Penbugs
Editorial News

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 17 ஆம் ஆண்டு நினைவு தினம்

கும்பகோணத்தில் 2004ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த நிலையில், இன்று 17ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தின், காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா தனியார் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீயில் கருகி உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரை காவிரி ஆற்றுப்பாலம் அருகே நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு மரியாதை செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் இங்கு இறந்த குழந்தைக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது வருகின்றது.

இன்று நினைவு நாளையொட்டி பள்ளி முன்பாக வைக்கப்பட்டுள்ள, குழந்தைகளின் புகைப்படங்கள் முன்பாக மலர்தூவியும், மெழுகுவர்த்திகளை ஏந்தியும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

Related posts

TN State Government scraps classes 5, 8 Public exams

Penbugs

19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

Penbugs

Leave a Comment