Penbugs
Cinema

Body Bhaskar | Pilot Film | Review

ரொம்ப நாளாக தன்னோட உழைப்ப மீரா மஹதி அவர்கள் Body Bhaskar என்ற படம் மூலமா வெளி உலகத்துக்கு காமிக்கணும் அப்டின்னு முயற்சி செய்து, பல தடைகளை தாண்டி நேத்து தான் இந்த குறும்படம் பொது மக்கள் காட்சிக்கு காட்டப்பட்டது..

எங்களுக்கும் அழைப்பு வந்தது.. அதை அவரின் அன்பிற்கினங்க ஏற்று படத்தை கண்டு களித்தோம்..!

பொதுவா குறும்படம் காட்சினா அதிகமா மக்கள் வர மாட்டாங்க.. ஆனா இங்க 3 காட்சியும் “ஹவுஸ்புல்” அதுவே படக்குழுவினருக்கு ஒரு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை..!

படத்தை பற்றி, ஒரு ஊர்ல தவுலத்தா இருக்க ஒரு ஆம்பள… அதே ஊர்ல கொஞ்சம் அழகும்.. ரொம்ப திமிரும் இருக்க ஒரு பொண்ணு… இவங்க ரெண்டு பேரும் காதல் அப்டிங்குற குழில உழுந்தாங்களா?? இல்ல தனக்கு தானே மண் அள்ளி போட்டுக் கிட்டாங்களா?? அத வெச்சி தான் கதை நகருது..!

காதல பொறுத்த வரையில் பொய் சொன்னாதான் பிரச்சனை வரும்னு இல்ல.. உண்மைய மறைச்சாலும் கண்டிப்பா பெரிய பிரச்சனை வரும் அதை சமாளிக்கணும் இல்லனா சாஷ்டாங்கமாக கால்ல உழுந்துடனும் இத தான் அருமையா இயக்குனர் விவரிச்சிருக்காரு…!

கதை நாயகன் சாவு Event Management Company Owner ஆகவும், அவருக்கு ஒரு பொண்ணு உஷாரான என்ன என்னலாம் அலப்பறை நடக்கும் என்பதையும் நகைச்சுவை கலந்து நடித்துள்ளார்..!

கதை நாயகி தனக்கு குடுத்த பகுதிய அருமையா நிரப்பி இருக்காங்க.. படத்தோட முக்கியமான பணிய ஜார்ஜ் அவர்கள் சிறப்பாக செய்துள்ளார்..!

இந்த படத்துல முக்கியமானவர் இசையமைப்பாளர் மரியா ஜெரால்டு தான்..! அவரோட அந்த பின்னணி இசை மற்றும் சாவுக்கிராக்கி பாடலும் மனதில் இருந்து நீங்க கால அவகாசம் கேட்கிறது..!

படத்தொகுப்பு மற்றும் கேமரா பதிவுகள் அழகாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருப்பது படத்தின் நேர்த்தியை காட்டுகிறது..!

மொத்தத்தில் சாவு வீட்டுக்கு போனா அழுகையோட தான் திரும்பி வருவாங்க.. ஆனா இந்த Body Bhaskar போய்ட்டு வெளிய வரும் போது சிரிச்சிக்கிட்டே சந்தோசமா வெளிய வரலாம்…!

இந்த படம் பெரிய திரையில் வந்து பெரிய அளவில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்…!

Related posts

நடிகை ஸ்ரீப்ரியாவின் குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்!

Kesavan Madumathy