Penbugs
Cricket

ஜெய்ப்பூரில், உலகின் 3வது மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம்

ஜெய்ப்பூரில், உலகின் 3வது மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் கட்ட ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானம் உள்ளது. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் (ஆர்.சி.ஏ.,) சார்பில் இயங்கும் இம்மைதானத்தில் 30 ஆயிரம் அமர்ந்து போட்டியை காணும் வசதி உள்ளது.

இந்நிலையில், 75 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை காணும் வசதியுடன் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் ஒன்றை ஜெய்ப்பூரில் கட்டுவதற்கு ஆர்.சி.ஏ., திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஆமதாபாத், சர்தார் வல்லபாய் படேல் (1.10 லட்சம் இருக்கைகள்), மெல்போர்ன் கிரிக்கெட் (1.02 லட்சம்) மைதானங்களுக்கு பின், உலகின் 3வது மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக கருதப்படும்.

ஜெய்ப்பூரில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் டில்லி செல்லும் நெடுஞ்சாலையில் 100 ஏக்கரில் இடம் பார்க்கப்பட்டுள்ளது.

350 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இங்கு, உள்ளரங்கு விளையாட்டு மைதானம், பயிற்சி கூடங்கள், கிளப் மற்றும் 4,000 வாகனங்களுக்கு ‘பார்க்கிங்’ வசதி, ரசிகர்களுக்கான உணவகங்கள், வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொள்ளும் வசதி, 250 பேர் அமரக்கூடிய செய்தியாளர்கள் அறை கட்டப்பட உள்ளது.

இதை தவிர, 2 பயிற்சி மைதானம் இடம் பெறுகிறது. இதில் ரஞ்சி போட்டிகளை நடத்திக் கொள்ளலாம்.இதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த 4 மாதங்களில் துவங்கும் என்று கூறப்படுகிறது.

Related posts

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் – நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

Penbugs

வங்காளதேச கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு; ஐ.சி.சி. அறிவிப்பு

Penbugs

பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்த நடராஜன்

Penbugs

தோனி புதிய இந்தியாவின் அடையாளம்-பிரதமர் மோடி

Penbugs

டிஆர்எஸ் முறை இருந்திருந்தால் கும்ப்ளே 900 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்: கம்பீர்

Penbugs

டி வில்லியர்ஸின் ஆல்-டைம் ஐபிஎல் லெவன்: எம்எஸ் டோனி கேப்டன்

Kesavan Madumathy

சென்னை டெஸ்ட் பார்வையாளர்களுக்கு அனுமதி

Penbugs

சின்னபாப்பம்பட்டி திரும்பிய நடராஜன் : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

Penbugs

சவுரவ் கங்குலி தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

Kesavan Madumathy

சரித்திர நாயகன் தோனி …!

Kesavan Madumathy

கிரிக்கெட்டைக் குறித்து இப்போது யோசிக்க முடியாது: மனித உயிர்கள்தான் முக்கியம் – பிசிசிஐ தலைவர் கங்குலி

Penbugs

ஐசிசி தலைமை பொறுப்பிலிருந்து விடைபெற்றார் சஷாங் மனோகர்

Penbugs