அம்மா!

தமிழக அரசியலில் ஒருத்தரின் வெற்றிடம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதுவே அவரின் வளர்ச்சி தற்போது இருக்கும் அரசியல் சூழல்கள் அம்மாவின் எதிரிக்கட்சிகள் கூட அவங்க இருந்தால் இப்படி நடக்குமா என வினா எழுப்புவதே அவரின் வலிமைக்கு சான்று …!

சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ கல்வியைத் பயின்ற அம்மா அவர்கள் , பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார். தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது. குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார்…!

“வெண்ணிற ஆடை” படத்தில் நடிக்க ஆரம்பித்து தமிழின் முன்னணி நாயகியாக உருவெடுத்தார் ..!

‘பட்டிக்காடா பட்டணமா’ ‘சூரியகாந்தி ‘ என்ற படங்கள் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” தந்தது …!

சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற படம் அவருக்கு வழங்கியது…!

ஜெயலலிதாவுக்கு தமிழ் சினிமா உலகம் புதிய பாதையை கண்ணில் காட்டியது அது புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் அறிமுகம், எம்ஜிஆருடன் சுமார் முப்பது படங்கள் ஜோடியாக நடித்தவர் …!

பின் அதிமுகவில் இணைந்து பிரச்சார பீரங்கியாக உருவெடுத்தார். அவரது வருகைக்கு பின் பல எதிர்ப்புகளை சொந்த கட்சியிலயே எதிர்கொண்டார் அதனை தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும், நிரூபிக்கவும் ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டார். அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து தனி ஆதரவு வட்டம் ஒருவருக்கு அப்போதே இருந்தது என்றால் அது ஜெயலலிதாவுக்குத்தான்….!

கட்சியில் பல வேகத்தடைகள் ஆனாலும் அவரது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை, தவிர்க்கவும் முடியவில்லை. இயல்பான ஒரு வளர்ச்சியாக ஜெயலலிதாவின் முன்னேற்றம் இருந்தது…!

1983ம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா. 1984 சட்டசபைத் தேர்தலின்போது எம்.ஜிஆருக்கு உடல்
நலம் பாதிக்கப்பட்டதால் கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார் ஜெயலலிதா. அவரது பிரச்சாரத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிமுகவும் அமோக வெற்றி பெற்றது…!

எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர் அதிமுக உடைந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு கட்சியும், ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையில் இன்னொரு பிரிவுமாக கட்சி பிளந்தது. ஆனால் 1989 தேர்தலில் ஜெயலலிதா தான்தான் எம்.ஜி.ஆரின் வாரிசு, அடுத்த தலைவர் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இதையடுத்து ஜானகி விலகிக் கொண்டார். அதிமுக ஒரே கட்சியாக மீண்டும் இணைந்தது. ஜெயலலிதா தலைமையில் புதிய பாதையில் நடைபோட்டது அதிமுக.

1989ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, அதிரடியாக செயல்பட ஆரம்பித்தார். தமிழக சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாதான். ..!

அம்மா அவர்களின் மக்கள் நலத் திட்டங்கள் :

 1. தொட்டில் குழந்தை திட்டம்
  2.மகளிர் காவல் நிலையம்
  3.மழைநீர் சேகரிப்பு திட்டம்
  4.இலவச மிதிவண்டி திட்டம்
  5.மேம்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டம்
  6.மேம்படுத்தப்பட் காப்பீடு திட்டம்
  7.மகளிர் சுய உதவிக் குழு திட்டம்
  8.ஏழை பெண்களுக்கான தாலி திட்டம்
  9.அம்மா குடிநீர்
  10.அம்மா உணவகம்
  11.விலையில்லா அரிசி
  12.விலையில்லா புத்தகம் ,காலணி
  13.விலையில்லா மடிக்கணினி
  14.விலையில்லா ஆடு
  15.பசுமையக வீடு
  16.கோவில்களில் அன்னதானம்
  17.யானைகளுக்கு புத்துணர்வு முகாம்
  18.விலையில்லா மிக்ஸி , கிரைண்டர் ,மின் விசிறி
  19.உழவு காப்பீடு திட்டம்
  20.அம்மா மருந்தகம்
 2. கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு திட்டம்,
  22.பிரசவ கால நிதியுதவி திட்டம்
 3. மகப்பேறு பெறும்போது தாய்க்கும், சேய்க்கும் சஞ்சீவி மருந்து உள்ளிட்ட 16 விதமான இலவசப் பொருட்கள் வழங்கும் திட்டம்

இவையனைத்தும் சாமானிய மக்களுக்காக அம்மா அவர்கள் வழங்கிய திட்டங்கள். இதில் விடுபட்ட போன திட்டங்களும் உண்டு …!

அவரை கருத்து ரீதியாகவும் , அவரின் சொந்த வாழ்க்கை ரீதியாகவும் பல்வேறு கருத்துக்கள் , விமர்சனங்கள் வைக்கபடலாம் ஆனால் தமிழக மக்கள் எம்ஜிஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை தந்தது அம்மாவிற்கு மட்டுமே …!

“மக்களால் அவர் மக்களுக்காக அவர்” என்று பொதுமக்கள் மனதில் இருந்தது, அவரின் தலைமையை மக்கள் எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்பதை காட்டுகிறது ..!

திராவிட மண்ணில் ஆரிய பெண்மணிக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற ஒரு பட்டம் அதுவும் திராவிட கழக தலைவர் வீரமணியால் வழங்கப்பட்டது என்பது அவரின் நடுநிலை தவறா ஆட்சியின் சிறப்பினை கூறுகிறது…!

இறுதியாக தோழர் நல்லக்கண்ணு கூறியது

” கிராமத்தில் பிரச்சார மேடைகளில் அந்த அம்மாவை திட்டி பிரச்சாரம் செய்ய போகும் வரும் வழியில் பெண் பிள்ளைகள் மிதிவண்டியில் பள்ளி செல்வதை காணும்போது அந்த அம்மாவின் அரசியல் மீது ஆயிரம் கருந்து மோதல் இருந்தாலும் பாராட்டவே தோன்றும் ”

தமிழக அரசியலும் ,மக்களும் ஒரு நல்ல தலைவியை இழந்து கொண்டிருப்பது நிஜம்…!