யதார்த்த நாயகன் ..!

யதார்த்த நாயகன் ..!

முதன்முதலில் துள்ளுவதோ இளமையில் ஒரு இளைஞன் திரையில் தோன்றியபோது தமிழ் சினிமாவிற்கு தெரிந்து இருக்காது அடுத்த எட்டே வருடத்தில் தமிழ் சினிமாவிற்கு தேசிய விருதினை பெற்றுத்தர போகும் உன்னத கலைஞன் என்று…!

திரையில் பல ஹீரோக்கள் எவ்ளோதான் ஹீரோயிசம் பண்ணாலும் நம்மள மாதிரி ஒரு சாதாரண ஆளு திரையில் தோன்றினா எப்படி இருக்கும் என்ற கனவு நிறைய பேருக்கு இருக்கும் ஏன்னா பெரும்பாலும் நாம் கதாநாயகனுக்கு உரிய தோற்றத்தில் இருக்க மாட்டோம் நம்மளை மாதிரி ஒருத்தன் அப்படியே திரையில் வந்தா எப்படி இருக்கும் என்று நினைச்சிட்டு இருக்கும்போது வந்தவர்தான் தனுஷ் ..!

ஒரு துறைக்கு வந்த அப்பறம் அதுல இருக்கிற எல்லாத்தையும் கத்துக்க முயற்சி பண்ணிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தன்னையும் மெருகேற்றி அதனை அவர் வெளிபடுத்தும் விதம் உண்மையாகவே பாராட்டப்பட வேண்டிய விசயம் …!

நடிகர் தனுஷ் :

சில சீன்லாம் இந்த தலைமுறையில் இவர் அளவிற்கு பண்ண ஆளே இல்லை என்று சொல்லுமளவிற்கு ஒரு முழுமையான நடிகனா மாறி இருக்கார் அப்படி எனக்கு ரொம்ப பிடிச்ச சில காட்சிகள் :

” 3″ படத்தோட கிளைமேக்ஸ் காலம் காலமாக தற்கொலை பண்ணிக்கிறது சினிமாத்தனமாக தான் காட்டிட்டு இருக்காங்க ஆனா உண்மையில் ஒரு தற்கொலை பண்றவனோட மனநிலையை அப்படியே எனக்கு தெரிஞ்சி திரையில் யதார்த்தமாக காட்டியது தனுஷ் மட்டுமே .

“மயக்கம் என்ன “அந்த பெரிய போட்டோகிராபர் நாய் மாதிரி நடிச்சு காட்ட சொல்லும்போது ஒரு ஆக்டிங் தந்து இருப்பார் பாருங்க அதுக்கு கோவிலே கட்டலாம் .

“ரஞ்சனா” கிளைமேக்ஸ்ல அந்த வாய்ஸ் மாடுலேசன் சின்னதா மாத்தி ஒரு சோக சிரிப்போடு பேசற விதம் அழகியல் .

“விஐபி ” படத்தில் மொட்ட மாடில அம்மாகிட்ட பேசற சீன் இதைவிட இயல்பா ஒரு சீன் யாரும் பண்ணது இல்ல ,இண்டர்வியூ முடிச்சுட்டு பைல் தூக்கி போட்டுட்டு அதை மறுபடியும் எடுத்து வைச்சி உட்காரும் காட்சியும் அடக்கம்.

“மரியான் “பார்வதி கிட்ட போன் பேசும் காட்சி ..!

“யாரடி நீ மோகினியில்” வயதான பாட்டியிடம் பேசும் காட்சி .

பாடலாசிரியர் தனுஷ் :

சில பாடல்களில் வரிகள் ஒரு நல்ல தேர்ந்த கவிஞர் மாதிரி இருக்கிறதுலாம் இந்த மனுசனா இப்படிலாம் எழுதுறார் என்று சிலிர்க்க வைக்கும் அப்படி அவர் எழுதிய பாடல்களில் எனக்கு பிடித்த சில வரிகள் :

  • படம் : 3
    இசை : அனிருத்

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா !!!

நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே… உயிரே… உயிர் நீதான் என்றால்
உடனே… வருமா… உடல் சாகும் முன்னா ல் !!!

  • படம் : மயக்கம் என்ன
    இசை : ஜி.வி.பிராகாஷ்

என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
உனக்கென என வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி !!!

  • படம் : பவர் பாண்டி
    இசை : ஷான் ரோல்டன்

தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே
வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகிறதே …!

ஒய் திஸ் கொலவெறியும் எழுத முடியும் அதே சமயம் மொழி ஆளுமை மிக்க வரிகளையும் அவரால் எழுத முடியும் ‌அதான் Poetu Dhanush ..!

பாடகர் தனுஷ் :

ஒய் திஸ் கொலவெறி முதல் லேட்டஸ்ட் ஹிட் ரௌடி பேபி வரைக்கும் தனுஷின் குரலுக்கு தமிழ்நாட்டில் வரவேற்கத்தக்க ரசிக கூட்டம் ஒன்று உள்ளது …!

துள்ளல் போட வைக்கும் பாடல் ஆகட்டும், இல்லை மனதை மெய்மறக்க செய்யும் ஜோடி நிலவே ஆகட்டும் தனுசின் குரல் மற்றவர்களை விட அவரை தனித்து காட்டும் எப்பொழுதும் ‌..!

இயக்குனர் தனுஷ் :

ஒரு படம்தான் எடுத்து இருக்கார் ஆனா அதுலயே நிறைய நல்ல காட்சியமைப்புகள் இருக்கும்.

அம்மாகிட்ட போன் வரும் அதை எடுக்காதவனை பார்த்து பிரசன்னா சொல்றது அம்மா அப்பா போன் பண்ணா எடுங்கடா அவங்க பெருசா ஒண்ணும் எதிர்பார்க்கல சாப்டியா ,தூங்கினியானு கேளுங்க அதுல ஒண்ணும் குறைஞ்சிட மாட்டீங்கனு அந்த சீன் 😍😍😍🙏

இன்னும் நிறைய பாட்டுகள் எழுதி ,படம் இயக்கி ,நல்ல படங்களா நடிக்கட்டும் ..!

நீயெல்லாம் ஹீரோவா என்று கேட்டவர்களை நீதான்யா ஹீரோனு சொல்ல வைச்சதுதான் தனுஷின் உழைப்போட வெற்றி …!