Penbugs
Cinema Cricket Inspiring IPL Men Cricket

இரு துருவங்களின் எழுச்சி

நீயா நானா என்று மார் தட்டி கொள்ள
இந்த போட்டி விளையாடவில்லை,

நாளைய சங்கதி பேசணும்
நம்ம யாரு எவருன்னு
அதுக்காக ஆடுவோம் இந்த ஆட்டத்த,

சிதைந்து காணாமல் போய்
அங்கும் இங்குமாய் சிதறிக்கிடந்த ஒரு
படையை கையில் கொடுத்து போருக்கு
செல் என்று அந்த மன்னனை அந்நாட்டின்
அதிகாரவர்க்கம் அனுப்பி வைக்கிறது
மைதானத்திற்கு,

அம்மன்னனோ பெங்கால் நாட்டின்
அரசவை குடும்பத்தை சேர்ந்தவன்,
எது செய்யதான்னு சொல்றியோ
அதை சரியா செஞ்சு முடிக்குற ஒருத்தன்,

எதிரணிக்கு போர்ல நிறைய காயம் படுது
ஒவ்வொரு போட்டியிலும்,அதே நேரத்தில்
இத்தலைவனின் படையிலும் ஆங்காங்கே
சில சேதங்கள் தன் படையில்,

பிறகு சிதைந்து இருந்த படை
தலைவனின் வழி நடத்தையால்
பலம் பெற்றது,சரியான படை
போருக்கு ஆயத்தம் ஆனது,நிறைய
வெற்றிகளையும் குவித்து வந்தது,

போட்டியிடுவது வீரத்திற்காக அல்ல
இளைய தலைமுறைகளுக்கு
நம் சிதைந்த வரலாறை மீண்டும்
போட்டியிட்டு வரலாற்றை மாற்றி
கட்டமைப்பு செய்யுங்கள் என்பதை
கற்றுக்கொடுக்கும் கால நேரம்,

ஒரு நாட்டோட போர் படைய பாத்து
மத்த நாடுகள் பயந்து நடுங்குனப்போ
தன்னோட படைய கூட்டிட்டு முன்னாடி
முன்னேறி வந்து அந்த தலைவன்
எதிர்த்தான்,

ஆனா போர்ல அந்த தலைவன்
தோல்விய மட்டுமே சந்திச்சான்,

அதுக்கு முன்னாடி அந்த தலைவன்
தன்னோட படையால் பெற்று தந்த
வெற்றிய எல்லாரும் மறந்து அவன்
இப்போ தோத்துட்டான் – ன்னு தான்
ஊரே பேசுனாங்க,

ஆயிரம் வெற்றிகளை பெற்ற
ஒரு அரசன் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில்
தோல்வி அடைந்தால் உலகம் அந்த
தோல்வியை தானே பெருசாக பேசும்
இது வழக்கம் தானே,

ஆனா அங்க யாருக்கும் தெரியல
அடுத்த தலைமுறையில ஊரே புகழ்ந்து
கை கூப்பி கும்பிட போகும் மரத்துக்கு
விதை இங்க இருந்து தான் பிறக்க
போகுதுன்னு,

சில உள்நாட்டு அதிகாரவர்க்கத்தின்
சூழ்ச்சியால் அத்தலைவன் நிறைய
புறக்கணிக்கப்படுகிறான் ஒரு காலத்தில்,

தன்னுடைய திறமையை மீண்டும் மீண்டும்
நிரூபித்து இது தான் நான் என்று சொல்லும்
அளவிற்கு செய்கை செய்து காமித்தாலும்
அதிகாரவர்க்கத்தின் கோர
தாண்டவத்தினால் அத்தலைவன்
மனமுடைந்து வெளியேறுகிறான்
கலங்கிய கண்களுடனும்
பேரிடர் தாக்கிய நெஞ்சத்துடனும்,

போகும் போது தான் போட்ட துளிர்
விதைகளை பார்த்து அத்தலைவன்
சொன்னான்,

ஜெயிக்குறோமே தோற்க்குறமோ
முதல சண்ட செய்யணும்,

விட்ராதிங்கடா தம்பிங்களா
இது நம்ம மண்ணு நம்ம ஊரு
நம்ம தான்டா செஞ்சு காட்டணும்,

நீங்க ஜெயிக்கணும்ன்னு
நினைச்சீங்கன்னா விளையாடுங்க
வெறித்தனமா விளையாடுங்க உங்க
ஆட்டத்துல ஆக்ரோஷத்த காமிங்க
பேச்சுல இல்ல,

சிதைந்து போன படையை சிற்பமாக
உருவாக்கிய தலைவன் நாளை ஊரே
தெய்வமாக கும்பிட போகும் ஆலமரத்திற்கு
விதை போட்டு நீர் ஊற்றி பாசனம் செய்து
விட்டு போகிறான் அத்தலை மகன்,

செந்தில் (சச்சின்)
குணா (சேவாக்)
வேலு (ஜாகீர்)
தம்பி (யுவராஜ்)

இவங்க எல்லாரையும்
அன்பு (தோனி) வாழ்க்கையோட
இணைக்குறது “ராஜன் (தாதா) ” தான்,

இறுதி நாளில் அன்பு ராஜனிடம்
நம் படைக்கு இன்று நீங்கள் தான்
தலைவனாக எங்களை வழி நடத்த
வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறான்,

