Penbugs
Editorial/ thoughts

Ban Banner!

இப்பலாம் எதுக்கு எடுத்தாலும் பேனர் கலாச்சாரம் பரவிட்டு இருக்கு காது குத்தறதுல இருந்து சினிமா படம் ரிலீஸ் , அரசியல் என எல்லாத்துக்குமே பேனர்தான் ..!

அரசியலில் பொறுத்தவரை பேனர் வைக்கிறது அவங்க தலைமைக்கு அவங்க காட்டுற விசுவாசமாக பார்க்கிறாங்க தலைமை விரும்புதோ இல்லையோ அதிகமா பேனர் வைச்சா கட்சியில் பொறுப்பு , எதனா பதவிக்கு சீட் வரும் என்ற தவறான எண்ணத்தில் அரசியல் கட்சி தலைவரின் வருகையின்போதோ இல்ல பிரசார கூட்டம் மற்றும் பிறந்தநாள் விழானு எல்லாத்துக்கும் ரோடு மறையும் அளவிற்கு வைக்கிறது நிறைய பொதுமக்களை நேரடியாக பாதிக்கிறது .

கண்டிப்பாக இதனை எல்லா கட்சியுமே முழுவதும் தவிர்க்க வேண்டும் அதற்கு அந்த அந்த அந்த கட்சியை சார்ந்த தலைவர்கள்தான் முன்னெடுத்து செல்ல வேண்டும் இதில் ஆளுங்கட்சி , எதிர்கட்சி ,சுயசாதி கட்சினு எதுவும் பார்க்காமல் நீங்க பொதுமக்களா இருந்து யோசிச்சு பார்த்து இதனை முயற்சிக்கவும் …!

வெறும் அரசியல்‌ பேனர் மட்டும் இல்லை புது பட ரிலிஸ்களின்போது தன் விருப்ப நடிகர்களுக்கு வைக்கும் பேனர்களின் போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன எனவே சினிமா ரசிகர்களும் பேனர் செலவினை ஆக்க பூர்வமான வழியில் செலவு செய்யலாம்…!

கோர்ட் தடை உத்தரவு போட்டும் எல்லா கட்சியும் பேனர் வைச்சிட்டுதான் இருக்காங்க காவல்துறை கொஞ்சம் கண்டிப்புடன் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

பேனர்கள் வைப்பதில் இல்லை உங்களின் கௌரவம் …!

Pic: The Quint