இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – வாணி ஜெயராம்| Penbugs

தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்த பாடகி கலைவாணி என்ற வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று…!

அகில இந்திய வானொலியில் அவரின் குரல் ஒலி பரப்பப்பட்டபோது அவருக்கு வயது எட்டு …!

வேலூரில் பிறந்து வளர்ந்த இவர், தான் வேலை செய்த வங்கியின் வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்று அங்க மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போது இவரது திறமையை முதலில் அடையாளம் கண்டு கொண்டது ஹிந்தி திரையுலகம்…!

பின்பு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி,மராத்தி, ஒடியா என பல்வேறு மொழிகளில் பத்தாயிரத்திற்கு பாடல்களைப் பாடியுள்ளார்…!

எல்லா பாடல்களையும் பற்றி சொல்ல ஒரு கட்டுரை பத்தாது எனக்கு பிடித்த சில பாடல்களை மற்றும் இங்கே குறிப்பிடுகிறேன்‌…!

1.மல்லிகை என் மன்னன் மயங்கும்

“என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம் தான்”

என அந்த பூவைப்போலவே மென்மையான குரலில் தமிழ் நெஞ்சங்களை வருடிய குரல், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் கவிஞர் வாலி எழுதிய பாடல் வாணி ஜெயராமை தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய அடையாளத்தை தந்தது …!

2.  அபூர்வ ராகங்கள்

* ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் * கேள்வியின் நாயகனே பாடல்

இதில் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார்…!

அபூர்வ ராகங்கள் படத்தின் முதல் டைட்டில் பாடலையும்(ஏழு ஸ்வரம்), இறுதி கிளைமேக்ஸ் பாடலையும் (கேள்வியின் நாயகனே) வாணி ஜெயராமிடம் இயக்குநர் கேபி பாட வைத்துள்ளார் என்றால் அதுவே அவரின் புகழுக்கு சான்று …!

3. நித்தம் நித்தம் நெல்லு சோறு!

கிராமத்து பேருந்தில் இந்த பாடல் இல்லாமல் ஒரு பயணம் இல்லை எனும் சொல்லும் அளவிற்கான பாடல் .அதுவும் “கீர “என அவரின் உச்சரித்த விதம்லாம் கிராமத்து பெண்ணே பாடியது போன்று இருக்கும் .ராஜாவின் இசையும் , கங்கை அமரனின் வரிகளும் வேறு பக்க பலமாக இருந்து பாட்டை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது..!

4. திருப்புகழ் பாடல் (காவிய தலைவன்)

காவியத் தலைவன் படத்திற்காக ஒரு பாடலை ஏஆர் ரகுமான் இசையில் பாடிய பாடல் …!

பதிமூன்றாவது வயதில் ரகுமான் ஒரு இசைக் குழுவைத் தொடங்கியபோது குத்துவிளக்கேற்றி அந்த இசைக் குழுவைத் துவக்கி வைத்தவர் வாணி ஜெயராம்தான் ….!

இந்த பாடல்கள் மட்டும் இல்லாமல்

* ஒரே நாள்
*வசந்த கால நதிகளிலே
* என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

இவைகளும் என்னுடைய பிளே லிஸ்டில் ஒலிக்கும் பாடல்கள் …!

அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’

சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’

‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’

ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை அகில இந்திய சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர் வாணி ஜெயராம்…!

கிராமிய பாடலாக இருந்தாலும் சரி, கர்நாடக இசையாக இருந்தாலும் சரி,
பக்தி பாடல்களாகவும் இருந்தாலும் சரி,
எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் உச்சரிப்பை கெடாமல் பாடுவதுதான் வாணி ஜெயராமின் ஸ்பெசல் சுமார் 19 மொழிகளில் பாடியுள்ளவர் வாணி ஜெயராம்…!

அவர் பாடிய பாடல்களை பற்றி கூற அவரின் பாடலின் வரியே அவருக்கு

” நினைத்தாலே இனிக்கும் “

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி ஜெயராம் அம்மா …!