Penbugs
Editorial News

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா காலமானார். அவருக்கு வயது 93.

மூச்சுத் திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தா உயிரிழந்தார்.

சாந்தா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தன் வாழ்நாளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு வி.சாந்தா அர்ப்பணித்தவர்.

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப் புகழ் பெற்றவர் மருத்துவர் வி.சாந்தா.

உலகில் எந்த மூலையில் புற்று நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், உடனடியாக அதனை அடையாறு மருத்துவமனையில் அறிமுகம் செய்தவர் மருத்துவர் வி.சாந்தா‌.

தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்மவிபூஷண் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்

Leave a Comment