Penbugs
CoronavirusEditorial NewsEditorial News

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

108 சேவைக்கு புதிய வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவங்கி வைத்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா பாதித்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம்தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

இதன்படி தமிழகம் முழுவதும் தற்போது 1,005 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்த சேவையை விரிவுபடுத்த 500 ஆம்புலன்ஸ் வாகனங்களை கூடுதலாக கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்பாட்டிற்கு வழங்குவதாக முதல்வர் அறிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து, முதற்கட்டமாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இதில் அரசு சார்பில் 90 வாகனங்களும், தனியார் நிறுவனம் சார்பில் 18 வாகனங்களும் செயல்பட உள்ளன.

90 அவசர ஊர்திகளில் 10 வாகனங்கள் ரத்த சேவை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த அவசர வாகனங்கள் தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்படும். தொடர்ந்து, சில தினங்களில் மீதமுள்ள அவசர வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

2 drivers travel 3000 km to bring back youth’s body

Penbugs

Leave a Comment