Penbugs
CricketMen Cricket

அதிரடி மன்னன் கெவின் பீட்டர்சன்.!

2003 க்கு பிறகு மற்ற நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளையும் விரும்பி பார்க்க ஆரம்பிச்ச நேரம் அது அப்பதான் ஆசஸ் போட்டிகளை பத்தி ஊர்ல கிரிக்கெட் சீனியர்கள் ரொம்ப பரபரப்பா பேச ஆரம்பிச்சாங்க அதை பார்த்து அப்படி என்னதான் இருக்குனு லைவ்வா பார்க்க ஆரம்பிச்ச முதல் ஆசஸ் தொடர் 2005 .

அந்த ஆஸ்திரேலியா டீம் மாதிரி ஒரு வலிமையான டீமை பார்த்ததே இல்லை 2003ல் ஒரு வருட தடையை முடித்து வார்னே வேற டீமில் வந்து இருக்கிறார் இங்கிலாந்து டீம் ஒண்ணுமே இல்லாமதான் ஆக போதுனு நம்ம மைண்ட் செட் ஆகிடுச்சு ஆஸ்திரேலியா எப்படி முழுக்க முழுக்க டாமினேட் பண்ண போதுனு பார்க்க ரெடி ஆகிட்டு பார்க்க ஆரம்பிச்சது முதல் ஆசஸ் டெஸட்‌.

இங்கிலாந்து டாப் ஆர்டர் சரிவடைந்த அப்பறம் ஒரு ஆஜானுபாகுவான உருவம் ஒண்ணு உள்ள வருது அந்த உருவத்தின் ஹேர் ஸ்டைல் ரொம்பவே வித்தியாசமா வேற இருக்கு எடுத்த எடுப்பிலேயே ஹேர்ஸ்டைல் மூலம் கவனம் பெற்றார் கெவின் பீட்டர்சன் . அந்த முதல் மேட்ச்லயே ஐம்பது ரன் அடிச்சி ஓரளவுக்கு நல்ல ஸ்கோருக்கு எடுத்து போவார்.

அடுத்தடுத்த போட்டிகளில் அவரின் ஸ்டைலான அட்டாகிங் பேட்டிங்கும் ,அவர் நிக்கும் விதமும் ரொம்பவே பிடித்து போச்சு . ஹார்ஜாவில் சச்சின் அடிச்ச அடிக்கு அப்பறம் வார்னேவை அவ்ளோ எளிதாக அதுவும் தன்னுடைய முதல் சீரிஸ்லயே கையாண்டது கெவின் பீட்டர்சன்தான் .

அந்த சீரிஸ் முழுக்க முழுக்க கெவின் பீட்டர்சன் & பிளின்டாப்பின் ஆதிக்கம்தான். தன்னுடைய முதல் சீரிஸ்லயே இந்த அளவிற்கு புகழ் கிடைத்தது கெவினுக்கு மட்டும்தான்.அந்த தொடரில் கெவின் மட்டும் 473 ரன்கள் குவித்ததார் .

தென் ஆப்பிரிக்கா சொந்த நாடாக இருந்தாலும் , இங்கிலாந்துகாக ஆடிய பீட்டர்சன் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார்.

ஒருநாள், டெஸ்ட், T20 என்று அனைத்து போட்டிகளிலும் அவர் 13,779 ரன்கள் எடுத்துள்ளார். இதுதான் ஒரு இங்கிலாந்து வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். அடுத்த இடத்தில் உள்ள கிரகாம் கூச் இருபது ஆண்டுகளில் எடுத்த ரன்களை கெவின் பீட்டர்சன் 10 ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளார்.

கிரிக்கெட்டில் நீண்ட பெருமை கொண்ட இங்கிலாந்து வரலாற்றில் நிச்சயம் தவிர்க்க முடியாத ஒரு வீரர் கெவின் பீட்டர்சன். அதற்கு காரணம் அனைத்து விதமான போட்டிகளிலும் இங்கிலாந்துக்கு வெற்றியை தேடித்தரும் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்துள்ளார் கெவின் பீட்டர்சன்.

அவரின் திறமைக்கு இன்னும் நீண்ட நாள் ஆடியிருந்தால் நிச்சயம் சச்சின், பாண்டிங், டிராவிட் ,லாரா ஆகியோருடன் ரன்களின் அளவில் சமமாக பேசப்படும் வீரராக இருந்து இருப்பார் கெவின் பீட்டர்சன்.

அவர் களமிறங்கும் 4வது டவுனில் அதிக பட்ச ரன்களை இங்கிலாந்துக்காக எடுத்தவரும் கெவின் பீட்டர்சனே அவர் 6490 ரன்களை இந்த டவுனில் எடுத்துள்ளார்.

பொதுவாக இந்திய ஆடுகளங்களில் வெளிநாட்டு வீரர்கள் சுழற் பந்து வீச்சை எதிர்கொள்ள மிகவும் கஷ்படுவார்கள் ஆனால் இந்தியாவில் இங்கிலாந்து வெற்றிகளை பெற முக்கிய காரணம் கெவின் பீட்டர்சனே‌.சுழற் பந்து வீச்சினை கண்டு பயப்படாமல் ஸ்விட்ச் ஹிட் ஷாட் ஆடுவதில் வல்லவர் கெவின் பீட்டர்சன்.

அதிரடிக்கு பெயர் போன கெவின் பீட்டர்சனின் பிறந்தநாள் இன்று…!