Penbugs
CinemaInspiring

டார்லிங் ஜி.வி.பி-க்கு அகவை தின வாழ்த்து மடல்

1993 – ல நடந்ததா சொல்றாங்க சார்
அவன் அப்போ ஐட்டங்காரன் கூட
கிடையாதாம் அப்படியே அவங்க மாமா
ரஹ்மான் மியூசிக்ல ஒரு ஆறு ஏழு பாட்டு
அதுவும் குட்டி பசங்க வாய்ஸ்க்கு
பாடிட்டு இருந்தானாம் குட்டி பயனா,

அன்னக்கி வெறும் குட்டி பசங்க வாய்ஸ்க்கு
பாட்டு பாடிட்டு இருந்தவன் 2006 ல (வெயில்)
இருந்து பண்ண சம்பவங்கள்னால வேற
லெவல் ஆயிட்டான்னு சொல்லுறாங்க சார்,

ஆக்ட்டிங் பக்கம் போயிட்டு
மியூசிக் கம்மியா பண்ணாலும்
இன்னைக்கும் ஏரியால மியூசிக் டைரக்டர்ஸ்
லிஸ்ட்ல அவன் டௌலத் தான் சார்,

சைலண்ட் சம்பவம் தான் பண்ணது
எல்லாம் மோஸ்ட்லி ஸ்லோ பிக்அப் சாங்ஸ்
ரஹ்மானின் வளர்ப்பு இல்லையா பின்ன
அதே ரத்தம் அப்படித்தானே இருக்கும்,

பர்டிக்குலரா இவரோட ஆல் டைம் பெஸ்ட் –
ன்னு ஒரே ஒரு படத்தோட பின்னணி இசை
மற்றும் ஒரே ஒரு கம்ப்ளீட் ஆல்பம் மற்றும்
ஒரே ஒரு பெஸ்ட் பாடல் பத்தி பாப்போம்
இது எனக்கு பிடித்த அவரோட ஆல் டைம்
பெஸ்ட்,

பின்னணி இசை – ன்னு
வந்துட்டா ஆயிரத்தில் ஒருவன்,
தெய்வ திருமகள் மயக்கம் என்ன,
பொல்லாதவன் – ன்னு எல்லோரும்
பல படங்கள் சொன்னாலும்
என்னைக்குமே என்ன பொறுத்தவரைக்கும்
ஆல் டைம் பெஸ்ட் வித் கன்சிஸ்டெண்சினா
அது ” இது என்ன மாயம் தான் “,

நம்ம A.L.விஜய் எடுத்த படம் தான்,
இதுல ஜி.வி.பி தன்னோட ஆன்மால
இருந்து ஒரு இசை எடுத்து கொடுத்த
மாதிரி அவளோ உணர்வோட படம் முழுக்க
” A Walk to Remember ” – தீம் பயணிக்கும்,
அதுவும் “இருக்கிறாய்” பாடலுக்கு
பின்னே வரும் காட்சிகளில் இருந்து
கிளைமாக்ஸ் வரைக்கும் மனுஷன்
நம்மல அழ வச்சுருவாரு,

தனிமைல இருக்கணும்ன்னு
நினைக்குறவன், காதலிய பிரிஞ்சு
இருக்கவன் யாரும் இந்த படத்தோட
பிஜிஎம் – ஸ ஹெட்செட்ல உட்கார்ந்து
கேட்க வேணாம் என கேட்டுக்கொள்கிறேன்,

Highly Depression Alert Mode – க்கு உங்கள
கொண்டு போக சான்ஸ் இருக்கு
அந்த அளவு காதலின் வலி,பிரிவ இசை
மொழில அந்த தீம் அமைஞ்சுருக்கும்,

” A Walk to Remember | Idhu Enna Maayam “

அடுத்தாக ஒரு கம்ப்ளீட்
ஆல்பம் பத்தி பாப்போம்,

நம்ம வெற்றிமாறனோட “ஆடுகளம்”

பாட்டுல மதுரை வாசம் வீசணும்
அந்த ஊர் மக்கள் பேசுற ஸ்லாங்குக்கும்
அவங்களோட வாழ்வியல் பேசுற மாதிரி
அப்படியே காரம் குறையாம மதுரை
ஸ்பெஷல் சால்னாவ ஊத்தி பரோட்டாவ
சாப்புட்ற லோக்கல் ஃபீல்லும் சேர்த்து
அப்படியே மொத்த ஆல்பமும் ஜி.வி.பி
சோடி போட்டு அதகளம் பண்ணது
தான் ஆடுகளம்,

ஒத்த சொல்லால – பாட்டெல்லாம்
இப்பவும் மதுரைல ஒவ்வொரு
கச்சேரிலையும் திருமண
விசேஷத்துலையும் போட்டு போட்டு
எங்க ஊர்க்காரங்க அந்த பென்டிரைவ்
எங்கள விட்டா போதும்ன்னு சொல்லுற
அளவு வச்சு தீட்டிட்டாங்க,

