Penbugs
Cricket Men Cricket

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின்!

சச்சின் ‌டெண்டுல்கர் …!

இந்த மனுசனால் கிரிக்கெட்டில் ஏற்பட்ட தாக்கம் இன்னும் எத்தனை வருசம்
ஆனாலும் இருக்கும் .

சச்சின் வெறும் வார்த்தை இல்லை இந்திய கிரிக்கெட் மட்டுமில்லாமல் ,உலக கிரிக்கெட் வரலாற்றில் அவர் ஒரு சகாப்தம் …!

சச்சின் பல இனிமையான மெமரிஸ் கொடுத்து இருந்தாலும் சில மேட்ச்லாம் ரொம்பவே கிட்டதட்ட ஹார்ட் பிரேக்கா கூட போய் இருக்கு எனக்கு அப்படியான பத்து மேட்ச் இங்க சொல்றேன் …!

இந்தியா – பாகிஸ்தான் 2003 உலககோப்பை :

கிரிக்கெட் ரொம்ப தீவிரமாக கவனிக்க ஆரம்பிச்ச வருடம் அது , எங்க போனாலும் இந்தியா பாகிஸ்தான் பத்தி மட்டும் தான் பேசுவாங்க முதன்முதலில் நான் லைவ்வா பார்த்தா ஒரு ஹீட் மேட்ச் . சச்சின் எல்லா மேட்ச்சும் நான் ஸ்டிரைக்ல தொடங்குவார் அந்த மேட்ச் அவரே ஸ்டிரைக் பண்ணி இன்னிங்ஸ் ஆரம்பிச்சார் ,அக்தர் ஓவர் அந்த சிக்ஸ் இன்னிக்கு வரைக்கும் ரொம்ப பேவரிட் சிக்ஸ் ,நல்லா போய்ட்டு இருந்த மேட்ச்ல சச்சின் தசைபிடிப்பு காரணமாக ஓட முடியாம பை ரன்னர் வைச்சி ஆடுவார் அப்ப அக்தர் ஓவரில் பவுன்சரில் அவுட் ஆகிட்டு சதம் அடிக்காம போனது முதல் ஹார்ட் பிரேகிங் மேட்ச் …!

இந்தியா – ஆஸ்திரேலியா 2003 பைனல் :

இந்தியா பைனல் ஆடப்போது ஆனா அது ரொம்பவே வலிமையான ஆஸ்திரேலியா டீம் கூட வேற ரிக்கி‌பாண்டிங் நல்லா பொளந்து கட்டிட்டு 359 ரன் டார்கெட் வேற அப்பலாம் 300 அடிச்சாலே சேசிங்லாம் ரொம்ப கஷ்டம் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் மேட்ச் பார்க்க உக்காந்தா மெக்ராத் முதல் ஓவர் முதல் மூனு பால் டாட் நாலாவது பால் ஒரு நான்கு அடுத்த பால் பவுன்சர் மெக்ராத் கிட்டயே கேட்ச் அதோட உலககோப்பை கனவும் அதோட கை நழுவி போனது ‌‌…! (சச்சின் அந்த உலக கோப்பையில் 673 ரன்‌ அடிச்சு தங்க பேட் வாங்கினார்)

இந்தியா – பாகிஸ்தான் 2004 ராவல்பிண்டி :

பாகிஸ்தான் முதலில் ஆடி 329 ரன் அதுக்கு அடுத்து ஆரம்பிச்சது இந்தியாவின் பேட்டிங் சச்சினுக்கு யாரும் சப்போர்ட் பண்ணாம அவர் சதம் அடிச்சும் மேட்ச் ரிசல்ட் நமக்கு சாதகமா வர்ல…!

இந்தியா – பங்களாதேஷ் 2007 உலககோப்பை :

இந்த மேட்ச் சச்சின் ஓபனிங் வர்றாம போனதே பெரிய அப்செட் அதுக்கே ஏத்த மாதிரியே இந்த மேட்ச் ரிசல்ட் சச்சின் அவுட் ஆகிட்டு போகும்போது ஒரு நிசப்தம் மட்டுமே இருந்துச்சு

இந்தியா – இங்கிலாந்து 2007 :

சச்சினின் நெர்வஸ் நைன்டிஸ் பத்தி‌ பரவலாக விமர்சனம் வந்த காலம் இந்த மேட்ச்சும் 90களில் இருந்து ரொம்பவே பதட்டம் ஆகிடுவார் . 95 ரன் இருக்கும்போது கூட மிஸ் ஷாட்லாம் ஆடுவார் ,99 ரன் வந்த அப்பறம் பிளின்டாப் ஓவர் பவுன்சர் பால் கீபிங் கேட்ச் ஆகிட்டு சோகமா போய்டுவார் …!

