கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல-பிரதமர் மோடி

CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
138,536
+0 (24h)
Deaths
4,024
+0 (24h)
Recovered
57,692
41.64%
Active
76,820
55.45%

Worldwide

Cases
5,497,650
+3,195 (24h)
Deaths
346,675
+241 (24h)
Recovered
2,301,376
41.86%
Active
2,849,599
51.83%
Powered By @Sri

உலகம் கடந்த 4 மாதமாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் அன்பிற்குரியவர்கள் சிலரை பறிகொடுத்துள்ளோம்

கொரோனா என்ற ஒரு வைரஸ் எல்லோரது வாழ்க்கையும் புரட்டிப் போட்டுள்ளது

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு மனித குலத்திற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது

ஒட்டுமொத்த உலகமுமே கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகிறது

நம்மை, நாமே காப்பாற்றிக் கொண்டு, கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல

நாம் இதற்கு முன்பு, இதுபோன்ற பிரச்சினையை கேள்விபட்டதோ, பார்த்ததோ இல்லை

கொரோனா பாதிப்பால் முக்கியமானதொரு வாய்ப்பு இந்தியாவுக்கு வந்துள்ளது

கொரோனா பாதிப்புக்கு முன், பிபிஇ கிட்டுகள், என்-95 மாஸ்குகளை இந்தியா தயாரித்திருக்கவில்லை

நாள்தோறும் 2,00,000ற்கும் மேல் பிபிஇ கிட்டுகள், என்-95 மாஸ்குகளை தயாரிக்கிறோம்

உலகம் முழுவதும் 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

உலக நாடுகளுக்கு நம்பிக்கையின் ஒளியை, இந்தியா வழங்கியுள்ளது

உலகம் ஒரு குடும்பம் என்பதில் இந்தியா நம்பிக்கையும், உறுதியும் கொண்டுள்ளது

இந்தியா தற்சார்புடன் இருப்பது என்பது, சுயநலத்துடன் இருப்பதாக கூறமுடியாது

இந்தியா தனது கொள்கைகளால் உலகையே மாற்றியிருக்கிறது

இந்தியாவின் மருந்தால், உலகம் முழுவதும் பல நாடுகளில் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன

இந்தியா தற்போது வளர்ச்சியின் பாதைக்குத் திரும்பியுள்ளது

இந்தியா சுயசார்புடைய தேசமாக 5 தூண்கள் தேவையாகும்

உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு “யோகா” ஆகும்

இந்தியாவின் வளர்ச்சி, உலக நாடுகளின் வளர்ச்சிக்கு வித்திடும்.
தற்சார்புக்கு, பொருளாதாரம், உள்கட்டமைப்பு, ஜனநாயகம், நவீன தொழில்நுட்பம், எரிசக்தி ஆகிய 5 தூண்கள் அவசியம்

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி நிவாரண நிதி வழங்கப்படும்

தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினர் நலனுக்காக ரூ.20 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்

இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு

ரூ.20 லட்சம் கோடி நிவாரண நிதி பற்றி, நாளை, மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளிக்கும்

வலிமையான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது

நாட்டின் ஜி.டி.பி.யில் 10% அளவு நிதி கொரோனாவை எதிர்த்துப் போராட பயன்படுத்தப்படும்

ஜன்தன், ஆதார் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் தற்போது நமக்கு உதவுகிறது

உலக நாடுகளுடன் போட்டியிட இந்தியா சுயசார்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது

நாட்டில், கொரோனா பாதிப்பு முக்கிய உற்பத்தித் துறைகளை ஆட்டங்காண வைத்திருக்கிறது

பொருளாதார சீர்திருத்தங்களை மேலும் விரிவுப்படுத்த வேண்டியது அவசியமாகும்

மக்களின் உள்ளார்ந்த சக்தியை கொரோனா பாதிப்பு வெளிக்காட்டியிருக்கிறது

உள்ளூர் சந்தைகள், அவற்றிற்கு தேவைப்படும் பொருட்களின் விநியோகத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்

அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும், ஒரு காலத்தில் உள்ளூர் நிறுவனங்களாகவே இருந்தன

முறையான முயற்சி இருந்தால் உள்ளூர் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களாக மாறும்

உள்ளூர் தயாரிப்பு பொருட்களை அனைத்து இந்தியர்களும் பெருமையுடன் வாங்க வேண்டும்

கொரோனா பெருந்தொற்று நீண்ட காலம், நம்முடன் இருக்கும்

கொரோனாவிலிருந்து தப்பிக்க, முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

நாட்டின் 4ஆவது முறையாக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு, மற்றவற்றிலிருந்து வித்தியாசமாக இருக்கும்

மாநில அரசுகளின் பரிந்துரைப்படி, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்

ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து வருகிற 18ஆம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும்