Penbugs
Cinema

அசுரன்..!

யதார்த்த சினிமா , வெகுஜன சினிமா என்று தனித்தனியாக இயக்குனர்களின் பெயர்களை பட்டியல் இடுவார்கள் ஆனால் இது இரண்டிலும் ஒருத்தர் பெயர் இருக்க வேண்டும் என்றால் அது வெற்றிமாறன் தான்…!

சம காலத்தில் இந்திய சினிமாவின் ஒரு உன்னதமான படைப்பாளி என்றால் அது வெற்றிமாறன் அதற்கு காரணம் அவர் கொண்ட கதைக்களங்கள் மற்றும் அதனை வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமும்தான் …!

பாலுமேகந்திரா பள்ளியில் இருந்து வந்த மாணவர் என்ற போதிலும் தன் குருநாதரின் வழியை அப்படியே பின்பற்றாமல் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர்..!

முதல் பட வாய்ப்புக்கு முன்னர் அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம் எனினும் சினிமாவின் மீது தான் கொண்ட காதலுக்காக அத்தனை இன்னல்களையும் பொறுத்துகொண்டு பொறுத்தார் பூமியாள்வார் என்பதற்கு ஏற்ப இந்திய சினிமாவை ஆண்டு கொண்டிருக்கிறார்…!

பதினைந்து ஆண்டுகளில் நான்கே படங்கள் ஆனாலும் நான்குமே அவை சார்ந்த கதைக்களத்தில் தனித்தன்மையை கொண்டவை எண்ணிக்கையை விட தரமே முக்கியம் என எண்ணியதன் விளைவாக கூட இருக்கலாம்..!

வெற்றிமாறனின் கதைமாந்தர்கள் எனில்
வட சென்னை வாழ்க்கை முறையாகட்டும் , மதுரை பிண்ணனியாகட்டும் கள யதார்தத்தை மீறாமல் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை இருப்பவர்கள் அந்த யதார்த்தம்தான் அழகியல்…!

நிறைய படங்கள் செய்து தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்து செல்ல வேண்டும் ..!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெற்றிமாறன்…!