Penbugs
Cinema

சிட்டிசன் – இது கதையல்ல சரித்திரம் …!

2001 அஜித் கேரியரில் முக்கியமான வருடம் . காதல் மன்னனாக இருந்த அஜித் முழு ஆக்சன் ஹீரோவாக மாறிய வருடம் அந்த வருடத்தில் தீனா , சிட்டிசன் , பூவெல்லாம் உன் வாசம் என மூன்று ஹிட் படங்கள் அதிலும் தீனா ,சிட்டிசன் அஜித்தை பி அண்ட் சி என சொல்லப்படும் நகர பிண்ணணியை விட்டு தமிழகம் முழுவதும் கொண்டு சென்றது …!

அஜித்தின் மிக வித்தியாசமான கெட்-அப்கள், சாபு சிரிலின் செட்டிங், ரவி கே. சந்திரனின் கேமரா, தேவாவின் தூள்கிளப்பும் இசை , பாலகுமாரனின் வசனம் என்று எல்லாம் சேர்ந்து பக்கா கமர்சியல் கதையாக சிட்டிசன்’ படம் வெளியானது ….!

படத்தின் முக்கியமான காட்சியான கோர்ட் காட்சியில் ஒரு வித்தியாசமான அஜித்தை பார்க்க முடிந்தது ‌.தனது ஊரான அத்திப்பட்டி அழிக்கப்பட்ட கதையை மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு கூறுவார். அந்தக் காட்சியில் அஜித், தனது சிறப்பான நடிப்பைக் கொடுக்க முயற்சி செய்திருப்பார். “நான் தனி ஆள் இல்ல”, “அத்திப்பட்டி”, “இது கதையல்ல கருப்பு சரித்திரம்… ரத்தம் உறையும்படியான ஒரு நெருப்பு காவியம்”, என உணர்ச்சி மிகுதியில் அவர் பேசும்போது அஜித்தின் குரல் உடைந்து சற்று வித்தியாசமான உச்சரிப்பை தந்து இருப்பார் தல ….!

அதுவரை அஜித்தின் தமிழ் உச்சரிப்பு குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன அதை உடைக்க அஜித்திற்கு இந்த படம் ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது ‌. ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அஜித்தின் நடிப்பு நன்றாக பேசப்பட்டது …!

இன்று தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் அஜித்திற்கு சிட்டிசன் படமும் ஒரு விதைதான்…!