Penbugs
Editorial News

அயோத்தியில் கட்டப்படும் ஸ்ரீராமர் கோவிலின் சிறப்பம்சங்கள்

இந்துக்களின் தெய்வமாக வணங்கப்படும் ராமனுக்கு அயோத்தியில் கட்டப்பட உள்ள கோவிலின் மாதிரி வெளியாகியுள்ளது. அயோத்தியில் மொத்தம் 67 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக கோவில் அமையவுள்ளது.

நகரா என்ற கோவில் கட்டிடக் கலை பாணியில் ராமர்கோவில் கட்டப்பட உள்ளது. இதில் 10 ஏக்கரில் கோயிலும், மீதமுள்ள 57 ஏக்கர் கோயில் வளாகமாகவும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 161 அடி உயரம், மூன்றடுக்கு, 5 மண்டபங்கள், ஒரு கோபுரத்தை கொண்டதாக இக்கோயில் வடிவமைக்கப்பட உள்ளது. இதேபோன்று இந்தக் கோயிலில் அமையவுள்ள மொத்த தூண்களின் எண்ணிக்கை 360.

300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமருக்கு கோயில் கட்டப்பட உள்ளது. பிரபல கட்டட கலை நிபுணரான சந்திரகாந்த்பாய் சோம்புரா தான், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணியின் தலைமை கட்டட கலைஞராக செயல்படவுள்ளார்.

ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் மலைக்கற்களை தவிர, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ள 2 லட்சம் கற்களும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவுள்ள ராமர் கோயிலை முழுவதுமாக கட்டி முடிக்க குறைந்தப்பட்சம் மூன்றரை ஆண்டுகள் ஆகுமென இந்தக் கட்டுமான திட்டத்தின் தலைமை கட்டட கலைஞரான சந்திரகாந்த்பாய் சோம்புராவின் மகன் ஆசிஷ் சோம்புரா தெரிவித்துள்ளார்.

Related posts

ராமர் கோவில் கட்ட இன்று அயோத்தியில் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

Kesavan Madumathy

அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!

Penbugs

Jayalalithaa favoured Ram temple but also desired mosque in Ayodhya: TN CM

Penbugs

Historic Ayodhya case verdict on November 9th, 10 30 am

Penbugs

Leave a Comment