Penbugs
Cinema

அய்யப்பணும் கோஷியும் | Movie Review

ரெண்டு நண்பர்கள் ஊருக்குள்ள
இருக்காங்க அவங்க நட்ப பார்த்து
ஊருல இருக்க எல்லோருக்கும்
பொறாமை வருது அப்படி ஒரு
புரிதலுடன் அவங்க ரெண்டு பேரோட
நட்பு சரிவர தண்ணீர் ஊற்றி வளர்த்த
செடி போல உறுதியான கட்டமைப்பில்
வளர்ந்து கொண்டிருந்தது அப்போது
ஏதோ ஒரு சின்ன மனஸ்தாபம்
அவர்களுக்குள் நிகழ்கிறது
இயற்கையாக, பிறகு அந்த மனஸ்தாபம்
சிறிது காலம் கழித்து கோபமாக
மாறுகிறது, வெகு நாள் கழித்து
பகையாக மாறுகிறது, நீண்ட வருடங்கள்
கழித்து வன்மமாக மாறுகிறது சில
நேரங்களில் இது வளர்ந்து அடுத்த
தலைமுறை வரை வாரிசு வழியில்
தொடர்ந்து கொண்டே போகும்,
இரண்டு பேருக்குள் இடையே
நடந்த ஒரு விஷயம் அவர்களின்
வைராக்கியத்தால் ஒரு தலைமுறை
தாண்டி சில உயிர்களையும் காவு
வாங்கும் அளவிற்கு மனதில் ஒரு
வன்மமாக உருவாக்கப்படும்,
இப்படி தான் வன்மம்
ஒரு மனிதனை மட்டும் அல்லாமல்
அவனை சுற்றியிருக்கும் சிலருக்கும்
சேர்த்து பகை உணர்வை விருந்தளிக்கிறது,

இப்படி ஒரு நாள் அடர்ந்த காட்டு
பகுதியின் இரவு நேரத்தில்
போதையில் காரில் தூங்கிக்கொண்டு
பயணித்து வரும் முன்னாள் ராணுவ
படைத்துறை மேலாளரை (Havildar) – ஐ
ஒரு உள்ளூர் போலீஸ்காரர் (Sub
Inspector) – மடக்கி பிடித்து அவர்
Havildar என்று தெரியாமல் தன்
அதிகாரத்தல் போதையில் இருக்கும்
அவரை அடித்து வேஷ்டியை அவிழ்த்து
அசிங்கப்படுத்துகிறார், இதற்கு பிறகு
High Influence கொண்ட அந்த Havildar –
உம் நடுத்தர குடும்பமானாலும் தன்
முந்தைய காலங்களில் முரடனாக
வளர்ந்த உள்ளூர் போலீஸ்
அதிகாரிக்கும் இடையே நடக்கும்
மனஸ்தாபம்,கோபம்,பகை,வன்மம்
என நகரும் கதை தான் இது,

இரண்டு பேருக்கு இடையே
ஒரு பகை கலந்த வன்மம் இது தான்
படத்தின் மேஜர் பிளாட், இதை வைத்து
2:55 மணி நேரம் ஒரு படத்திற்கு எப்படி
திரைக்கதை எழுதுவது மிகவும்
சவாலான ஒரு விஷயம்..?

எடுத்துக்காட்டுக்கு ” களி ”
பார்த்திருந்தால் தெரியும்,
ஒரு நாள் இரவு மலைப்பாதையில்
காசின்றி ஹோட்டலில் சாப்பிட்ட
ஒரு தம்பதி அங்கு இருக்கும் ஒரு ரவுடி
கூட்டத்தில் சிக்கி கொள்கிறார்கள்
அங்கிருந்து எப்படி கதை நகரப்போகிறது
என்பதை ஒரு இரவில் திக் திக் வகையில்
Intense ஆக கொண்டு போயிருப்பார்கள்
ஆனாலும் படத்தின் முதல் ஒரு மணி
நேரம் ரெகுலர் படமாக தான் அதுவும்
திரைக்கதையில் பயணம் ஆகும்,
ஆனால் இந்தப்படம் படம் ஆரம்பித்த
முதல் Frame – இல் இருந்து கடைசியாக ”
A Team Sachy Initiative ” – ன்னு End கார்டு
போடும் வரை ஒவ்வொரு சீன் பை சீன்
இயக்குநர் சிற்பி சிலையை செதுக்குவது
போல் பார்த்து பார்த்து நுண்ணியமாக
செதுக்கியிருக்கிறார் பெரிய டீடைலிங்
பெரிய குறியீடுகள் ஏதுமின்றி,

படத்தின் கதையை டீகோட் செய்து
ஸ்பாய்லர் ஆவதற்கு பதில் அதை
சுற்றியிருக்கும் விஷயங்களை மட்டும்
கொஞ்சம் எடுத்துரைத்து சொல்லவே
இங்கு முயற்சி செய்திருக்கிறேன்,

ஆணைகட்டி – அட்டப்பாடி இதற்கு
முன்னால் நீங்கள் விசிட் செய்திருந்தால்
உங்களுக்கு இந்த படத்தின் லொகேஷன்
சரியான தீனி என்றே சொல்லலாம், நான்
ஒரு முறை சென்றிருக்கிறேன் அந்த
ஊரின் கொள்ளை அழகை அப்படியே
ரம்மியமாக காட்சிகளில் கொண்டு
வந்திருக்கிறார்கள்,

