Penbugs
Cinema

காப்பான்| Tamil Review..!

கேவி ஆனந்த் தொடக்கத்தில் ஒரு பத்திரிகையாளராக இருந்து ஒளிப்பதிவாளாராக மாறி பின் இயக்குனராக மாறியவர் தமிழ் சினிமாவில் சங்கருக்கு பின் கதை சொல்லுதலில் ஒரு பிரம்மாண்டத்தை தந்து கொண்டு இருப்பவர் அவர் படங்களின் பாடல்களின் இடத்தேர்வுகள் மற்றும் எடுத்து கொள்ளும் கதைக்களம் எப்பொழுதுமே மாறுபட்டு இருக்கும் ‌.

1.கனா கண்டேன் – உப்புநீரை குடிநீராக்குதல்
2.அயன் – கடத்தல்
3.கோ – அரசியல் மற்றும் பத்திரிகைகள்
4.மாற்றான் – சத்துநீர் பானங்களில் உள்ள அரசியல் , மரபணுக்கள்
5.அனேகன் – மறுஜென்மம்
6.கவண்- மீடியாக்களின் இரட்டை வேடம்

இதுவரை எடுத்த ஆறு படங்களும் ஆறு விதமான கதைக்களங்கள் மற்றும் ஆறு அழகிய தமிழ் தலைப்புகள் என நான் வியக்கும் ஒரு ஆளுமை உள்ள இயக்குனர்..!

தற்போது உள்ள இயக்குனர்கள் எழுத்து இயக்கம் என அவர்களின் பெயர் வருவதையே விரும்புகின்றனர் ஆனால் எழுத்தாளர்கள் வழி வரும் கதைகளுக்கு எப்பொழுதுமே வலிமை அதிகம் அதை மிகச் சரியாக புரிந்து கொண்டு எழுத்தாளர்களோடு இணைந்து படம் எடுப்பது கேவி ஆனந்தின் தனிச்சிறப்பு …!

அவரின் ஏழாவது படமாக வந்துள்ளது காப்பான் ‌. மோகன்லால் , சூர்யா , ஆர்யா என நட்சத்திர பட்டாளத்தோடு களம் இறங்கி இருக்கிறார்.

கதை : கதைநாயகன் ரகசிய ஏஜெண்ட் இது தமிழ் சினிமாவில் காலம்காலமாக வந்து கொண்டிருக்கும் கதைதான். கேவி ஆனந்த் தன்னுடைய கேமரா ஜாலங்களிலும் , சில சில இடங்களில் எழுத்தின் மூலமும் மாறுபட முயற்சி எடுத்துள்ளார் .இதற்கு நடுவில் இயற்கை விவசாயம், தஞ்சை டெல்டாவில் மீத்தேன் போராட்டம், பூச்சிகளை வைத்து உயிரியல் யுத்தம் என பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார் படத்தின் மிகப்பெரிய மைனஸ் இதுதான் ஒரு மையமாக கதை இல்லாமல் அனைத்தையும் ஒரே படத்தில் சொல்லி விட முயன்று அதில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்துள்ளார் என்பதே நிதர்சனம். படத்தில் சூர்யா நன்றாக கதைக்கு ஏற்ப நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார் , மோகன்லால் சில காட்சியில் தன் முத்திரையை பதித்துள்ளார் மற்றபடி அனைத்து நடிகர்களும் வீணடிக்கப்பட்டுள்ளனர்…!

READ: Nerkonda Paarvai Review

படத்தில் ஒரு பாடலை தவிர (குழந்தைகள் பாடும் பாடல்) அனைத்து பாடல்களும் தேவையற்ற இடங்களில் வருகிறது பிண்ணனி இசையும் அந்த அளவிற்கு இல்லை சில இடங்களில் வரும் பிண்ணனி இசை ரோஜா படத்தின் தேசிய கொடி எரிக்கும் பிண்ணனி இசையை நியாபகபடுத்துகிறது .

READ: Mahamuni Review

சூர்யாவின் உழைப்பிற்கு ஏற்ற கதையை கேவி ஆனந்த் தந்து இருக்கலாம் எழுத்தில் இருந்த குழப்பமும் , அதிகப்படியான விசயங்களை மக்களுக்கு சொல்லும் விதத்தில் கேவி ஆனந்த் இன்னும் சிறப்பாக சொல்ல முயற்சித்து இருக்கலாம் படத்தின் நீளம் மிகப்பெரிய மைனஸ்.

படத்தின் சண்டை காட்சிகள் , சூர்யாவின் நடிப்பு மட்டுமே படத்தின் மிகப்பெரிய பிளஸ்…!

காப்பான் – காத்து இருக்கலாம்