Penbugs
CricketMen Cricket

தலைவன் ஒருவனே..!

தோனி, ஒரு பிளேயரா பல பேரை வியக்க வைச்சி இருக்கலாம், ஆனால், ஒரு நல்ல தலைவனா அவரை‌ கண்டு வியந்த பல பேர்களில் நானும் ஒருவன். கிரிக்கெட் என்பது வெறும் உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து விளையாடும் விளையாட்டு இல்லை; அது ஒரு மைண்ட் கேம். எதிரணி வீரர், கேப்டன் எப்படி யோசிப்பார் என யோசிச்சு முடிவு எடுக்கனும். அதில் ஜெயிச்சா போதும் மிச்சமெல்லாம் தானா நடக்கும்.

2007 உலககோப்பையில் தோற்றபிறகு, கேப்டன்சிப்பில் மாற்றம் வரப்போதுனு இருந்தப்ப, ரசிகர்கள் பல பேர் அவங்க மைண்டல ஒவ்வொருத்தரை நினைச்சாங்க, ஆனா, பெரும்பாலும் அவங்க நினைச்சதுல தோனி பெயர் இருக்க வாய்ப்புகள் குறைவாதான் இருந்து இருக்கும். யாருமே எதிர்பார்க்காமல், சச்சின், தோனியின் பெயரை முன்மொழிந்தார். எனக்கு தெரிந்து இந்திய கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெரிய மாற்றத்தின் அடித்தளம் அது‌…!

தோனி தலைமைக்கு வந்த உடனே முதல் சீரிஸ் டி20 உலககோப்பைதான். நடந்த முதல் மேட்ச்சே பாகிஸ்தான் கூட ரொம்ப நெருக்கடியா போகும். மேட்ச் அப்ப கடைசி ஓவரை ஸ்ரீசாந்த் போடும்போது அவர் அமைத்த பீல்டிங் செட் நல்லா இருக்கும் அதை விட பெரிய விஷயம், மேட்ச் ‘டை’ ஆகிட்டு ‘பவுல்-அவுட்’ வரும்’ அப்பதான் பாகிஸ்தான் அணி கேப்டன் அவங்களின் முண்ணனி பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து அனுப்பினர். அப்ப நம்ம ஆளு பகுதி நேர பந்து வீச்சாளர்களை சேர்த்து அனுப்பினார். அன்னிக்கு அது ஜெயிக்க ஆரம்பித்ததுதான் அதுக்கு அப்புறம் தோனி தனக்கான ஒரு புதிய அத்தியாயத்தை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவரே எழுத தொடங்கிட்டார்.

அதுக்கு அப்பறம் அனைத்து போட்டியும் கடந்து பைனல் வந்த அப்ப கடைசி ஓவர் ஹர்பஜன் சிங் போடுவார்னு பார்த்தா ஜோகிந்தர் சர்மாவிற்கு கொடுப்பார். ஒரு வேளை அந்த மேட்ச் தோற்று இருந்தால், தோனியின் முடிவுகளுக்காக பெரிய விமர்சனத்திற்கு ஆளாகி இருப்பார். ஆனால், தான் கொண்ட ஒரு முடிவை எந்த அளவிற்கு சக்ஸஸ் ஆக்க முடியும் என்பதில்தான் தலைவனுக்கான தகுதி இருக்கிறது என்பதை தோனி நிரூபித்து காட்டினார்…!

தோனி குறித்தான நினைவுகளில் ரொம்ப வியக்கத்தக்க விசயம் என்னனா தோனி ஒன்றும் முதல் தர போட்டிகளில் கேப்டனாக இருந்தது இல்லை ஒரு விபத்து மாதிரி வந்த தன்னிடம் வந்து சேர்ந்த கேப்டன் பொறுப்பை ஒரு‌ மனுசன் இந்த அளவிற்கு வெற்றிகரமா பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதே …!

அதன் பின்பு ஆஸ்திரேலியாவில் காமென்வெல்த் போட்டியின் போது சுழற்சி முறையில் அணியை மாற்றி மாற்றி களம் இறங்க வைத்தார். அப்போது பெரிய எதிர்ப்பினை சந்தித்தாலும் அது உலககோப்பைகான சரியான அணியை தேர்வு செய்ய என பின்னர்தான் தெரிந்தது.

