Penbugs
Cricket Inspiring Men Cricket

Dada For Life!

தோனிக்கும் தாதாக்கும் சேர்த்து
ஒரு பிறந்தநாள் ஆர்டிக்கள்
எழுதி பதிவு செஞ்சாச்சு ஆல்ரெடி,

சில நண்பர்கள் தாதா பிறந்தநாள்
ஆர்ட்டிக்கள் தனியா ஒன்னு எழுதுனா
நல்லா இருக்கும்ன்னு கேட்டாங்க,

போன வருஷம் தாதா என்னோட
வாழ்க்கையில எவ்வளவு முக்கிய
பங்கு வகிச்சாருன்னு எழுதியிருந்தேன்,

இதுவரைக்கும் நான் எழுதுன
ஆர்ட்டிக்கள்களிலேயே அதிக ரீச்
கிடைத்தது அதற்கு தான்,

நான் எவ்வளவு பெரிய தாதாவின்
வெறியன் என்பதை யாரும் தெரிஞ்சுக்க
விரும்பினால் என்னுடைய சென்ற வருட
பதிவை படிக்கலாம்,

அதனுடைய லிங்க் இதோ,

https://m.facebook.com/story.php?story_fbid=1089239247913283&id=100004816538812

எப்பவுமே தாதாவ பொறுத்தவர
எனக்கு எமோஷனல் கனெக்ட் தான்,

So, இதுவரைக்கும் யார்கிட்டயும்
சொல்லாத ஒரு விஷயத்த இங்க
எழுதுறேன்,

இது முழுக்க முழுக்க என்னுடைய
தனிப்பட்ட என் வாழ்க்கையில்
நடந்த ஒரு பேரிடர் சம்பவம்,

அன்று ” ஜூலை 8, 2004 “

நான் ஏழாம் வகுப்பு படித்து வந்தேன்
அது ஒரு வியாழக்கிழமை தினம்,

சச்சின் அவுட் ஆனா டிவிய
ஆஃப் செய்யுற காலம் அது,
ஆனா அப்போவே தாதா
அவுட் ஆனா தான் அந்த இடத்தைவிட்டு
அழுதுட்டே எந்திருச்சு போவேன் நான்,

ஒரு வேள அன்னக்கி தாதா
பட்டைய கெளப்புனா அன்னக்கி
எங்க ஏரியால என்னோட சவுண்ட்
தான் அதிகமா இருக்கும்,

ஒரு கர்வம் இருக்கும்
எல்லாரும் சச்சின் சச்சின் ன்னு
ஒரு பாதையில போனப்போ
நான் மட்டும் தாதா தாதா – ன்னு
சுத்திட்டு இருப்பேன் அப்போ,

அன்னைக்கும் அப்படி தான்,

வழக்கம் போல தாதா பிறந்தநாள்ன்னு
ஸ்கூல்ல பசங்க கிட்ட அவர பத்தி பேசிட்டு
லஞ்ச் பிரேக்ல ஸ்கூல் பக்கத்துல இருக்க
நண்பன் வீட்டுல கிரிக்கெட்
விளையாண்டுட்டு ஸ்கூல் கிட்ட இருக்க
கடையில சாயங்காலம் போடுற சூடான
புரோட்டா எல்லாம் தாதா பிறந்தநாள் காக
பசங்களுக்கு எல்லாம் டிரீட் வச்சுட்டு
ஆடி பாடி கொண்டாடிட்டு இருந்தோம்,

அவர் அடிச்ச 183 – ஸ்கோர்,
நாட்வெஸ்ட் தொடர்ல சட்டைய கழட்டிட்டு
சுத்துனது,நான் தேம்பி தேம்பி அழுத மறக்க
முடியாத 2003 பைனல் மொமெண்ட்ஸ்ன்னு
நிறைய பேசிட்டு இருந்தோம்
மாலை சூரியன் மறைந்து போவது
கூட தெரியாமல்,

2002 ல தான் எங்க அப்பா இறந்தாரு
நான் அஞ்சாவது படிக்குறப்போ,தாதா
மேட்ச்ல அடி வெளுத்து வாங்குறப்போலாம்
அவர்கிட்ட சொல்லி தான்
சந்தோஷப்படுவேன், தாதா அவுட்
ஆகும் போதெல்லாம் அவர் மேல சாஞ்சு
தான் அழுவேன் டாடி டாடி ன்னு, எல்லா
பசங்களுக்கும் அம்மா தான் செல்லம்
ஆனா எனக்கு மம்மிய விட டாடி தான்
பிரியம் ரொம்ப,

