Penbugs
CoronavirusPolitics

ஜூலை 19 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் ஜூலை 19 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்துவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

எவை எவைகளுக்கு தடை:

· மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)

· மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து

· திரையரங்குகள்

· அனைத்து மதுக்கூடங்கள்

· நீச்சல் குளங்கள்

· பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்

· பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்

· பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

· உயிரியல் பூங்காக்கள்

· நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

· இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், ஏற்கனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12-7-2021 முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும், பின்வரும் கூடுதல் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன.

  • புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.
  • ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விபரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும்.
  • உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள் (Bakery), நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

பொது

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

  • கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).
  • கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
  • குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
  • கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

Leave a Comment