அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Experts committee recommends extended lockdown for TN
CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
182,681
+854 (24h)
Deaths
5,186
+1 (24h)
Recovered
87,049
47.65%
Active
90,446
49.51%

Worldwide

Cases
6,175,990
+25,507 (24h)
Deaths
371,268
+762 (24h)
Recovered
2,744,265
44.43%
Active
3,060,457
49.55%
Powered By @Sri

தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கரோனா எதிரொலியாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஈடு செய்ய செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் செலவினங்கள் 50% வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக அரசின் கூடுதல் செயலர் கிருஷ்ணன். ஐ.ஏ.எஸ். ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார சிக்கலை ஈடு செய்ய, தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்படுகிறது. செலவினக் குறைப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஏற்கெனவே உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் உரிய துறையிடம் அனுமதி பெற்று பணியாளர்களை தேர்வு செய்யலாம். அதேபோன்று அரசுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.