பிஜூ மேனன் – ப்ரித்விராஜ் கதைப்படி
எதிரிகள் சரி அதற்காக படம் பார்க்கும்
நமக்கு உண்மையாகவே இவர்கள்
பரம்பரை பரம்பரையாக வன்மம்
கொண்ட குடும்பத்தில் இருந்து
வந்தவர்கள் என்று நாம் நினைக்கும்
அளவிற்கு இருவரின் உடல் மொழியிலும்
பார்வையிலும் வன்மம் ரத்தத்தில்
கலந்தது போல அப்படி ஒரு நடிப்பு, ஒரு
வித ஏழ்மை கலந்த கதாப்பாத்திரத்தில்
கொஞ்சம் வீரியம் கலந்த பெண்ணாக
அய்யப்பனின் மனைவியாக வரும் அந்த
பெண் அசால்ட் பண்ணியிருப்பார்,

ஹாப்பி எண்டிங் – ஆன கிளைமாக்ஸ்
மட்டும் வலுக்கட்டாயமாக வைத்தது
போல் இருந்தது, விக்ரம் வேதாவில்
மாதவன் – விஜய் சேதுபதி துப்பாக்கி
ஏந்திய கைகளுடன் எதிரும் புதிருமாக
நிற்பதோடு ஒரு ஓபன் எண்ட் – டாக
படம் முடியும், அப்படி ஒரு ஓபன் எண்ட்
வைத்திருந்தால் Perfect கிளைமாக்ஸ்
ஃபீல் எனக்கு வந்திருக்குமோ
என்னமோ..?

அந்த பாட்டியின் குரலில் ஆரம்பிக்கும்
“கலக்காத” பாடலில் ஆரம்பிக்கும்
படத்தின் டைட்டில் கார்டு இசை கடைசி
கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் வரும்
முண்டூர் மாடன் பிஜிஎம் வரை அதகளம்
செய்திருக்கிறார் இசை அமைப்பாளர்
ஜேக்ஸ் பிஜாய்,

மாஸ் சீன்கள் என்றால்
மீசையை முறுக்கி கொண்டு
ஸ்லோ மோஷனில் கண்ணாடியை
மாட்டிக்கொண்டு மூன்று நிமிடம்
நடந்து வருவது என இன்றும்
கையாளப்பட்டு வரும் பழைய மாஸ்
சீனுக்கான யுக்தியை இயக்குநர்
உடைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்,
பிஜூ மேனனும் ப்ரித்திவிராஜும்
ஒவ்வொரு காட்சியின் பின்புலத்திலும்
இது தான் மாஸ் இப்படி தான் மாஸ்
காட்சிகளில் உடல் மொழிகள் இருக்க
வேண்டும் என கிளாஸ் எடுக்கின்றனர்
வளரும் தலைமுறை நடிகர்களுக்கு,

புதிதாக படம் இயக்க விரும்புபவர்கள்
திரைக்கதை எழுத்தாளர்கள்
இந்த படத்தின் திரைக்கதையை
உங்கள் Reference – ற்காக யூஸ்
செய்து கொள்ளும் அளவிற்கு
ஒரு ஒர்த் கன்டென்ட் பிளாட் இப்படம்,

கோபம் கலந்த பகை வன்மமாக
மனிதர்களுக்கு இடையே மாறும்போது
அந்த வன்மம் நம்மை சுற்றியிருக்கும்
நமது உறவுகளுக்கு எத்தனை கஷ்டத்தை
கொடுக்கும் என்பதை கொஞ்சம்
யோசித்து பார்த்தாலே வன்மத்தின்
வீரியம் பாதி குறைந்து விடும்,

கோபம் நல்ல விஷயம் அது வன்மமாக
மாறும் போது தான் மனிதனுக்கு உள்ளே
இருக்கும் மிருகம் வெளியே வருகிறது,

கோபத்தில் மனிதனுக்குள்
தூங்கிக்கொண்டிருக்கும் மிருகம் கூட
அவனின் வன்மத்தினால் ஆத்திரமாக
மாறி பல உயிர்களை வேட்டையாடும்
இதை தான் நா.முத்துகுமார் அழகாக
சொல்லியிருப்பார்,


உனக்குள்ளே மிருகம்
தூங்கிவிட நினைக்கும்
எழுந்து அது நடந்தால்
எரிமலைகள் வெடிக்கும்,


இப்படி வன்மத்திற்கு பல
உதாரணங்களை எடுத்து முன்
வைத்துக்கொண்டே போகலாம்,

சீட் எட்ஜ் திரில்லர் வகையில் இல்லாமல்
ஒரு நார்மல் – லான Engaged திரில்லர்
வகையறாவில் மலையாள வாசத்துடன்
ஒரு Gift Pack செய்யப்பட்ட ஒரு
என்டர்டைன்மெண்ட் படமாக
அமைத்திருக்கிறது,

*
அய்யப்பனும் கோஷியும் –

Packaged Gift From Sachy & Team !! ❤️

Related posts

குடும்பத்துடன் இணைந்தார் நடிகர் பிரித்விராஜ்

Kesavan Madumathy

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் | Movie Review

Penbugs

அல்போன்ஸ் தீட்டிய காதல் ஓவியம்

Shiva Chelliah

Varane Avashyamund (Groom Wanted) Movie Review

Shiva Chelliah

Trance | Fahadh Faasil

Penbugs

Naan Sirithaal Review: Gives you giggles here and there

Penbugs

Malayalam film producer Alwyn Antony accused of sexual assault

Penbugs

Drishyam 2 [Prime Video] (2021): A sharp, novelistic thriller that celebrates suspense

Lakshmi Muthiah

Breaking: Writer Director Sachy passes away

Penbugs