பெரிய வீரரா இருந்தாலும் உடல்தகுதி முக்கியம் என்ற நிலைப்பாடு இந்திய அணியில் வந்தது இவரின் தலைமைக்கு பிறகுதான்…!

உலகக்கோப்பையின் போது, இறுதி போட்டியில் ஸ்ரீசாந்தை ஆடும் லெவனில் எடுத்தது, யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக வந்தது என பல்வேறு சர்ச்சைகள்.
இது குறித்து தோனி கூறியது: முடிவுகள் குறித்து அந்த அளவிற்கு சிந்திப்பதை விட நூறு கோடி மக்களின் கனவினை எவ்வாறு நிறைவேற்ற போகிறோம் என்பதே என் மனதில் ஓடியது.

தோனி ஐபிஎல் போட்டிகளில் செய்த கேப்டன்சிப்புகளுக்கு ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு கதை தோல்வியை நோக்கி செல்லும் போட்டிகள் பலவற்றை தனது கேப்டன்சிப்புகளின் மூலம் வெற்றியை நோக்கி அழைத்து சென்றுள்ளார். ஆடிய அனைத்து சீசனிலும் சென்னை அணி தகுதிசுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதே அதற்கு சான்று …!

தோனி அடிக்கடி கூறும் வார்த்தை “The process is more important than the result, a result is byproduct of your process” இந்த பிராசஸ் கடைசிவரை அவர் பண்ணிட்டு இருக்கார் அணி தேர்வு ஆகட்டும் , எடுக்கும் முடிவுகள் ஆகட்டும் எல்லாமே ஒரு காரணத்தோடுதான் இருக்கும்.

தோனி சந்தித்த விமர்சனங்கள், எதிர்வினைகள் அதிகம் சொந்த நாட்டில் இவ்ளோ எதிர்ப்பும் இவருக்குதான் ஆனாலும் அனைத்தையும் அமைதியாக கடந்து போறதுதான் தோனியின் ஸ்டைல்…!

தான் தலைமையேற்று வழிநடத்திய அதே அணியில் ஒரு சாதரண வீரராக இருக்க யாருக்கும் மனம் ஒத்து கொள்ளாது தான் என்ற ஈகோ கண்டிப்பா எவ்ளோ பெரிய மனுசனுக்கும் இருக்கும், ஆனா தோனி அந்த ஈகோவைலாம் கடந்து விராட் கேப்டன் ஆகும்போது அவருக்கு பக்கதுணையாக கூட இருந்தது, அவரின் தலைமைப் பக்குவத்தையும் காட்டுகிறது , எப்பொழுதுமே தான் கொண்ட முடிவில் உறுதியாக இருப்பதுதான் தோனி…!

இறுதியாக-

Reporter – Why You Doesn’t Hold The Trophy For More Than 15 Seconds ?

DHONI – “It’s Unfair That The Captain Lifts The Trophy For Winning In The Team Sport. So I let The Team Take Centre Stage With The Trophy..!

தோனி என்பதை விட மாயாஜாலக்காரன் என்பதே சரி…!

Related posts

தோனி ஒரு அதிரடி கேப்டன் – ஸ்ரீசாந்த் பேட்டி…!

Penbugs

தலைவன் ஒருவனே…!

Kesavan Madumathy

தலைவன் ஒருவனே – இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி

Kesavan Madumathy

டி வில்லியர்ஸின் ஆல்-டைம் ஐபிஎல் லெவன்: எம்எஸ் டோனி கேப்டன்

Kesavan Madumathy

சென்னை அணியில் கொரோனா பாதிப்பு

Penbugs

சரித்திர நாயகன் தோனி …!

Kesavan Madumathy

கோலி, தோனி ஆகியோரில் தோனியே சிறந்த கேப்டன்: தவான்,

Kesavan Madumathy

கலியுக தர்ம யுத்தம்!

Shiva Chelliah

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

Penbugs

ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபாய் புறப்பட்டார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி

Penbugs

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ரெய்னா

Penbugs

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை நாளை வெளியீடு

Penbugs