Penbugs
CinemaInspiring

இருவர்..!

” Made For Each Other” என்ற வார்த்தை வெறும் குடும்ப வாழ்க்கைக்கானது அல்ல , இரண்டு பேருக்கு இடையில் இருக்கும் புரிந்துணர்வுக்கானது …!

தமிழ் சினிமா வரலாற்றை எழுத நினைத்தால் இந்த இருவரின் பெயர் இல்லாமல் எழுத இயலாது ஒருவர் இளையராஜா, மற்றொருவர் மணிரத்னம் …!

மணிரத்னத்தின் முதல் திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜாதான் இசை…!

ராஜா – மணி காம்பினேசனில் வந்த படங்கள் பத்து ஆனால் இன்று வரையும் இந்த காம்பினேஷன் இந்திய சினிமாவின் முக்கியமான காம்பினேஷன் அதற்கு முக்கிய காரணம் எழுத்தில் மணிரத்தினம் ஜொலிக்க இசையில் ராஜா தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தார் ‌‌….!

ராஜாவை பற்றி மணி சொல்வது இந்திய சினிமா கண்டெடுத்த ஒரு பெரிய ஜீனியஸ் ராஜா , அவர்கிட்ட கதையை மட்டும் சொல்லிட்டா போதும் மத்தது எல்லாம் அவரே பாத்துப்பார் நாம் செய்ய வேண்டியது எல்லாம் நம்மை காதுகளை நல்லா கவனிச்சு இந்த டியூன் ஓகே சொன்னா போதும் மத்தது ராஜாவின் இசை பார்த்து கொள்ளும் …!

ஒரு படத்துல இயக்குனர் – இசையமைப்பாளர் கெமிஸ்ட்ரி என்பது கதாநாயகன் – கதாநாயகி கெமிஸ்ட்ரி விட ரொம்ப முக்கியம் இங்க உதாரணத்திற்கு மௌன ராகம் படத்தை மட்டும் எடுத்துகிட்டா படத்தில் ஐந்து பாடல்கள் ஐந்தும் வரும் சிச்சுவேசனுக்கு ஏத்த மாதிரியே இசையும் அமைந்து இருக்கும் ராஜா அதுக்கு ஏத்த மாதிரியே வரியையும் வாங்கி இருப்பார் …!

முதல் பாட்டு அப்ப ரேவதிக்கு கல்யாணத்துல விருப்பமில்லை அதை குறிக்கும்

அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
யார் வந்தாலுமென்ன திரும்பாது ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே…!

இரண்டாவது பாட்டு திருமணம் ஆகிட்டு அதுல மனைவிக்கு நாட்டம் இல்லை அதை குறிக்கிற மாதிரி

தங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை

அடுத்த சிச்சுவேசன் அவ விவாகரத்து கேட்டுட்டா அதை எப்படி பாடலாக மாறுதுனா

மேடையை போலே வாழ்க்கையல்ல
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல

அடுத்து அவளுக்கு மனசுல ஒரு சிறு சஞ்சலம் ஏற்படுது நாம எடுத்த முடிவு தப்போ ஒரு வேளைனு அப்ப ஒரு பாட்டு

தனித்து வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத தாபம்
தனிமையே போ… இனிமையே வா…
நீரும் வேரும் சேர வேண்டும்

கடைசியா அவ சேர்நது வாழ முடிவு பண்ற அப்ப ஒரு பாட்டு

மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓட கண்டேன்
இன்பதின் எல்லையோ இல்லயே இல்லயே‌‌….!

ஒரு படத்துல ஒரு பாட்டு கூட கதைக்கு தேவையில்லாத வகையில் இருக்காது அதுக்கு முக்கிய காரணம் மணிரத்னத்திற்கும் ராஜாவிற்குமான கெமிஸ்ட்ரி ….!

அவங்க இரண்டு பேரும் சேர்நது படம் பண்ணி இருபத்து ஒன்பது வருசம் ஆகலாம் ஆனாலும் இன்னிக்கு வர்ற அவங்க காம்போவில் வந்த பாட்டு எல்லார் பிளே லிஸ்ட்லயும் இருக்கிறது இந்த இருவரின் சாதனைதான் ….!

இந்தி பாட்டு கேட்ட மக்களை தமிழ் பாட்டு கேக்க வைச்ச ராஜாவும் , இந்தி படத்தை மட்டுமே இந்திய சினிமாவாக பார்த்த மத்த நாட்டு மக்களை தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைச்ச மணிரத்னமும் தமிழ் சினிமாவின் வளர்ச்சியின் இருவர்கள் …!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளையராஜா மற்றும் மணிரத்னம்…!

Related posts

ராகதேவனுடன் ஓர் அகவை தின பயணம்!

Shiva Chelliah

சென்னையில் புதிய ஸ்டுடியோவில் தனது பணிகளை தொடங்கினார் இளையராஜா

Penbugs

அன்னக்கிளி வந்து 44 ஆண்டுகள்!

Kesavan Madumathy

Maestro Ilaiyaraaja files complaint against Prasad studios

Penbugs