Penbugs
Coronavirus

தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மையம் துவங்க சென்னை மாநகராட்சி அனுமதி

கொரோனா நோயாளிகளை, படுக்கை வசதி உடைய மருத்துவமனைகளுடன் அந்த அந்த பகுதிகளில் தங்க வைத்து சிகிக்சை அளிப்பதற்காக கொரோனா கட்டுப் பாட்டு மையங்கள் துவங்கப்பட்டுள்ளது.

இதற்கு தனியார் மருத்துவமனைகள் அல்லது விடுதிகள் உடைய விருப்பமுள்ளவர்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இது குறித்த தமிழக அரசின் செய்தி :

நோவல் கொரோனா வைரஸ் காய்ச்சல் (COVID – 19 ) உலகமெங்கும் பரவியுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகமெங்கும்
அவசர நிலையினை (Public Health Emergency of International Concern (PHEIC)) பிரகடனப்படுத்தியுள்ளது.

மேலும் கட்டுப்படுத்தக்கூடிய தொற்று
நோயாகவும் (Controllable Pandemic) அறிவித்துள்ளது.

தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்
நோவல் கொரோனா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தற்போது அதிகரிக்க
தொடங்கியுள்ள காரணத்தினால் அதாவது நாளொன்றுக்கு 2000 முதல் 2500
நபர்கள் வரை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 12 கொரோனா நோய் பரிசோதனை மையங்கள் ( (Screening Centres) மூலம் உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவமனை சிகிச்சை, கோவிட் பராமரிப்பு மைய சிகிச்சை அல்லது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளும்
வசதி ஆகிய முறைகளில் ஒரு வழியில்
கொரோனா தொற்று கண்டவர்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி 14 கோவிட் பாதுகாப்பு மையங்களில் 11,000 படுக்கைகளுடன் மிக குறைந்த தொற்று
உள்ளவர்களுக்கும் மற்றும் அரசு மருத்துவமனை மூலம் பரிந்துரைக்கப்படுவர்களுக்கும் போதுமான மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை
அளிக்க வசதி ஏற்படுத்தியுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் மற்றும் கொரோனா தொற்று
கண்டவர்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே சிகிச்சை பெரும் பொருட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விருப்பமுள்ள மற்றும் சிகிச்சை அளிக்க போதிய உட்கட்டமைப்பு வசதியுள்ள தனியார்
மருத்துவமனைகள் தனியாகவோ அல்லது பிற தங்கும் விடுதிகளுடன் (Covid Care
இளைந்தோ கொரோனா நோய் பாதுகாப்பு மையங்கள் (Centres) ஆரம்பிக்க அனுமதி அளிக்கிறது.

அவ்வாறு கொரோனா நோய் பாதுகாப்பு மையங்கள் (Covid Care
Centres) தொடங்க விருப்பமுள்ள மருத்துவமனைகள் படுக்கை வசதி,
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடுதல் மாநகர நல அலுவலர் (தலைமையகம்)(9445026050) அவர்களை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

Leave a Comment