சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
நாள்தோறும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால், சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 13,941 ஆகக் குறைந்துள்ளது.
சென்னையில் இதுவரை 89,561 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 73,681 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்து 1939 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் சென்னையில் சுமார் 12 ஆயிரம் மாதிரிகள் கொரோனா சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த நோயாளிகளில் 58.22% பேர் ஆண்கள், 41.78% பேர் பெண்கள் ஆவர்.
சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மண்டலம் வாரியாக (வியாழக்கிழமை நிலவரம்)
மண்டலம் எண்ணிக்கை
- திருவொற்றியூா் 450
- மணலி 206
- மாதவரம் 354
- தண்டையாா்பேட்டை 723
- ராயபுரம் 933
- திரு.வி.க.நகா் 1,131
- அம்பத்தூா் 926
- அண்ணா நகா் 1,656
- தேனாம்பேட்டை 1,176
- கோடம்பாக்கம் 2,029
- வளசரவாக்கம் 701
- ஆலந்தூா் 566
- அடையாறு 1,157
- பெருங்குடி 403
- சோழிங்கநல்லூா் 331