Penbugs
Editorial News

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நல்லக்கண்ணு ஐயா..!

புகைப்படத்துல இருக்கிறவர்தான் நல்லகண்ணு இவரைத்தான் நம்ம ஜெயிக்க வைக்கிறது இல்லையே இப்படி பிறந்தநாளுக்காச்சும் நினைவு கூறலாம் ???

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து தன்னை கம்யூனிச கொள்கைகள்ல ஈடுபடுத்தி கொண்டு இன்று வரை அதற்காக உழைத்து கொண்டிருப்பவர் நம் நல்லக்கண்ணு ஐயா..!

கம்யூனிஸம் தமிழகத்தில் தோற்றாலும்
மக்களுக்கான கம்யூனிஸவாதிகளின் போராட்டம் ஓயவில்லை..
ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு
கம்யூனிஸத் தலைவர் என்றால் மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது நல்லக்கண்ணு அவர்கள்தான்..!

“காங்கிரஸ்காரரான பீட்டர் அல்போன்ஸ் தன்னிடம் சொன்னதாக ‘நீயா.. நானா’ கோபிநாத் எழுதி இருந்தது இது:

காரில் சென்றுகொண்டு இருந்தாராம் பீட்டர் அல்போன்ஸ். விடியற்காலை. சோடா சாப்பிடலாம் என்று தோன்றி இருக்கிறது..!

உடனே காரை நிறுத்தச் சொல்லிவிட்டு, எதிரில் இருந்த கடையில் சோடா வாங்கி வரச் சொல்லி இருக்கிறார் டிரைவரிடம். அப்போது அருகில் இருக்கும் பஸ் ஸ்டாண்டில், ஒரு பெரியவர் தலைக்குத் தன்னுடைய கைப் பையை வைத்துத் தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறார்….!

தூங்கும் அவரை எங்கேயோ பார்த்த ஞாபகத்தில் அருகில் சென்று பார்த்திருக்கிறார். யார் என்று தெரிந்து விட்டது. ‘ஐயா… இங்கே இப்படிப் படுத் திருக்கிறீர்களே… நீங்க எங்கே போகணும். வாங்க அங்கே உங்களைக் கொண்டுவிட்டு நான் போகிறேன்’ என்று அழைத்துள்ளார் பீட்டர் அல்போன்ஸ்…..!

‘ராத்திரி கூட்டம் முடிய மணி ரெண்டாயிடுச்சு. அதான் இப்படி வந்து படுத்துட்டேன். காலையில இன்னொரு ஊருக்குப் போகணும். நீங்க போங்க, உங்களுக்கு ஏன் சிரமம்?’ என்று வர மறுத்திருக்கிறார் பெரியவர்.

அந்தப் பெரியவர் தான் நம் தோழர் நல்லக்கண்ணு!’

எளிமையும் இனிமையும் தன் தனிப்பண்பாக கொண்டவர் தான் அந்த முதியவர்..!

ஆடம்பரம் நிறைந்த இந்த பரிணாம உலகில் இப்படி ஒரு தலைவன் உருவானது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று..!

தலைவன் என்பவன் வெற்றியை வாங்கி தருபவன் மட்டும் அல்ல…! தனக்கான மற்றும் தன்னை சார்ந்தவர்களின் நலனுக்காக வெற்றி தோல்விகளை பொருட்படுத்தாமல் போராடி கொண்டிருப்பவனே உண்மையான தலைவன்..!

மக்களுக்காக தள்ளாத வயதிலும் இன்னமும் போராடி கொண்டிருக்கிறார் இந்த தலைவன்..!

தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு தொண்ணூற்றி நான்காவது அகவை தின நல்வாழ்த்துகள்???