” Aadukalam Juke box | GVP Musical “

கடைசியா அந்த ஒரே ஒரு பர்டிகுலர் சாங்,

இது என்ன பா கேள்வி – ன்றிங்களா,

எல்லாருக்கும் பிடிச்ச நம்ம
எல்லாரோட ஃபேவரிட் தான்,

” பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே “

இந்த பாட்டுக்கு முதல் கிரெடிட்ஸ்
நா.முத்துக்குமாருக்கு கொடுக்கலேனா
ஜி.வி.பி யே கோச்சுப்பார்,

ஜி.வி.பி யோட இசைக்கு
உயிர் வடிவம் கொடுத்ததுனா அது
கண்டிப்பா முத்துக்குமாரோட வரிகள் தான்,

||

பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே

||

ரூப்குமார் ரத்தோட், ஹரிணி,ஆண்ட்ரியா
(இங்கிலிஷ் லிரிக்ஸ்),ஜி.வி.பி (ஹம்மிங்) –
ன்னு ஒவ்வொருத்தரும் தங்களோட பணிய
சிறப்பா செஞ்சு கொடுத்துருப்பாங்க
காட்சிகள்ல கூட இயக்குநர் விஜய்
ரொம்ப மெனக்கெட்டிருப்பார்,

பூக்கள் பூக்கும் தருணம் பாட்டு பத்தி
மட்டுமே ரொம்ப குறைஞ்சது
இருபது பக்கம் என்னால எழுத முடியும்,

வரிகள்ல அவளோ நுணுக்கம்,
இசைல அவளோ தெளிவு,
காட்சியமைப்பில் உயிரோட்டம்,
உருவ பாவனையில் கவிதை போன்ற
காதல்,காதல் பேசும் அழகியல்,
காமம் இல்லா பெருங்காதல்,
முத்துக்குமாரின் தனிப்பெருந்துணையே,
ஆன்மாவிலிருந்து ஒரு கலைஞன்
கொடுத்த இசை, இப்படி பல
கோணங்களில் என்னால் எழுத
முடியும் இந்த ஒரு பாடலை பற்றி,

” Pookkal Pookkum Tharunam | Madharasapattinam “

இப்படி லிஸ்ட் எடுத்தால்
ஒவ்வொருக்கும் பிடித்த
ஒவ்வொரு வகையான பி.ஜி.எம்ஸ்,
ஆல்பம்,தனிப்பாடல் என பெரிய
ஒரு லிஸ்ட்டே போடலாம் இங்க,

ஆக்ட்டிங் பக்கம் கொஞ்சம்
சறுக்கல் தான் என்றாலும்
இன்றும் சர்வம் தாள மாயம்,
சிவப்பு மஞ்சள் பச்சை – லாம்
கிளோஸ் டூ ஹார்ட் – ன்னு சொல்லலாம்,

ஆக்ட்டிங்கே போனாலும்
இசை தான் உங்களை உயர்த்தும்
இசை தான் உங்கள எங்ககூட
ரொம்ப தூரம் பயணிக்க வைக்கும்,

நிறைய இசை கொடுங்க
அப்படியே உங்க சைந்தவி குரல
கொஞ்சம் அதிகமா யூஸ் பண்ணுங்க,

யுவன் குரலில் ஈரம் இருக்குன்னு
ரஹ்மான் சொன்ன மாதிரி உங்க குரல்ல
ஜீவன் இருக்கு, அந்த ஜீவன் தான் எங்கள
உங்க குரல் கூட கட்டி போட்டு வச்சுருக்கு
இத்தனை வருஷமா,

என்ன அழ வைக்காதிங்க ஜி.வி.பி – ன்னு
சொல்லுற அளவு நிறைய இரவுகள் உங்க
குரல் எனக்கு ஆறுதலா இருந்துருக்கு,

இசை,குரல்,நடிப்பு
(சரியான கதை தேர்வு) – ன்னு
எங்க எல்லோரையும்
உங்க பயணத்துல ஒரு அங்கமா
கடைசி வர வச்சுக்கோங்க ஜி.வி.பி,

ஐட்டங்காரனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,

: ) ❤️

Related posts

ஹிப்ஹாப் ஆதி…!

Penbugs

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah

ராகதேவனுடன் ஓர் அகவை தின பயணம்!

Shiva Chelliah

மனிதம்..!

Shiva Chelliah

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதீப்குமார்!

Shiva Chelliah

திரு.குரல்..!

சைக்கோ | Psycho – Movie Review

Anjali Raga Jammy

உலக இசை தினம் இன்று …!

Kesavan Madumathy

இசை அசுரன் ஜீவி பிரகாஷ்!

Kesavan Madumathy

We have to celebrate his life: AR Rahman on SPB

Penbugs

Vijay Sethupathi turns Rayanam for “Uppena”

Penbugs

Tholaigirene: A Blissfully Candid musical that immediately stays with you!

Lakshmi Muthiah