Penbugs
Cinema

டிக்கிலோனா விமர்சனம் | டைம் டிராவல் | சந்தானம் | கார்த்திக் யோகி

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படமான டிக்கிலோனா, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு Zee 5 OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

டைம் டிராவல் கதைகள் தமிழ் சினிமாவில் மிகவும் அரிதான ஒன்று.

இன்று நேற்று நாளை, 24 படங்கள் இந்த டைம் டிராவலை மையமாக வைத்து வெளியானது. அதே மாதிரியான ஒரு கதையில் காமெடி கலந்து கொடுத்திருக்கிறது டிக்கிலோனா.

சந்தானத்தின் ஹீரோ முயற்சியில் தமிழ் சினிமாவில் ஜனரஞ்சகமான முழு நீள காமெடி படங்கள் குறைந்து வரும் நிலையில் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து ஒரு‌ டைம் டிராவல் கதையை தந்துள்ளார் இயக்குனர் கார்த்தி யோகி.

படம் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிக்க வைக்க தனது மெனக்கெடலை சந்தானமும் , இயக்குனரும் முயற்சி செய்துள்ளனர்.அந்த முயற்சி சில இடங்களில் நன்றாகவும் , பல இடங்களில் சுமாராகத்தான் எடுப்பட்டுள்ளது.

அங்கு அங்கே ஓ மை கடவுளே படத்தின் சாயல் நியாபகத்திற்கு வருவது படத்தின் பெரிய மைனஸ்.

படத்தின் பிளஸ் :

  1. சந்தானத்தின் தோற்றம் மற்றும் அங்கு அங்கு அடிக்கும் ஒன் லைனர்கள்.
  2. படத்தின் பிற்பாதியில் வரும் லொள்ளு சபா டீமின் காமெடி கலக்கல்
  3. நிழல்கள் ரவி டிவிஸ்ட்
  4. பேர் வைச்சாலும் பாடல்
  5. குழப்பம் இல்லாமல் டைம் டிராவல் கான்சப்டை சொன்ன விதம்

படத்தின் மைனஸ் :

  1. யோகிபாபுவின் உடல் அமைப்பை , மாற்று திறனாளியை கிண்டல் அடிக்கும் காட்சிகள்
  2. தொய்வடைந்த திரைக்கதை
  3. ஆனந்தராஜ் – முனிஸ்காந்த் காமெடி சுத்தமாக எடுபடாமல் இருப்பது .
  4. யுவனின் பின்னணி இசை ஒட்டாமல் இருப்பது
  5. மொட்டை ராஜேந்திரனின் காமெடிகள்
  6. பழைய‌ ஜோக் தங்கதுரை காமெடி

ஹர்பஜன்சிங்கை முன்னிலை படுத்தாமல் படத்தின் பிரமோஷன்களை செய்தது நன்று .

மாறன், சேசு , நிழல்கள் ரவியை இன்னும் சில காட்சிகளில் சேர்த்து இருக்கலாம்.

மாறனை தமிழ் சினிமா இப்பொழுது இருக்கும் காமெடி வறட்சியில் இன்னும் நன்றாக பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஒரு சில இடங்களில் வரும் சிரிப்பிற்காக படத்தை பார்க்கலாம் .

Leave a Comment