Penbugs
CinemaInspiring

Happy Birthday, Mr.Feel Good Musician

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை,

மனோ – சித்ரா குரல்களில் அப்படியே
பெப்பியா சும்மா காரம் குறையாம ஒரு
மியூசிக் டிஷ் கொடுத்தவர் தான் இந்த
கார்த்திக் ராஜா,

இளையராஜா இசை அமைச்சு
ரஜினி நடிச்ச பாண்டியன் படத்துல
“பாண்டியனின் ராஜ்ஜியத்தில் சிங்கிள்”
மூலமாக தன் அப்பாவின் நிழலில் இசை
பயணத்தை கார்த்திக் ராஜா ஆரம்பித்தார்,

இரண்டாவது படமாக ரஜினியின்
உழைப்பாளி படத்திற்கு பின்னணி இசை
கொடுத்து மெருகேறினார்,பின்பு அடுத்து
ஆறு படங்களில் சிங்கிள் ட்ராக் மற்றும்
பின்னணி இசை மட்டுமே அமைத்து
வந்தார்,

சோழர் பரம்பரையில் ஒரு MLA – ன்னு
அமைதிப்படை படத்துல பின்னணி
இசைல புலிக்கு பிறந்தது
பூனையாகாதுன்னு சொல்லாம
சொல்லிருப்பார் கார்த்திக் ராஜா,

ஏழாவது படமாக நம்ம பிக்பாஸ்
பிரபலம் வனிதா விஜயகுமாரின்
இரண்டாவது படமாக அமைந்த
ராஜ்கிரண் நடிச்ச “மாணிக்கம்” தான்
கார்த்திக் ராஜா தனியாக இசை
அமைத்த முதல் படம்,

கார்த்திக் ராஜாவின் பெயர் சொல்லும்
ஆல்பம் என்றால் நிச்சயம் அதில்
“உல்லாசம்” டாப் லிஸ்ட்டில் இருக்கும்,

நம்ம அமிதாப் பச்சன் தமிழ்ல
தயாரிச்ச முதல் படம் “உல்லாசம்”,
கார்த்திக் ராஜாவை நம்பியே படம்ன்னு
சொல்லலாம் அந்த அளவு மியூசிக்
ஸ்கோப் படத்துல இருக்கும்,கார்த்திக்
தன்னோட வேலைய அழகா செஞ்சுருப்பார்,

வீசும் காற்றுக்கு
யாரோ யார் யாரோ
முத்தே முத்தம்மா
ச்சோ லாரே
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்

  • ன்னு எல்லாமே டாப் ரகம் தான்,

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன் – ன்னு
பிரபுதேவா மீனா ரொமான்ஸ் பண்ண
“நாம் இருவர் நமக்கிருவர்”, காசு மேல காசு
வச்சுன்னு கமலும் பிரபுதேவாவும் அதகளம்
பண்ண “காதலா காதலா” – ன்னு எல்லாமே
கார்த்திக் ராஜா இசை அமைச்ச படங்கள்
தான்,

2001 – இல் வெளிவந்த “கிரஹண்” என்ற
ஹிந்தி படத்துக்கு இசையமைத்த
கார்த்திக் ராஜா Filmfare (New Music Talent)
அவார்டும் வாங்கினார்,

பிறகு “உள்ளம் கொள்ளை போகுதே”

“கவிதைகள் சொல்லவா” பாடல் 2020 – இல்
இப்போது கேட்டாலும் அதே ஃபீல் அப்படியே
இருக்கும்,பின்னணி இசையில் தன்
ஆன்மாவில் இருந்து இசை கொடுத்து அந்த
படத்தை முழுவதும் தன் இசையால் காதல்
ராகம் மீட்டியிருப்பார் கார்த்திக் ராஜா,

மணிரத்னம் தயாரிச்சு அழகம் பெருமாள்
இயக்கிய “டும் டும் டும்” படம் இன்று வரை
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது என்று
தான் பலரும் நினைக்கின்றனர்,ஆனால்
கார்த்திக் ராஜா சைலண்ட்டாக செய்த
மிகப்பெரிய சம்பவம்ன்னா அதான்,

ரகசியமாய்
அத்தான் வருவாக
தேசிங்கு ராஜா
சுற்றும் பூமி
உன் பேரை சொன்னாலே
கிருஷ்ணா கிருஷ்ணா

  • ன்னு கார்த்திக் ராஜா
    இறங்கி அடிச்ச ஆல்பம் அது,

Karthick Raja Delivers Some Fresh Content Music in
Dum Dum Dum Film – ன்னு சொல்லுற அளவு
பக்காவான Crystal Clear Songs கொடுத்தார்,

பிறகு வசந்த பாலனின் முதல் படமான
“ஆல்பம்” – இல் ஸ்ரேயா கோஷல் பாடிய
“செல்லமே செல்லம்” பாடல்,பிறகு விஜய்
நடித்த புதிய கீதை படத்தின் இசை
(பின்னணி இசை மட்டும்),அரண்மனை –
1(பின்னணி இசை மட்டும்),தில்லுக்கு துட்டு
(பின்னணி இசை மட்டும்),என இடைப்பட்ட
நாட்களில் நிறைய சின்ன படங்களுக்கும்
கார்த்திக் ராஜா இசை அமைத்து
கொடுத்திருக்கிறார்,

யுவன் சம்பவம் செய்த மங்காத்தா
படத்தின் பின்னணி இசையில் கூட
தங்கை பவதாரிணி,மற்றும் நம்ம
கார்த்திக் ராஜாவும் அதில் ஒர்க்
செய்து இருப்பார்,படத்தின் டைட்டில்
கார்டில் கூட இவர்கள் பெயர் வரும்,
கவனித்து பார்த்தீர்கள் என்றால் தெரியும்,

விஜய் சேதுபதி நடித்து
சீனு ராமசாமி இயக்கும் “மாமனிதன்”
படத்திற்கு இளையராஜா,யுவன்,
கார்த்திக் ராஜா மூவரும் சேர்ந்து இசை
அமைக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்,

பெரிதாக கொண்டாடப்படவேண்டியவர்
ஆனால் ஒரு சிறு வட்டத்திற்குள்
தன்னை அடை காத்துக்கொண்டார்
என்றே சொல்லலாம்,

Feel Good என்ற வார்த்தைக்கு
சொந்தக்காரன் என்றே சொல்லலாம்,

அனைத்து வயது தரப்பினரும் ரசிக்கும்
படியான Feel Good Songs கொடுத்த கார்த்திக்
ராஜாவுக்கு இன்று அகவை தினம்,

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக் ராஜா,

HappyBirthdayMrFeelGood | #MusicTheLifeGiver ❤️