அன்புவின் பாசக்கட்டளையை
ராஜன் ஏற்கிறான்,

இது அன்போட விஸ்வாசம்
தன்னோட ராஜன் அண்ணனுக்கு,

~ The Rise of Anbu,

நாட்கள் வருடங்களுக்காக மாறுகிறது
ராஜன் போட்ட விதை மரமாக மாறி காட்சி
அளிக்கிறது,

பல சம்பவங்கள்,பல யுத்த களங்கள்,
பல சுழற்சி முறை அன்பு -வினால் தன்
படைக்குள் செய்யப்படுகிறது,

அன்பு மேலே ஏறி வருகிறான்
தன் படைத்தளபதிகளுடன்,

அடுத்த சில வருடத்தில் இப்படை
தோற்க்கின் எப்படை வெல்லும் – ன்ற
அளவிற்கு அன்புவின் படை உலகமே
வியக்கும் அளவு கோப்பையை வென்று
சாதித்து காட்டுகிறது,

ராஜனை எதிர்த்த பல படைகள்
அன்புவினால் அவன் படை கொண்டு
தந்திரமாக சூர வதம் செய்யப்பட்டது,

தன் நாட்டின் இருபத்தெட்டு ஆண்டு
கனவை அன்பு தன் மக்களுக்கும்
ராஜனுக்கும் நனவாக மாற்றிக்காட்டினான்
ராஜன் கொடுத்து சென்ற தளபதிகள்
நிறைந்த படையை வைத்து,

இதன் பிறகு அன்பு செய்த சம்பவங்கள்
ஒவ்வொன்றும் ஊருக்குள்ள பெரிய
ஐட்டங்காரன் இறங்கிட்டான் – ன்ற
ரேஞ்சுக்கு பேசப்பட்டது,

ராஜன் பெரிய கோவக்காரன்
அன்பு ரொம்ப அமைதியானவன்
ஆனா சிரிச்சிட்டே சம்பவம் செய்வான்,

அவன் சிரிச்சா அன்னக்கி
எதிர் படைக்கு படையல் விருந்து
சும்மா விருந்து வைக்க போறான்னு
அர்த்தம்,

ராஜனோட படை தளபதிகள் ஒப்பந்த காலம்
முடிந்து வயது வரம்பு காரணமாக படையில்
இருந்து வெளியேறும் போது அன்பு தான்
யூகித்து தயார் செய்த பெரும் படையை
உள்ளே கொண்டு வருகிறான்,

அன்பு தயார் செய்த பல சம்பவக்காரர்கள்
அவனின் படைக்குள் சிங்கத்தின் கர்ஜனை
சத்தம் போன்று நுழைகிறார்கள்,

அன்பு தவிர்க்க முடியாத
ஒரு தலைவனாக மாறுகிறான்,
அவனின் தலைமை பொறுப்பின் கீழ்
அவன் படையிடம் போட்டி போடவே மற்ற
நாடுகள் அஞ்சியது,

சாந்தமான அன்பு சில நேரங்களில்
வெகுண்டெழுந்து ராஜனின் பிரதிபலிப்பை
அவ்வப்போது தன்னிடம் காட்டிக்கொண்டு
வந்தான்,

இறுதியாக ராஜனை போன்றே அன்புவும்
ஒரு இடத்தில் தோல்வி அடைகிறான்
ஆனால் தலைவன் பொறுப்பில் அல்ல
படை தளபதி பொறுப்பில் இருந்து,

அத்தோல்வி அவனுக்கு மனதளவில்
பெரிய காயத்தை உண்டு செய்து விட்டது
போல்,அடுத்த ஒன்றரை வருடத்தில்
எந்த போரிலும் அவன் தன்னை
ஈடுபடுத்திக்கொள்ளாமல் தனக்கு
தானே ஒரு வட்டமிட்டு வாழ்ந்து வந்தான்,

இந்த நேரத்தில் அன்பு வின் வாழ்க்கை
வரலாறு படத்தில் அன்புவின் நகல் – லாய்
அன்புவை திரையில் தன் உடல் அசைவுகள்
மூலம் பிரதிபலித்த நடிகனின் தற்கொலை
இறப்பு அன்புவிற்கு கூடுதல் மன
அழுத்தத்தை கொடுத்து விட்டது,

துவண்டு கிடந்த அன்பு
இப்போது முடங்கி போனான்,

ஆனால் துவண்டு போனாலும்
முடங்கி போனாலும் அவன் வருகைக்காக
கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றும்
காத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்,

ராஜனும் சரி அன்பும் சரி
இந்த சூழ்நிலைக்கு ஒரே ஒரு கேள்வி தான்,

ஒருத்தன் தோத்தா
முடியுற சண்டையா இது..?

அன்புவின் எழுச்சி பிறக்கும்
ராஜனின் சகாப்தம் தொடரும்,

HappyBirthdayDadagiri

HappyBirthdayMrCool

… : ) ❤️

Related posts

Sachin Tendulkar’s advice to Jemimah Rodrigues

Penbugs

An open letter to Steve Smith

Penbugs

Tony Lewis, cocreator of Duckworth-Lewis rule passes away

Penbugs

1 comment

Joe Pushparaj July 9, 2020 at 10:14 am

நான் தேடுகின்ற யாவும் இங்கு பரந்து விரிந்து கிடக்கிறது

Reply

Leave a Comment