Penbugs
Cinema

“ஜாக்கியா களத்துல நின்னு ஒரு பந்தயத்துல கூட தோத்தது இல்ல”

“ஒண்ணே ஒண்ணுதான், வாழ்க்கைல நாம என்ன பண்ணனும்னு ஒரு தெளிவா இருந்தா போதும், நாம எது செஞ்சாலும் சரியா வரும்”

  • வெற்றிமாறன்

இந்த வார்த்தைக்கு ஏற்றார்போலவே, வாழ்வின் தொடக்கத்தில் என்னவாக ஆகலாம் என குழம்பி, வக்கீல், cricketer என முயன்று பின் தெளிவாக சினிமாதான் என தேர்ந்தெடுத்ததாக சொல்லி, அதில் சரியான வழியில் படைப்பாளியாக இருக்கிறார், வெற்றி.

தான் பேசும் சினிமா/வாழ்க்கை சார்ந்த எந்த உரையாடலின் போதும் தன் குருவின் பெயர் மேற்கோளிட்டு பேசுவதிலேயே தெரியும் இருவருக்குமான பேருறவை பற்றி,
சென்னைக்கும் உங்களுக்குமான உறவு எப்படி பட்டது? என்ற கேள்விக்கு கூட அவரின் பதில்,

“சென்னை எனக்கு இன்னோரு பாலு மகேந்திரா sir” னு சொல்லி இருப்பார்.

தன் காதல் திருமணம் முதல் சிகரெட் பழக்கத்தை கை விட்டதும், தனுஷ் உடனான நட்புறவு, பற்றியும்,சினிமா எனும் வியாபாரம் சார்ந்த கலையை கற்றறிந்தது வரை ஊடகங்கள் வாயிலாக தன்னை பற்றி கிட்டத்தட்ட அனைத்தையும் மக்களிடம் சொல்லி இருக்கும் வெகு சில இயக்குனர்களில் வெற்றிமாறன் முக்கியமானவர். அப்படியான தகவல்கள் தேவையா/இல்லையா என்பது தனிநபர் சார்புடையது.

நீண்ட நெடுங்காலமாக தமிழ் சினிமாவில் காணாமல் போன எழுத்தாளர்கள் – இயக்குனர்கள் இடையே ஆன உறவை இணைத்ததும் வலுப்படுத்தியதும் வெற்றிமாறன் செய்த ஆகப்பெரும் முன்னெடுப்புகளில் ஒன்று.

இலக்கியங்களிலிருந்து ஓர் கதை கருவை வெகுஜன சினிமாவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், அதுமட்டுமல்லாது வெற்றிமாறனின் விசாரணை/அசுரன் போன்ற படங்களின் ஜனரஞ்சக வெற்றிக்கு பிறகு அடுத்த தலைமுறை இளைஞர்கள் வாசிப்பை தொடங்கி இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

“இன்றைக்கு படைப்பாளிகள் கையில் சினிமா இருக்கிறது. படைப்பாளியாக உங்களுக்கு எழுத கூடிய திறனும், பொறுமையும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எழுதுவதை படமாக்கும் சூழல் இப்போது இருக்கு” னு சொன்னதும்,

“ராவணன் தான் அசுரன்” என்று பொட்டில் அறைந்தது போன்று சொன்ன வார்த்தைகளுக்காகவே வெற்றிமாறனை காலத்திற்கும் பாராட்டிக்கொண்டு இருக்கலாம்.

சினிமாவில் இயக்குனர் என்று மட்டும் நிற்காது,
“Wind” என்ற குறும்படத்தை பார்த்த பின் அந்த படத்தின் இயக்குனர் மணிகண்டனை அழைத்து
“காக்கா முட்டை” எனும் முழு நீள படத்தை எடுக்க உந்து சக்தியாக இருந்ததும், “நாளைய இயக்குனர்” போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர் ஆக இருந்து தவறை சுட்டி காட்டி, சினிமா நோக்கி வரும் அடுத்த தலைமுறையை வழி நடத்துவது போன்றவை வெற்றிமாறன் என்ற பெயர் நெடுங்காலம் நிற்க துணை செய்யும்.

வசனகர்த்தா வெற்றிக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு,

“ஜெயிக்கிறமோ? தோக்குறமோ? மொதல்ல சண்டை செய்யணும்”

“எங்கப்பனை ஒருத்தன் அடிப்பான், அவன் வெயிட்டா? சப்பையா? னு பார்த்துட்டு அடிக்க சொல்றியா?”

“பகையை வளக்குறத விட, அதை கடக்குறதுதான் முக்கியம்”

“ஜனம் டென்ஷன் ஆச்சு, இந்த போலீஸ் AC, DC அதெல்லாம் பாக்காது. துணிய உருவிட்டு ஓடவுற்றும்”

“சிவசாமி மகன் செருப்பால அடிச்சான் னு சொல்லு”

அதுபோலவே ஓர் கதையை வேரிலிருந்து ஆராய்ந்து அதை படமாக
காட்டுவதில் வெற்றிக்கு நிகர் வெற்றியே.

இந்த தலைமுறையின் மிக முக்கிய இயக்குனராகவும், அடுத்த தலைமுறை படைப்பாளிகளின் முன்னோடியாகவும் இருக்கும் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Related posts

Leave a Comment