Penbugs
Cinema Inspiring

சண்முக ராஜா மிஷ்கின்!

எழுத்தாளர் பவா செல்லத்துரை இயக்குனர் மிஷ்கினைப் பற்றி இப்படி குறிப்பிடுவார்,
“மிஷ்கின் ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு இல்லாமல் பழகுற ஒரு ஆள் -அதாவது ஆண்கள் கிட்ட பேசும் போது வேறுமாதிரி பெண்களிடம் பழகும்போது வேறுவிதம் என இல்லாமல் பாலின வேற்றுமை இல்லாமல் பழகுபவர்” என்பார்.

இது அவரின் படங்களிலும், கதையிலும் நன்றாகவே தெரியும். தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை கண்ணியமான முறையிலும்,
தைரியம் மிக்கவர்களாகவும் வடிவமைப்பதில் மிஷ்கின் மிக முக்கியமானவர்.

யுத்தம் செய் படத்தில் வரும் தாய் கதாபத்திரம்,
அஞ்சாதே படத்தில் வரும் தங்கை கதாபாத்திரம்,
துப்பறிவாளன் படத்தில் வரும் ஆண்ட்ரியா கதாப்பாத்திரம்(வில்லத்தனம் இருந்தும்) இவை மிஷ்கினின் பெண்ணியம் பேசும் கதாபத்திரங்கள்.

வியாபார ரீதியிலான கருத்து சார்ந்த இடையூறுகள் இருந்தும் தான் சொல்ல வருவதை தைரியமாகவும்,
முடிந்த வரையில் அதற்காக மாற்றியும் படத்தின் காட்சிகளை சேர்க்கவும்/நீக்கவும் செய்தவர்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே,யுத்தம் செய் படங்களில் வரும் மஞ்சள் சேலையில் ஆடும் குத்துப்பாடல்கள் சமரசத்துக்கு உட்பட்டு எடுத்திருந்தாலும் அவற்றை நேர்த்தியுடனும், நெருடல் ஏற்படுத்திடா வகையிலும் கையாண்டு இருப்பார்.

அவர் கிட்டத்தட்ட சமரசங்களுக்கு உட்படுத்தாமல் இயக்கிய படங்கள் என்றால் அது ஓநாயும் ஆடுக்குட்டியும்,பிசாசு, நந்தலாலா என்று அவரே சில பேட்டிகளில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதிலும் ஓநாயும் ஆட்டுகுட்டியும் படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்களற்ற படம் எடுத்து ஏக விமர்சனங்கள் எழுந்தாலும் அதை தீர்க்கமாக எதிர்த்தும், சரி என்று தன் சார்பை பிறருக்கு உணர்த்தியவர்.

மிஷ்கினின் கேமரா கோணங்கள் என்ற தலைப்பிலே நாம் பல கட்டுரைகள் எழுத முடியும். அந்த அளவுக்கு கேமரா மூலம் கதை சொல்லும் கலைஞன். சமகாலத்தில் சிறு வெளிச்சத்திலும், இருட்டாக இருக்கும் subway களில் தமிழ் சினிமாவில் அதிகம் எடுத்தது மிஷ்கின் என்றே நினைக்கிறேன்.

கால்களின் மூலம் கதாபாத்திரத்தை விளக்க முற்படுவது மிஷ்கினின் யுக்தி எனலாம்.
நலிந்த, சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பார்வையற்றோர், திருநங்கைகள், போன்றவர்களை அதிகம் பிரயோகித்ததும், அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை படங்கள் வழியே வழங்கியதும் மிஷ்கின் தான்.

மிஷ்கின் கேமரா ஷாட்ஸ்க்காக மெனக்கெடுவதை பற்றி அவரிடம் உதவி இயக்குனராக இருந்த ஹலித்தா ஷமிம் ஒரு பேட்டியில் “அவர் மாதிரி கேமரா shot காக மெனக்கெடுற ஒருத்தரை பார்க்க முடியாது. எந்த நேரமும் அதை பத்தி தான் யோசிச்சுட்டு இருப்பார். பிசாசு படத்தில் பூ கட்டுரவங்களை ஒரு ஷாட் ல காமிக்கனும் னு இருந்தப்போ, பூ கட்டுறவங்களுக்கு அதை செஞ்சிட்டே இருக்கிறதால விரல்கள் காய்ச்சி போய் இருக்கும் ல” னு சொல்லி அதையும் படத்தில காட்டிருப்பார்” என்று தன் இயக்குனர் பற்றி கூறினார்.

அதுபோலவே இரும்பு திரை படத்தின் இயக்குனர் மித்ரன் “எனக்கு தெரிஞ்சு தமிழ் மக்கள் தியேட்டர்ல ஒவ்வொரு கேமரா ஷாட் and சீன்ஸ் காக கை தட்டினார்கள்னா அது அஞ்சாதே படத்துக்கு தான்” என்று மிஷ்கின் பற்றி கூறி இருந்தார்.

முகமூடி, சைக்கோ போன்ற படங்களின் மூலம் பல தரப்பட்ட விமர்சனங்கள் வைக்க பட்டாலும், அவற்றுக்கான பதில்களை அடுத்த படங்களின் மூலமும், அவை உணர்த்தின பாடங்கள் ஊடாக அவற்றை சரி செய்யவும் தயங்காதவர்.

“முகமூடி படம் சரியா போகாததற்கு நான் தான் காரணம்” என்று பரத்வாஜ் ரங்கனுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டு இருப்பார்.

கலையின் மீதும், இலக்கியத்தின் மீதும் தான் கொண்டு காதலையும், புத்தகங்கள் பற்றியும், தன்னை பெரிதாக பாதித்த இயக்குனர்கள் மற்றும் அவர்களது படைப்புகளையும் மக்களிடம் எப்போது பகிர்ந்திடுபவர்.

இயக்குனராக மட்டுமின்றி “சவரகத்தி” படத்தில் கதாசிரியர், ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,super deluxe மற்றும் சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் அற்புதமாக நடிக்கவும் செய்த மாபெரும் .

இதையெல்லாம் தாண்டி சமூகம் மீதான தனது கோபத்தை, இயலாமையை காட்டிடவும், எல்லையற்ற பேரன்பை விதைத்திட என்னவெல்லாம் தன் கலையின் வழியே பகிர்ந்திட முடியுமோ? அதெயெல்லாம் செய்து கொண்டே இருக்கும் பேரன்பு காரன், மிஷ்கின்.

Related posts

Leave a Comment