Penbugs
Cinema

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துருவ நட்சத்திரம்..!

ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து அந்த வெற்றிக்காக காத்திருப்பும் , அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் எந்த துறையாக இருந்தாலும் வெற்றி பெற்றலாம் , திரைத்துறையில் அப்படிபட்ட வெற்றியை பெற்றவர் சீயான் விக்ரம் அவர்கள் …!ஒரு வெற்றியை பெற ஒரு‌ ஆண்டு ,இரண்டு ஆண்டுகள் இல்லை ஒன்பது ஆண்டுகள் காத்திருக்க வைத்தது இந்த தமிழ் திரையுலகம் , அந்த ஒன்பது ஆண்டுகள் அவர் பட்ட இன்னல்களுக்கு வேறு யாராக இருந்தாலும் சினிமாவை விட்டு ஓடி இருப்பார்கள் …!என் காதல் கண்மணி , தந்துவிட்டேன் என்னை , மீரா , கண்டேன் சீதையை , புதிய ‌மன்னர்கள் , உல்லாசம் , ஹவுஸ்புல் என ஆரம்ப கால படங்கள் அனைத்தும் தோல்வி படங்கள் . அதிலும் தந்துவிட்டேன் என்னை படத்தின் இயக்குனர் தமிழ் திரையுலகமே பார்த்து வியந்த ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா, ரவிச்சந்திரன், காஞ்சனா என எத்தனையோ நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி, அவர்களை முதல் படத்திலேயே உச்சாணிக்கொம்பில் ஏற்றிய ஸ்ரீதர் அவர்களின் படம் அந்த படமே தோல்வியை தந்தது விக்ரமின் துரதிர்ஷ்டம் ‌‌..‌.!அப்போதுதான் பின்னணிக் குரல் தருவதற்கு வாய்ப்புகள் வந்தன. வந்த வாய்ப்பை ஏன் விட வேண்டும் அதுவும் சினிமாவேலைதானே’ என்று சந்தோஷமாகச் செய்தார்…!’அமராவதி’ படத்தில் அஜித்துக்கு விக்ரம்தான் குரல் கொடுத்தார். அப்பாஸ், பிரபுதேவா என பல நடிகர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார் விக்ரம் …!காதலன் , மின்சார கனவு படங்களில் பிரபுதேவாவின் நடிப்பினை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது விக்ரமின் குரல் ‌….!99ஆம் ஆண்டு விக்ரமின் வாழ்வில் முக்கியமான ஒரு ஆண்டு பாலா எனும் இளைஞர் ஒரு காதல் கதையை விக்ரமிடம் சொல்கிறார் அதில் நடிக்க விக்ரம் சம்மதம் தெரிவித்து விட்டு ,தன் வீட்டில் இதுதான் என் கடைசி முயற்சி இதில் வெற்றி பெறாவிட்டால் சினிமாவை விட்டு விலகி விடுகிறேன் என்று கூறி சம்மதம் வாங்குகிறார் ‌.
படம் வளரும்போதே நிறைய பொருளாதார பிரச்சினைகள் ஆனாலும் கதையின் மீது கொண்ட நம்பிக்கை , பாலாவின் மீது கொண்ட நம்பிக்கையிலும் அனைத்து இல்லல்களையும் பொறுத்து கொண்டார் .படம் பார்த்த விநியோகஸ்தர்கள் யாருக்கும் படம் பிடிக்கவில்லை பாலா தன் தயாரிப்பாளரையே படத்தை ரிலீஸ் செய்து தருமாறும் , நிச்சயம் வெற்றி பெறும் அதற்கு உத்தரவாதமாக வெற்று பேப்பரில் கையெழுத்து போட்டு தருவதாகவும் கூறினார் . அத்தனை தடைகளை மீறி சேது தமிழ் சினிமாவின் மைல் கல் படமாக அமைந்தது விக்ரம் சீயான் விக்ரமாக மாறினார் …!சேதுவை பற்றி பாலா தன் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு செய்தி :ஷூட்டிங் ஸ்பாட் எங்க இருந்தாலும் விக்ரமுக்கு மட்டும் வண்டி கிடையாது !ஏழட்டு கிலோ மீட்டர் தூரமாக இருந்தாலும் நடந்துதான் வருவார். நாளுக்கு நாள் இளைத்து, கருத்து பலவீனமாகிக்கொண்டே இருந்தது உடம்பு. ஒரு கட்டத்தில் நினைவிழக்க ஆரம்பித்தார். கூப்பிட்டால் கூட காதில் விழாது, பட்டினிச்சோர்வில் காதடைத்து போய்கிடப்ப்பார். தொட்டு உலுக்கினால் தான், பாதி கண்கள் திறக்கும்.
