Penbugs
Cinema

அல்போன்ஸ் தீட்டிய காதல் ஓவியம்

மழைக்காலத்துல நம்ம வீட்டுல
வளர்க்குற டேபிள் ரோஸ் செடி மேல
ஒரு பட்டாம்பூச்சி வந்து அமர்ந்தா அது
பார்க்குறப்போ எவளோ அழகா இருக்கும்,

மழைத்துளிகள் செடியின் காம்புல
வடிந்தோட அதுல பட்டாம்பூச்சியோட
றெக்க நனைய அதை பார்த்துகிட்டு
இருக்குற நம்ம மேல வீசுற காத்து
நா.முத்துக்குமார் எழுதுன
கவிதை மாதிரி தீண்டி செல்லும்,

அந்த மழைக்காலத்துல
பாட்டாம்பூச்சிய ரசிச்சுட்டு ஒரு பேக்கரி
போய் டீ சாப்பிட்டுட்டே அந்த டீக்கடையில
இருக்க பலகாரம்,மிட்டாய்கள்,டீ போடும்
மாஸ்டர் வரை எல்லாமே ஒரு கவிதை
மாதிரி இருக்கும் அந்த மழைக்கால
சூழலுக்கு ஏற்றவாறு,

இதெல்லாம் ரசிக்க தெரிஞ்ச மனுஷன்
ஒரு படம் எடுத்தா அது படமா மட்டுமா
இருக்கும், கீட்ஸின் கவிதைகள்
மாதிரியும் நேசமித்ரன் கவிதைகள்
பாணியிலும் படம் முழுக்க கவிதை
வாடை நம்மை நுகர செய்யும்,

” அல்போன்ஸ் புத்திரன் “

ரொம்ப அழகான சிந்தனையுடைய
மனுஷன் – ன்னு சொல்லலாம் அவர்
இன்டெர்வியூஸ் பார்த்தா தெரியும்,

நேரம் – ன்ற செம்ம ஹ்யூமர் பிளாக்
காமெடி படத்துக்கப்பறம் நம்ம ஆளு
எடுத்த படம் தான் ப்ரேமம்,

வழக்கமான காதல் கதை தான்
பள்ளி பருவத்துல ஆரம்பிச்சு
கல்லூரி வாழ்க்கைல பயணம் செஞ்சு
அதுக்கு பிறகு ஒரு மெச்சூர் லைஃப்ல
முடியுற மாதிரியான கதை தான்,
ஆனா ஒரு கவிதை மாதிரி படத்தோட
திரைக்கதையில அல்போன்ஸ் ரைட்டிங்ல மெனக்கெட்டிருப்பார்,

படத்துல வர ஒவ்வொரு கேரக்டரும்
ஏதோ ஒரு விதத்துல நமக்கு ஒவ்வொரு
ப்ஃரேம்லையும் அழகா தங்களோட
பங்களிப்ப கொடுத்துட்டு போயிட்டே
இருப்பாங்க,

நிவின் பாலியோட காஸ்ட்யூம்ஸ்,கருப்பு
நிற உடை என ட்ரெண்டிங் செய்யப்பட்ட
காலம் அது,அப்படியே மலர் டீச்சர் மேல்
உள்ள மோகத்தில் பசங்க கிறங்கி போய்
கிடந்தாங்க நம்ம சாய் பல்லவி மேல,

காதல் மாறினாலும் எத்தனை யுகம்
கடந்தாலும் நட்பு மாறாதுன்னு சொல்லுற
மாதிரி படத்துல வர நிவின் பாலியின்
நண்பர்கள் கோயா மற்றும் சம்பு
கதாப்பாத்திரங்கள் பசங்க நட்புக்கே
உரித்தான கெத்தை ஃபீல் செய்ய
வைத்தது,

பப்பி காதலில் ஆரம்பிக்கும் பருவம்
தன் கல்லூரியில் வரும் காதலில்
பிரிவை கடக்கும் போது ஒருவன்
அந்த பிரிவை எப்படி கடந்து
செல்கிறான்..?அதற்கு பிறகு அவன்
வாழ்வு எந்த திசையில் செல்கிறது..?அவனுடன் இருந்த நண்பர்கள் என ஒரு
கவிதை நடையில் படம் நம்மை அதன்
கூடவே கை கோர்த்து கூட்டிச்செல்லும்,