இந்தியா – ஆஸ்திரேலியா ஹைதராபாத் 2009 :

முதலில் ஆடின ஆஸ்திரேலியா 350 ரன். சேவாக் கொஞ்ச நேரம் ஆடிட்டு அவுட் ஆக அடுத்து வந்த மிடில் ஆர்டர் டோடலா கொலாப்ஸ் ஆகிடும் . இந்தியாவை விட்டு போன மேட்ச் சச்சின் – ரெய்னா பார்டனர்ஷிப் மேட்ச் ரொம்ப நல்லா எடுத்துட்டு போவாங்க . பொதுவா சச்சின் முதல் பேட்டிங் பண்ணாதான் ஆடுவார் சேசிங்னா சரியா ஆட மாட்டார்னு ஒரு கருத்து இருக்கும் இந்த மேட்ச் சச்சினின் ருத்ரதாண்டவம் ஆனாலும் சச்சின் அவுட் ஆனதால் 3 ரன்னில் இந்தியா தோத்துடும் …!

இந்தியா – ஆஸ்திரேலியா சிபி சீரியஸ் இரண்டாவது பைனல் 2008 :

முதல் பைனல் சேசிங்ல சதம் , இரண்டாவது பைனலும் கிட்டத்தட்ட சதம் அடிக்க வாய்ப்பு வந்து கிளார்க் ஓவரில் பாண்டிங் கிட்ட அவுட் ஆகிட்டு போனது ரொம்ப கடுப்பான மொமண்ட் …!

இந்தியா – இலங்கை 2011 பைனல் :

இரண்டு உலக கோப்பை கனவு பறிபோனதை பார்த்து இதுதான் கடைசி உலககோப்பை இவருக்காக ஜெயிச்சே ஆகனும் பைனல் சேவாக் அவுட் , குலசேகரா ஓவர் அந்த டிரேட் மார்க் ஸ்டிரைட் டிரைவ் ,சச்சின் ஆடிடனும் பிரேயர்ஸ் வேற அப்ப மலிங்கா ஓவரில் கீபிங் கேட்ச் ஒட்டு மொத்த ஸ்டேடியமும் நிசப்தமாக தருணம் உண்மையில் ஒட்டு மொத்த நாடுமே அந்த செகண்ட் ஹார்ட்‌ பிரேக் மொமண்ட்தான் …!

இந்தியா – பங்களாதேஷ் 2012 :

உலக கோப்பையின் போதோ நூறு சதம் முடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் பிரசரும் ரொம்பவே அதிகம் ஆனால் அதை எட்ட‌ முடில . உலக கோப்பை வாங்கியாச்சு இன்னும் ஓய்வு அறிவிப்பு வர்லயே என்ற விமர்சனம் வேறு அப்பதான் சதமடிச்சு தன்னோட பேட்டை ஒரு‌ மாதிரி‌ விரக்தியா பார்ப்பார் அந்த நூறாவது சதம் ரொம்பவே கஷ்டபடுத்திய சதம் …!

அவரே இந்த சதத்தை பத்தி ரொம்ப கஷ்டமா சொல்லி இருப்பார் ;

Wherever I went, to a restaurant, the house keeping, the room service, whoever I met just spoke about the 100th hundred
It became a little difficult mentally, because I am not playing only for my 100th hundred.
“The 99 hundreds that I scored, nobody spoke about them. Everyone had their opinion but eventually I have got to do what is important for the team.

இந்திய – வெஸ்ட் இண்டீஸ் 2013 ;

சச்சின் தன்னுடைய கடைசி டெஸ்ட் மேட்ச் ஆடிட்டு அந்த பேரவல் ஸ்பீச் மனசை உலுக்கிய ஒண்ணு . இவ்ளோ நாள் யாருக்காக பார்தது கைதட்டி ரசிச்சோமோ , சொந்த உறவில் இல்லாம கடவுள் கிட்ட அதிகமா யாருக்கு வேண்டினமோ அந்த மனுசன் இதோட இந்தியாவுக்காக ஆட மாட்டார் நினைக்கும்போதே ஒரு‌ மாதிரி ஆகிட்டு கடைசியா பேசிட்டு சென்டர்‌ பிட்ச் தொட்டு வணங்கினது எத்தனை காலம் ஆனாலும் கூட நினைவில் இருந்து மறையாத ஒண்ணு…!

இந்த ஹார்ட் பிரேக்கிங்லாம் ரொம்ப நன்றி சச்சின் …!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் ❤️❤️❤️

Related posts