Penbugs
Editorial News

35 கி.மீ தூரத்தை சில நிமிடங்களில் கடந்த மனித இதயம்..!

தெலுங்கானா மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் பயணிகள் இன்றி இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, வேறொருவருக்கு பொருத்தப்பட்டது.

ஐதராபாத்தின் எல்.பி.நகர் காமிநேனி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த விவசாயி ஒருவரது இதயம் ஜூப்ளிஹில்ஸ் அப்பல்லோ மருத்துவமனையிலுள்ள ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

எல்.பி.நகரிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஜூப்ளிஹில்ஸ் பகுதிக்கு சாலை வழியாகச் சென்றால் வாகன நெரிசல் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்பதால், மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மெட்ரோ நிர்வாகம் பயணிகள் இல்லாமல் சிறப்பு மெட்ரோ ரயில் ஒன்றை ஏற்பாடு செய்தது.

நேற்று மதியம், 3:30 மணிக்கு, சிறப்பு ரயிலில் கொண்டு செல்லப் பட்டது. மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், 16 ரயில் நிலையங்களை கடந்து, ஜூப்ளி ஹில்ஸ் ரயில் நிலையத்தை, 30 நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் சென்றடைந்தது.

அதனால் இதயம் கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்பட்டது.

மருத்துவர்கள் மற்றும் மெட்ரோ நிர்வாகத்தின் இந்த செயல் நெகிழ்ச்சி அடைய செய்வதாக உள்ளது.

Related posts

தெலங்கானா மருத்துவர்களுக்கு ஊக்கமளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

Kesavan Madumathy

Leave a Comment