்,

மருத்துவமனையில் ராஜேஷ்
Dead Certificate ரெடி செய்து விட்டு சித்தார்த்தின் அண்ணன்
டாக்டர்.அன்பு M.S.Ortho (Trauma)
ICU – வில் இருந்து வெளியே வந்தான்,

மறதி நம் நாட்டின் தேசிய வியாதி தான்
மறதியில் கோமாவில் இருக்கும்
ராஜேஷ் போன்றவர்கள் எப்போது
பழைய நிலைமைக்கு திரும்பினாலும்
அந்த ஜாதி என்னும் கொடிய தீ
அவனுக்குள் இருந்துக்கொண்டே
இருக்கும், நான் தான் மேல் குடி
என்று அவன் இனம் தவிர்த்து
பிற மக்களை வஞ்சிக்க கூடியவன்,
இவனுக்கு எங்கிருந்து இந்த வியாதி
பரவி இருக்கும் அதான் சொக்கலிங்கம்
என்னும் அந்த வேரையும் பிடுங்கி எரிந்தாயிற்று இயற்கை மரணமாய்,

கல்லூரி வளாகத்திற்குள் இருந்த கிருஷ்ண பகவானை
கும்பிட்டான் சித்தார்த்,

கல்கி அவதாரம் என்பது
விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும்.
கல்கி பகவான் கலி யுகத்தில்
தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று.

ஆம் இது சித்தார்த் எடுத்த
ஒரு மஹா கல்கி அவதாரம்
ஜாதி என்னும் கொடிய தீ பரவிய
இரு உயிர்களை அழிக்கவும்
தன் அப்பாவின் சாவிற்காகவும் ,

இப்போது சித்துவின் மொபைலில் மீண்டும் ஜிகர் தீம் ஒலித்தது,

மீனாட்சி :

சித்து மணி 1 ஆக போது
சாப்பிட்டயா..?

மி!
சாப்பிட்டேன் மி
Full Meals மனசுக்கு நிறைவா
தொட்டுக்க கொஞ்சம் கிச்சடியோட..!!

Scribbles by
Yours Shiva Chelliah ?