இப்படி பசங்க கூட புரோட்டா எல்லாம்
சாப்பிட்டுட்டு ஸ்கூல் விட்டு வீட்டுக்கு
போறப்போ தாதா மாதிரியே லெஃப்ட்
ஹாண்ட்ல ரோட்ல ஷாட் அடிச்சு பாத்துட்டே
போய்கிட்டு இருந்தேன்,

வீட்டுக்கு போனப்போ நிறைய
சொந்தக்காரங்க வீட்டுல கூடி நின்னாங்க,

நம்ம வீட்டுக்கு ஏன் இவளோ
சொந்தக்காரங்க வந்துருக்காங்க
திடீர்னுனு தோணுச்சு,ஏன்னா அப்பா
இறந்ததுக்கு அப்பறம் நானும் அம்மாவும்
மாமா வீட்ல தான் இருந்தோம்,

வீட்டு வாசலுக்கு போனப்போ எல்லா
சொந்தக்காரங்களும் என்னையவே
பாத்தாங்க எனக்கு ஒரு மாதிரி கூச்சமா
இருந்துச்சு,

பால்கனில ஸ்கூல் பேக் கழட்டி வச்சுட்டு
வீட்டுக்குள்ள போனேன்,எங்க சித்தி பாட்டி
எல்லாம் ஏதோ ஒரு சின்ன கிளாஸ்ல பால்
ஊத்தி எங்க அம்மாக்கு ஒரு ஸ்பூன்ல
எடுத்து கொடுக்க சொன்னாங்க,

அப்பா இறந்ததுக்கு அப்பறம் அம்மா
ரெண்டு வருஷம் படுத்த படுக்கை தான்,

அம்மாவால பேச முடியல
என் தலை முடி மட்டும் தான் கோத்திட்டே
இருந்தாங்க அம்மாக்கு ஒரு விரல் கூட
கையில் வெட்டப்பட்டு இருக்கும்,

அதோட என் தல முடிய
கோதி விட்டுட்டு பேச முடியாத
குரல்ல நல்லா படி சிவா
கெட்ட பழக்கத்துக்கு போயிடாதன்னு
மட்டும் சொல்ல முடியாம சொன்னாங்க,
நான் கிளாஸ்ல இருந்த பால ஒரு ஸ்பூன்ல
எடுத்து அவங்களுக்கு கொடுக்க அவங்க
அதை குடிக்கும் போது அவங்க தொண்ட
குழில இறங்குன அந்த பால் இன்னும்
என் கண்ணுக்குள்ளயே நிக்குது,

அடுத்த சில நேரத்துல அம்மா
இறந்துட்டாங்க, அப்பா இறந்தப்போ
விவரம் தெரியாம இருந்த எனக்கு
அம்மாவோட இறப்பு கொஞ்சம் விவரம்
தெரிஞ்ச வயசுன்றனால நிறையவே
பாதிப்பு தந்துச்சு,

தாதா பிறந்தநாள் – ன்னு ஆட்டம்
பாட்டமா ஆரம்பிச்ச அந்த தினம் மலம்
கழிக்கும் கழிப்பறையில் ஒரு தனிமையின்
தாக்கத்திற்குள் பேரிடர் நிறைந்த ஆழ்ந்த
கண்ணீருடன் முடிந்தது,

இப்பவும் தாதா பிறந்தநாள் அப்போ
இப்படியொரு நிகழ்வு என் வாழ்க்கையில
நடந்ததற்கு நான் யாரை பழிக்க..?

ஒரு இழக்க கூடாத இறப்பை
அந்த தினத்தில் பதிவு செய்த அந்த
ஆண்டவனை நான் பழிக்கலாமா என்ற
கேள்வியுடன் ஒவ்வொரு தாதாவின்
பிறந்தநாளும் எனக்கு மட்டும்
மௌனமான நாளாக முடிகிறது,

சரி இதெல்லாம் விடுங்க,

என் தாதா சார்
என்னோட மகாராஜா அவரு
என்னோட எல்லாமும் அவரு,

பண்டிகைய கொண்டாடுங்கலே,

HappyBirthdayMySoulDada ❤️

Related posts

போட்டியைக் கணிப்பதில் பாண்டிங்கை விட தோனி வல்லவர்” – மைக்கல் ஹஸி கருத்து !

Penbugs

If MSD plays certain amount of matches, he will be included again: BCCI official

Penbugs

People said I couldn’t be an ODI bowler: Poonam Yadav

Penbugs

1 comment

Swaminathan July 8, 2020 at 1:38 pm

Romba azhagha sollirkinga bro… Romba touching ah erunthuchi ♥️

Padikumbothae kanla thanni nikkithu… 😌

Reply

Leave a Comment