இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித் ஸ்ரீராம்!

CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
159,138
+1,052 (24h)
Deaths
4,542
+8 (24h)
Recovered
67,983
42.72%
Active
86,613
54.43%

Worldwide

Cases
5,821,077
+36,474 (24h)
Deaths
358,104
+1,167 (24h)
Recovered
2,521,608
43.32%
Active
2,941,365
50.53%
Powered By @Sri

சில குரல் தான் படத்தின் கமர்சியல் வேல்யூக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்‌ . படத்தின் விளம்பரத்துக்காகவே பயன்படுத்தப்படும் பாடல்கள் வருகின்ற இந்த காலகட்டத்தில் சித்தின் குரல் மட்டுமே படங்களுக்கு பெரிய விளம்பரமாக இருந்து வருகிறது…!

பெரும்பான்மையான சிங்கிள் டிராக் வெளியீட்டில் வெளியிடப்படும் பாடல்கள் சித்தின் பாடல்களே , ஏனெனில் ஒரு குரலுக்கு என்று அதிக ரசிகர்கள் வட்டம் அதுவும் குறைந்த அளவில் பாடலிலே வந்து இருப்பது சித்துக்கு மட்டுமே…!

குட்டு பட்டால் மோதிர கையால் குட்டுப்பட வேண்டும் என்பதற்கு ஏற்ப முதல் பாட்டே ரகுமானின் கையால் கிடைத்தது சித்தின் பெரிய பலம் …!

அடியே அடியே , என்னோடு நீ இருந்தால் , தள்ளிப் போகாதே , மெய் நிகரா , சச்சின் , மாச்சோ என ரகுமானின் இசையில் பாடிய அனைத்து பாடல்களும் அதிரி புதிரி ஹிட் ….!

தற்போது மியூசிக்கல் சென்சேஷனாக இருக்கும் அனிருத்திற்கு என்னை மாற்றும் காதலே , சந்தோஷ் நாராயணனுக்கு என்னடி மாயாவி பாடலும் சித்திற்கு இன்னும் ரசிகர் வட்டத்தை பெரிதாக்கியது …!

மூன்று வருடம் தாமதமாக வந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்திற்கு அத்தனை தாமதத்தின்போதும் படத்தை உயிர்பித்து வைத்து இருந்தது மறு வார்த்தை பேசாதே ,விசிறி பாடல்கள் மட்டுமே ….!

சித்தை பட்டி தொட்டி எங்கும் எடுத்து சென்றது ” கண்ணாண கண்ணே ” பாடல் , பொதுவெளியில் பத்தில் எட்டு பேர் ரிங்டோன் இந்த பாட்டு வைக்க சித்தின் உருக வைத்த குரலும் ஒரு காரணம் , ஆராரிராரோ என்று சித்தின் குரல் வரும் இடங்களில் தியேட்டரில் வந்த கோரஸ் குரல்களே அந்த பாட்டின் வெற்றி …..!

அதே இமானின் இசையில் வந்த ஆலங்குருவிகளா பாடல் இன்னும் அதிக கவனம் ஈர்தது இருக்க வேண்டிய பாடல்..!

இன்கேம் இன்கேம் காவாலி பாடல் முழுவதும் தென் இந்தியா முழுவதும் பிரபல பாடகர் என்ற நிலையை அடைந்த சித் , சமீபத்திய பிளாக் பஸ்டர் பாடலான சாமஜாவரகமான இன்னும் பெரிய பாடகராக உருவெடுத்துள்ளார்…!

ராஜாவின் இசையில் பாடாமல் ஒரு பாடகனின் இசை வாழ்க்கை முழுமை பெறாது , சைக்கோ திரைப்படத்தில் உன்னை நினைச்சு , நீங்க முடியுமா இரண்டு பாடலும் சித்திற்கு வேறு ஒரு‌ பரிணாமத்தை அளித்தன…!

இன்னும் நிறைய நல்ல பாடல்கள் வர வேண்டும் சித் ஸ்ரீராம்…!