ஏப்ரல் 15 முதல் ரயில் பயணம், ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்…!

CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
164,936
+6,850 (24h)
Deaths
4,673
+139 (24h)
Recovered
70,102
42.5%
Active
90,161
54.66%

Worldwide

Cases
5,840,387
+55,784 (24h)
Deaths
359,109
+2,172 (24h)
Recovered
2,530,985
43.34%
Active
2,950,293
50.52%
Powered By @Sri

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரொனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதுவரையில் 1638 பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 45 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் சமூக விலகளை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்துகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் போக்குவரத்துகள் ஊரடங்கு அமல்படுத்தப்பவதற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது.

தற்போது ஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு இல்லை என மத்திய அரசு அறிவித்து இருப்பதால் 15ஆம் தேதிக்கு பிறகு ரயில் பயணத்தை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய தொடங்கப்பட்டு இருப்பதாக கூறிய அதிகாரிகள் ரயில்நிலைய கவுன்ட்டர்களில் ஏப்ரல் 15ஆம் தேதி காலை முதல் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர்.

மேலும் இது முழுக்க முழுக்க தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில் அதற்கு ஏற்ப திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.