Penbugs
Cinema Fitness Inspiring

அன்பான சூர்யாவுக்கு !!

வாரணம் ஆயிரம்ல கிருஷ்ணன்
சொல்லுற மாதிரி ஒரு டயலாக் வரும்,

Just Pursue What Your Heart Desires

அவன் நெஞ்ச தொட்டுட்டான்
அவன தடுக்காத,

இந்த இரண்டு வசனங்களும் கதையின்
சூழ்நிலைக்கு கெளதம் எழுதியிருந்தாலும்
சூர்யாவின் நடிப்பு சாம்ராஜ்யத்துக்காகவே
எழுதப்பட்ட வசனம் போல அமைந்து
விட்டது,

நடிப்பில் என்றுமே தனக்கு தானே ராஜா
தான் சில நேரங்களில் ராஜா தோல்வி
அடைந்தாலும் பல நேரங்களில்
அரசாணையில் முடி சூடா மன்னனாக தான்
கம்பீரத்துடன் ராஜா அமர்ந்திருப்பார்,

அரசாணை ராஜா தான் நம்ம சூர்யா,
படம் வெற்றியோ தோல்வியோ
கதைக்களத்தில் வேறு வேறு வடிவங்களில்
மாற்றங்கள் இருந்து கொண்டு தான்
இருக்கும்,

தான் மனசுக்கு பிடிச்ச உண்மையான
ஸ்கிரிப்ட் எடுத்து பண்ணிட்டு போயிட்டே
இருப்பார்,

இங்க எல்லாருமே சூர்யா நடிப்ப
ஆஹா ஓஹோன்னு பாராட்டுவங்க,

ஆனா சூர்யாக்கும் சரி
ஆர்யாக்கும் சரி கண்ணு தான்
மேஜர் ப்ளஸ் பாயிண்ட்,
காட்சியோட அழுத்தத்த கண்ணுல
நடிச்சு காமிச்சுட்டு போயிருவாங்க,

சூர்யாவோட கண்ணுக்கு அவளோ பவர்
இருக்கும் எல்லா படத்துலயும்,குறிப்பா
சொல்லணும்னா எல்லாரும் நந்தா
சொல்லுவாங்க,நமக்கு மௌனம் பேசியதே
தான்,

வாரணம் ஆயிரம் – ன்ற ஒரு படம் என்
வாழ்க்கையில மிக பெரிய தாக்கத்த
கொடுத்ததற்கு காரணம் சூர்யா தான்,

என் அப்பாவை கண் முன் நிறுத்தினார்
என் அப்பாவின் சாயல்களை திரையில்
கொண்டுவந்தார்
என் அப்பாவின் மொத்தமுமாய் படத்தில்
வந்து நின்றார்,

அது என்னமோ தெரியல
கிருஷ்ணன் மாதிரியே எங்க அப்பாவோட
இறப்புலையும் “Alcohol” ஒரு அங்கமா
இருந்ததனால எனக்கு ஒரு பாதிப்ப படம்
தந்துருச்சுன்னு நினைக்குறேன்,

இனிமே என் நிழல் – ல நீ இல்லன்னு
சொல்லவரேன்னு மகன் சூர்யா கிட்ட
கிருஷ்ணன் சொல்லிட்டு போறப்போ மகன்
சூர்யா கண்ணுல அழுகை நிக்கும், அங்க
நான் என்ன இணைச்சுக்கிட்டேன் அந்த
காட்சில,எங்க அப்பாவ நான் டாடின்னு
தான் கூப்பிடுவேன்,என் டாடி எனக்கு
சொல்லிட்டு போன கடைசி வார்த்தையா
தான் இருந்துச்சு அது,

நடிப்புன்னு வந்துட்டா சூர்யாகிட்ட
சொல்லிட்டே போகலாம் அவளோ விஷயம்
அவர்கிட்ட இருக்கு ஆனா அதையெல்லாம்
தாண்டி ஒரு நல்ல மனுஷன்னு பேரு
சம்பாதிச்சுட்டாரு எல்லார்கிட்டயும்,

நல்லது யாருனாலும் பண்ணலாம்
பணக்காரனும் பண்ணலாம் ஏழையும்
பண்ணலாம், ஆனா அதுல மனிதம்
இருக்கணும்,

சாதி மதம் இனம் இதெல்லாம்
தாண்டி படிப்பு தான் ஒரு மனுஷனோட
வாழ்வாதாரத்தின் அடையாளம்ன்னு
சொல்லலாம், இதை ஏ.ஆர்.ரஹ்மான்ல
இருந்து இயக்குநர் மாரி செல்வராஜ்
வரைக்கும் பல பேரு பல நேர்காணல்ல
சொல்லிட்டாங்க,

நல்ல மதிப்பெண் எடுத்தும் மேற்படிப்பு
படிக்காமல் போனவர்கள்,ஆதரவின்றி
நிற்கும் குழந்தைகள்ன்னு அவங்க
எல்லாருக்கும் அகரம் ஃபௌண்டேஷன்
மூலமா உதவிக்கரம் செஞ்சுட்டு வராரு,

படிப்பு – ன்றது தலைமுறை தாண்டி
பேசக்கூடியது, இன்னார் மகன் இது
படிச்சான் இப்போ நல்ல உத்யோகத்துல
இருக்கான்னு காலம் கடந்து பேசும்,

அப்படி ஒரு படிப்பு – ன்ற விஷயத்தை
கையில எடுத்து அதை வசதி
வாய்ப்பற்ற குழந்தைகளுக்கு வாரி
வழங்குற மனுஷனுக்கு எவ்வளோ
நன்றிகள் சொன்னாலும் தகாது,

ஆயிரம் பேர மகிழ்விக்குறவன்
கலைஞன்னா பல்லாயிரம் பேரோட
வாழ்க்கை தரத்த படிப்புன்ற ஆயுதத்துனால
உயர்த்தி காமிக்குறவன் பெரிய மனுஷன்,

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,

ஆண்டாள் கண்ட கனவு
ஆயிரம் யானைகள் சூழ வந்தவர் சூர்யா,

எவ்வளவு தான் கொண்டாடினாலும்
கொண்டாத்திற்கு மிகையான ஒரு
பேரன்புக்காரன் தான் சார் இந்த சூர்யா,

அவரோட அன்பான ரசிகர்களுடன்
சேர்ந்து நம்மளும் அன்பான அகரம்
அறக்கட்டளையின் நாயகனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவிப்போம்,

HappyBirthdayGoodSoulSuryaSir : ‘ ) ❤️

Related posts

Leave a Comment