Penbugs
Editorial News

இடிக்கப்பட்ட 87 வருட பழமையான பாலம்.!

கடந்த 1933-ம் ஆண்டு சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் கட்டப்பட்ட யானைக்கவுனி மேம்பாலம் மிகவும் பழமையான பாலங்களில் ஒன்றாகும். இந்த மேம்பாலத்திற்கு அடியில் 8 தண்டவாளங்கள் செல்கின்றன. இதற்கிடையே சென்னை சென்டிரல் பணிமனையின் விரிவாக்கப் பணிகள், சென்டிரல் ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டுமானால் இந்த பாலத்தை சீரமைத்து அகலப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்ற சூழ்நிலை உருவானது.

இதனிடையே பாழடைந்த இந்த மேம்பாலத்தை இடிக்க வேண்டுமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் சேவையை நிறுத்தி, 72 மணி நேரம் இதற்காக செலவு செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதாலும், இதனால் ரெயில் சேவை மார்ச் மாதத்தில் இருந்து முற்றிலும் நிறுத்தப்பட்டதாலும், அதனை பயன்படுத்தி தெற்கு ரெயில்வே, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு, 87 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தை இடிக்கும் பணி துரிதமாக மேற்கொண்டு முடிக்கப்பட்டது.

Related posts

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

நட்பின் கதைகள் – நட்பு 2

Deepak Krishna

டிசம்பர் 14 முதல் புறநகர் ரயில்களில் நேரத் தடையின்றி பெண்கள் செல்லலாம் – ரயில்வே துறை

Penbugs

கோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு

Penbugs

ஊரடங்கு காலத்தில் 1,150 டன் மருத்துவப் பொருள்களை கொண்டு சென்ற ரயில்வே

Penbugs

Over 100 COVID19 cases reported at IIT Madras campus

Penbugs

Old Madras in Pictures

Penbugs