எனை நோக்கி பாயும் தோட்டா- review|Penbugs

படத்தின் வெற்றி தோல்விலாம் இரண்டாம் பட்சம் …!

எப்ப எனை நோக்கி பாயும் தோட்டானு பேர் வைச்சாரோ அப்போது இருந்து கௌதமை நோக்கி வந்த தோட்டாக்கள் தான் அதிகம் பாவம் மனிதர் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டார்…!

ஒரு குழுவாக தன்னுடைய மொத்த உழைப்பும் போட்டு அது வெளிவராம இருந்தா அதை விட பெரிய வலி இல்ல பல தடைகளை கடந்து படம் வெளியானது மகிழ்ச்சி …!

நல்ல ஒரு ரசனையான கௌதமுக்கு அவர் படத்தின் பாடல் வரியே சொல்லிக் கொண்டு

“எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்”

படம் வழக்கம்போல நல்ல லொகேசன் , நல்ல எலைட் பேமிலி , நல்ல கேமரா , நல்ல இசை , கொஞ்சம் அங்க அங்க நல்ல வசனம் அதே கௌதமின் பார்முலாதான் ..!

கௌதமின் பெரிய பிளஸ் சுத்தி இருக்கறவங்க கிட்ட வேலையை ரசிச்சு வாங்கறது அது எல்லா படத்தலயும் சரியா பண்ணிடுவார் டெக்னிக்கலா சின்ன குறை எதனா வேணா இருக்கலாம் மத்தபடி பிரசன்ட்டேசனை அடிச்சிக்க ஆளே இல்லை .‌!

இந்த படத்துலயும் டெக்னிகல் டீம் நல்லா வேலை செய்து இருக்கிறார்கள் ஆனால் எழுத்தில் கௌதம் இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம் தனுஷ் மேகா காதல் அந்த அளவிற்கு ஒட்டவே இல்லை , சசிகுமாரின் தேர்வு யோசித்து இருக்கலாம் ..!

சில வசனங்கள் நன்றாக இருந்தன மனதில் பதிந்த வசனங்கள் சில :

அவள் என் நாவில் உரச புது சுவைகள் உண்டாகின…!

நடிகையின் மடியில் ரசிகன் நான் விழுந்தேன் …!

அந்த கழுத்துல கத்தி பட்டாலும் அவளை பார்க்க மாட்டேன் ஏன்னா அப்பவும் அழகா இருக்கா அந்த கழுத்துல நான் வாழ்ந்து இருக்கேன் …!

பிஎச்டி பண்ணு என் மேல ..!

அவங்களுக்கு அவளை பிடிச்சிட்டு ஏன்னா என்னை அவங்களுக்கு அதை விட பிடிக்கும்….!

எதிரிங்க அதிகம் 24 மணி நேரம் கன்னோடுதான் சுத்தறன் கருமம் இப்ப இதை ஏன் சொன்னேனு தெரில …!

திருவோட சீனியர்‌ பேரு அருண் அவர் சொன்ன‌ கதை போக்கிரி படத்தோட கதை …!

பாக்கறது ஈஸியா இருந்தது நான் என்றதால் ஆனா இது ஈஸிலாம் இல்ல …!

அடுத்த நாள்‌ ரூம்ல அஞ்சு பேரு அவங்க கைல பொருளு அதுல ஒண்ணு கஜினி படத்தில் வர்ற ஒண்ணு..!

இது மாதிரி இடங்களில் கௌதம் தெரிந்தார் அவ்ளோதான்…!

தனுசின் நடிப்பை பற்றி குறை சொல்ல ஒண்ணுமில்லை மனிசன் வாழ்ந்து இருக்கார் …!

படம் முழுவதும் வரும் வாய்ஸ்ஓவர் அரங்கில் பெரும்பான்மையோருக்கு பிடிக்கவில்லை ..!

கௌதமிற்கு இருந்த பெரிய சுமை குறைந்ததும் , அசுரனுக்கு பிறகு தனுசுக்கு இந்த மாதிரி ஒரு மெல்லிய கதை வந்ததும் மட்டுமே ஆறுதல் …!

தர்புக் சிவாவிற்கு நல்ல எதிர்காலம் அமைந்தால் நன்றாக இருக்கும் அவரின் பாடல்களும் , பின்னணி ‌இசையும் நன்றாகவே உள்ளது …!

எனை நோக்கி பாயும் தோட்டா பாய்ந்தும் இலக்கை எட்டவில்லை …!