பூம் பூம் பும்ரா..!

இந்திய கிரிக்கெட் உலகம் எப்பொழுதும் பேட்ஸ்மேன்களை மட்டுமே ஹீரோவாக சித்தரிக்கும் …!

பேட்ஸ்மேன்களின் தாக்கம் எத்தகையது என்றால் வீதிகளில் கிரிக்கெட் விளையாடுவோர் கூட நீங்க பேட்ஸ்மேனா, பவுலரா என்று கேட்டால் பெரும்பான்மையோனாரின் பதில் பேட்ஸ்மேன் என்பதே …!

அத்தகைய பாராம்பரியம் கொண்ட இந்தியாவில் ஒரு பந்து வீச்சாளருக்காக அதுவும் ஒரு வேகப்பந்து வீச்சாளுருக்காக ஒரு‌ பெரிய ரசிக கூட்டம் உருவாக்கி வைத்துள்ளதே பும்ராவின் மிகப்பெரிய சாதனை …!

இவரின் பவுலிங் ஆக்சனை பல குழந்தைகள் இன்று வீதிகளில் வீசிக் கொண்டிருக்கின்றனர் …!

பும்ரா ஐபிஎல்லில் களம் இறங்கிய பின் அவரின் வித்தியாசமான ஆக்சன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அதே நேரத்தில் இந்த பௌலிங் ஆக்சனால் அடிக்கடி காயம் ஏற்படலாம் , கைகளை இப்படிப் பயன்படுத்தினால் பந்தினை ஸ்விங் செய்ய முடியாது, டெஸ்ட் போட்டிகளில் ஆட தகுதியில்லை, ரன்அப் ரொம்ப குறைந்த தூரம் உள்ளது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன .

தன்‌ மீது சொல்லப்படும் நெகட்டிவை பாஸிட்டிவ்வாக மாற்றுவதுதான் ஒரு உலகத்தர வீரருக்கான அடையாளம் பும்ரா அதைத்தான் செய்திருக்கிறார்..!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்குப்பிடிக்க முடியாது என்றவர்களுக்கு, ஹாட்ரிக் ..!

தொடர்ந்து நன்றாக பந்து வீச முடியாது என்று சொன்னவர்களுக்கு உலகில் தலைசிறந்த பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடம் ..!

அற்புதமான யார்க்கர்கள் ,தன் கைகளைப் பார்த்து பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத அளவுக்கு வேரியேஷன்கள் , இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என அனைத்து விதமான பந்துகளையும் வீசி எதிரணி வீரர்களை திணறடித்து வருகிறார் பும்ரா…!

வலைப்பபயிற்சியின் போது பந்து வீசும்போதுகூட அதனை சர்வதேச போட்டியாக நினைத்துதான் பந்து வீசுகிறேன் என பும்ரா கூறியது அவரின் கிரிக்கெட் அர்ப்பணிப்பை காட்டுகின்றது ..!

கிரிக்கெட் வல்லுநர்கள் ராக்கெட் அறிவியல், மேக்னஸ் எஃபெக்ட் போன்ற இயற்பியல் விதிகளை கொண்டு பும்ராவை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் ஆம் இந்திய கிரிக்கெட்டின் அதிசய குழந்தை “பும்ரா”

பும்ரா குறித்து தோனி கூறியது :

பும்ராவின் வெற்றிக்கு அவரின் வித்தியாசமான பவுலிங் ஆக்சன் அவருக்கு நிச்சயம் கை கொடுக்கிறது ஆனால் அது மட்டுமே முழு காரணம் இல்லை தனது பந்து வீச்சை மெருகேற்றி கொள்ள அவர் செய்யும் பயிற்சிகள் அசாத்தியமானது அதுவே அவரின் வெற்றியின் ரகசியம்…!

இன்னும் பல பும்ராக்களை அவர் உருவாக்க வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் “பூம் பூம் பும்ரா “