Penbugs
CinemaInspiring

செவாலியே சிவாஜி கணேசன் – நினைவு நாள்

நடிப்பிற்கு இலக்கணம் என்று நாம் மேற்கோள் காட்ட துவங்கினால் நம் கண் முன் முதலில் வரும் முகத்தின் பெயர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்.

ஏனெனில் சிவாஜியின் முகம் மட்டும் நடிக்காது அவரின் நகம் கூட நடிக்கும் என்று கூறும் அளவிற்கு தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மாமனிதர் அமரர் சிவாஜி கணேசன்.

நல்ல குரல்வளம், தெளிவான தமிழ் உச்சரிப்பு , உணர்ச்சி பூர்வமான நடிப்போடு எந்த பாத்திரத்தை தேர்வு செய்கிறாரோ அந்த பாத்திரத்தின் தன்மைக்கேற்ப தன்னை முற்றிலுமாக மாற்றிகொள்ளும் அவரது அர்ப்பணிப்பு ஆகியவைதான் அவரை இன்றும் நாம் பேசிக் கொண்டிருக்க காரணமாக இருக்கின்றது ‌.

சிவாஜியை வைத்து அதிக படங்களை இயக்கியவர்கள் ஏ.சி.திருலோகசந்தர் (20 படங்கள்), ஏ.பீம்சிங் (17 படங்கள்) .பீம்சிங் – சிவாஜி – ப தலைப்பு வரிசை படங்கள் மிகவும் பிரபலமான ஒன்று‌.

சிவாஜியின் தனது நடிப்பை மிகவும் மிகைப்படுத்தி காண்பிக்கிறார் என்ற விமர்சனம் வைப்போருக்கான பதிலாக சில நிகழ்வுகள் இங்கே;

ஒரு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் சிவாஜியும் ,சோவும் நடித்து கொண்டிருந்தனர் அப்போது சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பை பார்த்த சோ சிரித்துவிட்டாராம் இதுலாம் சாமானியனுக்கு எப்படி போய் சேரும் என்ற விமர்சனத்தையும் சிவாஜியிடம் வைத்தார். படம் முடிந்து திரையிடப்பட்ட போது சோவும் சிவாஜியும் திரை அரங்கினில் படத்தை காணும்போது எந்த காட்சியை விமர்சனம் செய்தாரோ அந்த காட்சிக்கு மக்கள் அழுது கொண்டிருந்தனராம் .


தங்கப்பதக்கம் சூட்டிங் ஸ்பாட் :

இயக்குநர் மகேந்திரனின் கதை வசனத்தில் பி‌.மாதவன் டைரக்ட் செய்த படம் . அந்த படத்தின் போது மகேந்திரன் சிவாஜியிடம் உங்கள் நடிப்பை அனைவரும் மிகைப்படுத்திய நடிப்பு என்று சொல்வதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று கேட்க அதற்கு சிவாஜி

இதுவரைக்கும் ஒரு‌ டைரக்டர் என்ன சொல்றானோ அது மட்டும்தான் நான் நடிப்பேன் அந்த டைரக்டர் ஒரு பென்சிலை கொண்டு கையெழுத்து போட சொன்னால் அதுக்கு ஏற்ற மாதிரியும் , அதே டைரக்டர் ஒரு பால் பெயிண்ட் பென் கொண்டு கையெழுத்து போட சொன்னால் அது மாதிரியும் , பெயிண்ட அடிக்கும் சிறிய பிரஷ்ஷாக கொண்டு வந்தால் அதற்கு ஏற்றவாறு கையெழுத்தும் ,பெரிய சுண்ணாம்பு அடிக்கும் பிரஷ்ஷாக இருந்தால் அதற்கு ஏற்றமாதிரிதான் கையெழுத்து வரும் இங்க என் கையெழுத்தை நான் முடிவு செய்வதை விட என்னை இயக்கும் டைரக்டர்களே முடிவு செய்கின்றனர் என்று கூறினாராம். அதே படத்தில் அவர் மனைவி இறந்தபின் வரும் காட்சியில் மகேந்திரன் கொடுத்த பேனாவுக்கு ஏற்ற கையெழுத்தை போட்டு இருப்பார் சிவாஜி (கையெழுத்து = நடிப்பு ).

சிவாஜி ஏன் இந்த உச்சம் பெற்றார் என்பதற்கு சில உதாரணங்கள் உண்டு .

தாவணி கனவுகள் படப்பிடிப்பு சிவாஜி கொடி ஏத்தும் சீன் படமாக்க வேண்டிய நாள் சிவாஜியின் கால்ஷீட் டைம் ஏழு என்று சொல்லப்பட சரியாக ஏழு மணிக்கு வந்தாராம் (வித் மேக் அப் ) அன்று பாக்யராஜ் பத்து நிமிசம் முன்ன போகவே கொடி கம்பத்தின் மற்ற‌ பகுதியை சும்மா கேமராவில் சூட் செய்து கொண்டிருந்தார்.

