Penbugs
CinemaInspiring

என் பேரன்புடைய அப்பாவுக்கு!

மறைந்த நம் கவிஞர்
திரு.நா.முத்துக்குமார் அவர்களின்
பிறந்த தினமான இன்று அவரின்
செல்ல மகன் ஆதவன் முத்துக்குமார்
இன்று தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு
தன்னுடைய பேனாவினால் அழகான
கவிதை ஒன்றை எழுதி தன் தந்தைக்கு
பிறந்தநாள் பரிசாக அளித்திருக்கிறார்,


என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்
அவர் என் தந்தையாக கிடைத்தது
எனது வரம்
என் தந்தையின் பாடல்கள் சொக்க தங்கம்
அவர் எங்கள் காட்டில் சிங்கம்
என் தந்தையின் வரிகள் முத்து
அவர்தான் எங்களின் சொத்து
என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்
அவர் இல்லை என்று
நெஞ்சம் சில நேரம் வலிக்கும்
என் தந்தைக்கு என் அம்மா
ஒரு அழகிய ரோஜா
எப்பொழுதும் அவர் பாடல்களில்
அவர்தான் ராஜா
எனக்கும் என் தங்கைக்கும்
நீங்கள்தான் அப்பா
இன்னும் கொஞ்சம் நாள்
உயிரோடு இருந்தால் என்ன தப்பா!


பதிமூன்று வயதில் எட்டாவது படிக்கும்
ஆதவன் எத்தனை விதமான வலிகளை
கடந்திருப்பான் இந்த கவிதையை எழுதி
முடிப்பதற்குள் என்பது தான் எனக்கு
இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது,

ஆதவன் எழுதிய கவிதையை இங்கு உங்களிடம் பகிரவே நான் என்ன பாக்கியம் செய்திருக்கக்கூடும் என தெரியவில்லை,

ஏனென்றால் என் ஆசான் வழி
வந்த ஆதவனிடம் என் ஆசானின்
எழுத்துக்கள் அந்த எழுத்துக்களின்
மீதுள்ள பேரன்பு என அவன் கவிதை
மொத்தமும் என் உடம்பை சிலிர்க்க
வைக்கிறது,

இன்று சமூக வலைதளம் முழுவதும்
நா.முத்துக்குமார் அவர்களின்
பிறந்தநாளை கொண்டாடிய வண்ணம்
அவரது ரசிகர்கள் இருக்கின்றனர்,

ஆதவன் எழுதிய இக்கவிதையை முத்துக்குமார் உயிருடன் இருந்து இன்று வாசித்து இருந்தால் ஆயிரம் முத்தங்களை பரிசாக ஆதவனுக்கு அளித்திருப்பார்,

காலம் யாரை தான் விட்டு வைத்தது
பூமியில் பிறந்த அனைவரும் என்றோ நாள் இறப்பின் கதவை சென்று தட்டி தானே ஆக வேண்டும்,

ஆனால் முத்துக்குமார்
சாகா வரம் வாங்கியவன்
அதனால் தான் இன்றும்
தன் எழுத்துக்கள் மூலம்
உயிர் பெற்று கொண்டிருக்கிறான்,

எழுதி வையுங்கள்
என் ஆசானின் கல்லறையில்
வாரிசு கவிஞன் ஆதவன் முத்துக்குமார்
உதயமாகி கொண்டிருக்கிறான் என்று,

ஆதவனின் கவிதை மழையில்
நாமும் உடன் சேர்ந்து நனைவோம்,

: ) ❤️

Related posts

பேரன்புக்காரனின் தினம்!

Shiva Chelliah

ஆனந்தயாழ் | முத்துகுமார் | Na. Muthukumar

Kesavan Madumathy

He is an engineer, a lyricist and a short film maker

Penbugs

From the Bottom of our Hearts

Shiva Chelliah

Leave a Comment