Penbugs
CricketMen Cricket

இறைபாலன் அவன்

ஒரு ஊர்ல ஒரு மன்னன் இருந்தாராம்
அந்த மன்னன் போருக்கு போறதுக்கு
முன்னாடி தன் படைத்தளபதிகள
கூப்பிட்டு போர்க்களத்தின் யுக்திகளை
தெரிவிப்பார், அடுத்த நாள் போரின்
போது எதிரி நாட்டு மன்னன் இந்த
மன்னன் தலைக்கு பந்தயம் வைக்குறத
விட முக்கியமா இந்த மன்னனோட
படைத்தளபதிகள் மேல தான்
தன்னோட முதல் குறிய வச்சு
ஆட்டத்த ஆரம்பிப்பானாம்,

அப்படி படைத்தளபதிக்கு
குறி வைக்கும்போது அந்த
படைத்தளபதிகளுள் முதன்மை
தளபதிக்கு தான் தன்னுடைய முதல்
குறியை வைப்பான், ஏனென்றால்
அவன் தான் தனக்கு கீழிருக்கும்
படைத்தளபதிகளுக்கு முன்னோட்டமாய்
அமைவான் அதற்காக,

எதிரி நாட்டு மன்னன் போரில்
முதன்மை படைத்தளபதியை வீழ்ச்சி
செய்ய நிறைய யுக்திகளை கையாண்டு
கொண்டே இருப்பான், ஆனால் அந்த
முதன்மை படைத்தளபதி தன்
சாதுர்யத்தால் எதிரி நாட்டு
மன்னனின் படையை ஓட வைப்பான்,
அந்த மன்னனுக்கும் அடுத்து இந்த
நாட்டினர் மீது படையெடுத்து போவதற்கே
அச்சம் ஏற்படும் வகையில் ஒரு
கில்லாடி வித்தையை அந்த மன்னனின்
கண்ணுக்குள் விட்டு ஆட்டியிருப்பான்,

தன் மன்னனுக்கு ஒரு பிரச்சனை
என்றால் முதன்மை படைத்தளபதியாய்
சட்டென்று தன் கீழிருக்கும் படைகளை
கூட்டிக்கொண்டு போருக்கு செல்வான்,

ஒரு நிலையில் தலைவனே வீழ்ந்தாலும்
ஒரு முதன்மை படைத்தளபதியாய்
தனி ஒருவனாய் நின்று தன் மன்னனுக்கு
வெற்றி தேடி தருவான் தன் ரத்தம் சிந்தி,

அப்படி ரத்தம் சிந்தி போரில் வெற்றி
பெற்று வரும்போது அவன் அந்த நாட்டு
மக்களுக்கு ஒரு கடவுள் போல் காட்சி
தருவான்,

வரத்தை கொடுப்பவன்
மட்டும் கடவுள் அல்ல, தன் நாட்டு
மக்களின் வரத்தை தெரிந்துகொண்டு
தன் மன்னனுக்கு துணையாக நின்று
மக்களின் வரத்தை தன் செயல் மூலம்
கொண்டு சேர்க்கும் முதன்மை
படைத்தளபதியான இவனும் கடவுள்
தான்,

நாட்டிற்கு மன்னன் மாறினாலும்
எந்த மன்னன் வந்தாலும் அந்த
மன்னனின் ஆணைக்கிணங்க
தன் முதன்மை படைத்தளபதி எனும்
வேலையை சரி வர செய்யும்
நாட்டு மக்களின் செல்ல பிள்ளை இவன்,

வயது காரணமாக பணியை விட்டு
விலகினாலும் இன்றும் மக்கள்
மத்தியில் இவன் ஒரு இறை பாலனே..!!

HappyBirthdaySachinTendulkar