சிவாஜிக்கு கோபத்துடன் பாக்யராஜை கூப்பிட்டு நான் வந்த அப்பறம்தான ஷாட் எடுக்கனும் நீ சொன்ன டைமுக்கு நான் வந்துட்டேன் இல்ல ஏன் முன்னாடி ஆரம்பிச்சனு கத்திட்டு சொன்னாராம் நீ பாட்டுக்கு நான் வர்றதுக்கு முன்ன ஆரம்பிச்சிட்டா சுத்தி நிக்கறவன் என்ன நினைப்பான் சிவாஜி லேட் அதான் டைரக்டரே ஆரம்பிச்சிட்டாங்கனு பேசுவான் என் தொழில் எனக்கு முக்கியம் எவ்ளோ சீக்கிரம் வேணா வரேன் ஆனா என் ஷாட் எடுக்கிறதுனா நான் வந்த அப்பறம்தான் ஆரம்பிக்கனும் என்று உறுதிமொழி வாங்கி கொண்டாராம் .

சிவாஜி அளவிற்கு டைரக்டரை மதித்தவரும் யாருமில்லை .படத்தில் நடிக்க சம்மதிக்கும் வரைதான் ஆயிரத்தெட்டு கேள்விகள் நடிக்க வந்துவிட்டால் டைரக்டருக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து விடுவார்.

முதல் மரியாதை முதல்நாள் சூட்டிங் ஸ்பாட் :

சிவாஜி மேக்கப் போட்டு வந்து அமர்ந்து கொண்டிருந்தார்‌.அந்த மேக்கப் பாரதிராஜாவிற்கு சுத்தமாக பிடிக்காமல் போகவே சிவாஜி காட்சிகளை எடுக்காமல் எப்படி சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தாராம்‌.இதை உணர்ந்த சிவாஜி ராசா இங்க வா என்ன உன் பிரச்சினை என்று கேட்டு பாரதிராஜா அண்ணே இந்த புருவம், விக்லாம் இல்லாம அப்படியே வாங்கனே அதான் எனக்கு வேணும் என்று கூற அது போதுமா உனக்கு நிச்சயமாக என்று கேட்டு அப்படியே வந்து நின்னாராம்‌. அத்றகு அடுத்து அண்ணே செருப்புலாம் போட கூடாது என்று கேட்க சூட்டிங் நடக்கும்போது (அவர் காட்சி இல்லாத போதும் ) செருப்பே அணியாமல் இருந்தாராம் ‌இதுதான் நடிகர் திலகம் ‌.

மண்ணுக்குள் வைரம் டைரக்டர் மனோஜ் குமாரின் முதல் படம் : சூட்டிங் கிளம்பிய சிவாஜி வழியில் அவரை காண நிறைய ரசிகர்கள் காத்து கொண்டிருந்ததால் அவர்களைலாம் சந்தித்து விட்டு மிகவும் சோர்வாக வந்து சேர்ந்தார்‌ .

டைரக்டர் மனோஜ்குமார் : அண்ணே டயர்டா இருக்கீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கொள்கிறீர்களா ?

சிவாஜி : (அனைவரின் முன்னிலையில் )

இங்க வா நீ ,இந்த படத்திற்கு நீதான் டைரக்டர் உனக்கு எத்தனை மணிக்கு வரனும் சொல்லு நான் வரேன் நடிக்கிறேன், என் வேலை நடிக்கறது அதுக்குதான் நான் காசு வாங்கறேன் எனக்கு நீ ஆர்டர் போடுடா நான் வரேன் ஏன்னா உனக்குதான் தெரியும் படத்தை எப்படி எங்க எடுக்கனும் என்று சொல்லி நடித்து கொடுத்தார்.அவரின் வயதுக்கும் சரி ,அவரின் அனுபவத்திற்கும் சரி இளம் டைரக்டருக்கு இந்த அளவிற்கு மரியாதை தர வேண்டிய அவசியமில்லை ஆனாலும் ஒரு டைரக்டரை அவர் எவ்வாறு அணுகினார் என்பது இந்த கால நடிகர்களுக்கு ஒரு பெரிய பாடம்‌.

பாலா நந்தா கதையை சிவாஜியிடம் (ராஜ்கிரண் கேரக்டர்) சொல்லும்போது

சிவாஜி : கதை யாருப்பா
பாலா : நான்தான் அய்யா
சிவாஜி : வசனம் அப்ப
பாலா : அதுவும் நான்தான் அய்யா
சிவாஜி : சரி டைரக்டர் யாரு
பாலா : எல்லாமே நான்தான் அய்யா

இப்படி எல்லாம் நீயே பண்ணிட்டா வசனம் எழுதறவன் , கதை எழுதறவனுக்குலாம் வருமானம் இல்லமா போய்டும் யா அதனால் பகிர்ந்து வேலை செய் என்று அறிவுரை சொன்னதாக பாலா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சிவாஜியின் எண்ணற்ற படங்களுக்கு நான் ரசிகன் நான் மிகவும் ரசித்த சில படங்கள் :

அந்த நாள்,
தில்லானா மோகனாம்பாள்,
வியட்நாம் வீடு,
திருவிளையாடல்,
வீரபாண்டிய கட்டபொம்மன்,
பாசமலர்,
உயர்ந்த மனிதன்,
ராஜபாட் ரங்கதுரை,
மூன்று தெய்வங்கள்,
நவராத்திரி,
தங்க பதக்கம்,
திருமால் பெருமை,
வசந்த மாளிகை,
கௌரவம்,
படிக்காதவன்,
முதல் மரியாதை,
தேவர் மகன்,
படையப்பா,
ஒரு‌ யாத்ரா மொழி .

நடிகர் திலகத்தின் நினைவுநாள் இன்று…!

Related posts

செவாலியே சிவாஜி கணேசன்

Kesavan Madumathy

Leave a Comment