40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா..காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது

CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
163,120
+5,034 (24h)
Deaths
4,653
+119 (24h)
Recovered
69,534
42.63%
Active
88,933
54.52%

Worldwide

Cases
5,833,766
+49,163 (24h)
Deaths
358,426
+1,489 (24h)
Recovered
2,526,278
43.3%
Active
2,949,062
50.55%
Powered By @Sri

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள நோக்கியா தொழிற்சாலையில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள் நிலையில் அந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் பணிபுரிபவர்களில் இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேருக்கும் செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தலா 7 பேருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட 11 பேரில் 8 பேர் நோக்கியா உள்ளிட்ட தொழிற்சாலைகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. எஞ்சிய 3 பேரும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவர்கள்.