அபூர்வ ராகம் | பத்ம விபூசண் ஜேசுதாஸ்..!

ஒரு குரல் உங்களை அழ வைக்கும் ,
ஒரு குரல் உங்களை காதலிக்க வைக்கும்,
ஒரு குரல் உங்களை தாளம் போட வைக்கும் ,
ஒரு குரல் உங்களுக்கு பக்தியினை ஏற்படுத்தும்.

ஆனால் இவையெல்லாம் ஒரு குரலே தரும் என்றால் அது நம் ஜேசுதாஸின் குரல்தான்…!

தான் கொண்ட தொழிலின் மீது அபரிமிதமான பக்தியும் , அதற்கு அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் விதமும் அசாத்தியமானது …!

பெரிய பாடகராக ஆன பின்னும் தனது இசைப் பயிற்சியை விடாமல் மேற்கொண்டு வருவதே அவரின் வெற்றிக்கு காரணம் ..!

கட்டசேரி ஜோசப் யேசுதாஸ், கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவர். இவரது தந்தை அகஸ்டின் ஜோசப், பிரபல பாடகராகவும் மேடை நடிகராகவும் விளங்கியவர். தன் மகனுக்கு சிறு வயதிலயே கர்னாடக இசையை பயில வைத்தார் ..!

1961ல் முதல் முறையாக திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. பிரபல கவிஞர் ஸ்ரீ நாராயண குரு எழுதிய ’ஜாதி பேதம் மத துவேஷம் ஏதுமில்லா’ என்ற அந்தப் பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது .சமீபத்தில் கூட ஒரு அரங்கில் ஜேசுதாஸ் அப்பாடலை பாடி நெகிழ வைத்திருந்தார்…!

தமிழ்த் திரைப்படங்களில் எஸ். பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக “நீயும் பொம்மை, நானும் பொம்மை” என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது…!

ஜேசுதாஸ் இந்திய மொழிகள் பலவற்றில் பாடியுள்ளார். இந்தியாவின் டாப் சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், என்.டி.ராமாராவ், அமிதாப், சஞ்சீவ் குமார், சத்யன், பிரேம் நசீர், மம்மூட்டி, மோகன்லால் என அனைவருக்கும் பாடிய ஒரு பாடகர் ஜேசுதாஸ் …!

தமது திரைவாழ்வில் வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்து இசைப் பயணத்தை தொடர்ந்து வரும் அவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், ரஷ்யன், அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 50,000-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களைப் பாடியுள்ளார் ..!

அவர் பெற்ற விருதுகள் :

* சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகருக்கான கேரள மாநில விருது 25 முறை பெற்றுள்ளார்.

* சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை 8 முறை பெற்றுள்ளார் .

* பத்மஸ்ரீ – 1975…!

* பத்ம பூஷண் -2002 …!

* பத்ம விபூஷண் -2017 ..!

அத்தனை ஆயிரம் பாடல்களில் எந்த பாட்டை பற்றி குறிப்பிடுவது அன்றாட வாழ்வில் ஒரு இடத்திலாவது இந்த பாடல்கள் இல்லாமல் எனக்கு கடந்தது இல்லை

தெய்வம் தந்த வீடு,
அதிசய ராகம்,
விழியே கதை எழுது,
செந்தாழம் பூவில்,
என் இனிய பொன் நிலாவே,
கண்ணே கலைமானே,
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
ஹரிவராசனம்
அகரம் இப்ப சிகரம் ஆச்சு
ஆராரிராரோ
பூங்காற்று புதிரானது

பிறப்பால் கிருத்துவர் ஆக இருந்தாலும்
இவரது ஐயப்பன் மீதான பக்தி
இனி ஐயப்பன் கோவில் இருக்கும்வரை இவரது ஹரிவராசனம் இல்லாமல் கோயில் நடை சாத்துவது இல்லை என்பதே ஜேசுதாஸிற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் …!

எனது அன்றாட நாளை கடக்க எனக்கு உதவியாக இருக்கும் அபூர்வ ராகத்தின் பிறந்தநாள் இன்று …!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜேசுதாஸ் …!