ராஜேஷ் முருகேசன் இசையில் ப்ரேமம் –
ன்ற தலைப்புக்கு ஏற்றவாறு கேட்டவுடன்
காதல் ததும்பும் பழரசமான பாடல்கள்
அதிலும் மலரே பாடல் தமிழ்நாடு –
கேரளா எல்லை தாண்டி பல காதல்
கதைக்கு விதை போட்டது,

ஆனந்த் C. சந்திரன் ஒளிப்பதிவு நம்மை
அந்த அந்த இடத்திற்கே போய் அங்கு
டெண்ட் போட்டு தங்கிவிட்டு வந்தது
போல ஒரு அழகான சுற்றுலா சென்று
வந்த பிரமிப்பை கொடுக்கும்
கண்களுக்கு விருந்தாக,

ப்ரேமம் படம் கேரளா தாண்டி தமிழ்நாட்டு
பசங்களால் அதிகம் கொண்டாடப்பட்டது
தமிழ் அல்லாமல் வேறு மொழி படம் நம்ம
ஊரில் அதிக நாட்கள் திரையரங்கில்
ஓடிய படத்திலும் ப்ரேமம் படத்திற்கு
இடமுண்டு,

ஊரே கொண்டாடும் அழகான ஒரு
படத்தை கொடுத்துவிட்டு இயக்குநர்
அல்போன்ஸ் ஐந்து வருடமாக இன்றும்
அடுத்த படத்திற்கான அறிவிப்பை
தெரிவிக்காமல் மௌனம் காத்து
வருகிறார்,புலி பதுங்குவது பாய்வதற்கு
தானே என்ற வசனம் தான் இங்கு
நினைவுக்கு வருகிறது,

அடுத்த படத்தின் அறிவிப்பை
எப்போது அறிவித்தாலும்
கொண்டாடப்படும் மனுஷன் தான்
இந்த அல்போன்ஸ்,

காதலில் கைகோர்த்து
காதலில் பெரும் வலி கண்டு
காதலில் விவாஹம் காண்பது

இந்த மூணு வரிகளை வைத்து ஒரு
ஓவியன் தன் ஓவியத்தை வரைந்து
அதை எப்படி கலர்ஃபுல்லாக
மெருகேற்றுகிறான் என்பதில் தான்
இருக்கிறது அவனுடைய திறமை,ப்ரேமம்
எனும் ஓவியம் அல்போன்ஸால்
வரையப்பட்ட ஓர் அழகான ஓவியம் –
ன்னே சொல்லலாம்,

இன்று ப்ரேமம் ரிலீஸ் ஆகி ஐந்து
வருடங்களை கடந்திருக்கிறது,
ஆனால் ப்ரேமம் (காதல்) என்ற
தலைப்பு எப்போதும் நம்மை ஈர்க்கும்
ஒரு மாயபிம்பம் தான்,

காதலிங்க
கல்யாணம் பண்ணுங்க
நண்பர்களோட ஜாலியா இருங்க
இன்பம் உங்கள் வாசல் கதவை தட்டும்,

ப்ரேமம் –

அல்போன்ஸ் தீட்டிய காதல் ஓவியம் : )

5YearsofPremam

Related posts

குடும்பத்துடன் இணைந்தார் நடிகர் பிரித்விராஜ்

Kesavan Madumathy

அய்யப்பணும் கோஷியும் | Movie Review

Shiva Chelliah

Varane Avashyamund (Groom Wanted) Movie Review

Shiva Chelliah

Sai Pallavi, only actor in Forbes India 30 under 30

Penbugs

Malayalam film producer Alwyn Antony accused of sexual assault

Penbugs

Happy Birthday, Sai Pallavi

Penbugs

Drishyam 2 [Prime Video] (2021): A sharp, novelistic thriller that celebrates suspense

Lakshmi Muthiah

Breaking: Writer Director Sachy passes away

Penbugs