ஒரு நாள் அத்தினை கூட்டமும் லன்ச் பிரேக்கில் சாப்பிட போய்விட ,குப்பைக்கு நடுவே சுருண்டு கிடந்த விக்ரமை பார்த்த போது, எனக்கு பொங்கிவிட்டது, இப்படி ஒரு வெறியா? தவமா? அற்பணிப்பா?
‘உன்னை போயா ராசி இல்லாதவன்னு ஒத்துக்குச்சி இந்த சினிமா? உன்னை கொண்டு வாரேன் பாரு.. சென்டிமென்ட் சனியனை எல்லாம் அடிச்சி நொறுக்குறேன் பாரு’.. – குமுறிகுமிறி எனக்குள் வன்மம் தாண்டவமாட ஆரம்பித்தது….!#இவன்தான்_பாலா
#பக்கம்155சேதுவிற்கு பின் விக்ரமின் வாழ்க்கை மாறியது ‌‌.தன் நண்பன் தரணியின் இயக்கத்தில் தில் ,தூள் , சரணின் இயக்கத்தில் ஜெமினி , ஹரியின் இயக்கத்தில் சாமி , அருள் , ஷங்கரின் இயக்கத்தில் அந்தியன் என தமிழ் சினிமாவின் பெரிய கமர்ஷியல் வெற்றி படங்களில் நடித்தார் …!கமர்ஷியல் கதைகளுக்கு நடுவே காசி , பிதாமகன் , சாமுராய் ,கிங் ,மஜா என வித்தியாசமான கதைகளிலும் நடித்தார் ..!இதில் தன் ஆருயிர் நண்பன் பாலாவின் இயக்கத்தில் வந்த பிதாமகன் படத்திற்காக தேசிய விருது விக்ரமுக்கு வழங்கப்பட்டது …!” ஐ ” படத்திற்காக விக்ரமின் உழைப்பை கண்டு இந்திய திரையுலகமே மிரண்டது இத்தனை வெற்றிகளை பார்த்த பின்பும் தன் உடலை வறுத்தி கொள்ள ஒருவர் தயார் எனில் அது அவரின் கலைபசியே …!”ஐ “படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று ஓடியதில் சிறிது வருத்தமே அந்த ஆண்டின் தேசிய விருதில் விக்ரமின் பெயர் இடம்பெறாமல் போனது பல வித கேள்விகளை எதிர்கொண்டது அதுவே விக்ரமின் பெரிய வெற்றி‌…!தன் உடலை வருத்தி நடிக்கும் விக்ரம் கதைத் தேர்வுகளில் கோட்டை விடுவதாக ஒரு விமர்சனம் வைக்க பட்டு வருகிறது . அதனை உறுதிப்படுத்துவது போலவே சமீபத்தியமாக வந்த அவரின் தோல்விகள் அமைந்துள்ளது.மீண்டும் அவர் வெற்றி பாதைகக்கு திரும்ப வேண்டும் ஏனெனில் இந்த இடத்தை பிடிக்க விக்ரம் கொடுத்த உழைப்பும் , நேரமும் மிக அதிகம்…!அடுத்து வர‌ இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்தாவது விக்ரமின் வெற்றி தொடங்க வேண்டும் .ஏனெனில் தமிழ் சினிமாவின் துருவ நட்சத்திரம் சீயான் விக்ரம் …!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீயான் விக்ரம்….!

Related posts

ஹிப்ஹாப் ஆதி…!

Penbugs

ஹாட்ஸ்டாரில் மூக்குத்தி அம்மன் ரிலீஸ் : ஆர் ஜே பாலாஜி அறிவிப்பு

Kesavan Madumathy

வித்யாசாகர் ஒரு வித்தைக்காரன்..!

Penbugs

மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

Kesavan Madumathy

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் காலமானார்.

Penbugs

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

Penbugs

நம்ம வீட்டு பிள்ளை | சிவகார்த்திகேயன்!

Penbugs

டாக்டர்களுக்கு சல்யூட் – சிவகார்த்திகேயன்!

Penbugs

ஜீவன் போற்றும் குரல்

Shiva Chelliah

கௌதமை அறிந்தால்..!

Penbugs

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் பாடகர் எஸ்பிபி

Penbugs

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs