Penbugs
Cinema

காளிதாஸ் | Movie Review

புதுமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில் அவர்களின் எழுத்தால் உருவான படம். இந்த படத்துல மிக பெரிய பலமே எழுத்து தான்.. கதை வடிவமைக்கப் பட்ட விதம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. காட்சிக்கு காட்சி படத்தோட சுவாரஸ்யம் கூடிட்டு போகுது..

எல்லா crime படங்கள் ல வர மாதிரி தான் காளிதாஸ் படத்துலயும் ஒரு சில கொலை நடக்கும் அத சுத்தி படம் நகரும். ஆனா அந்த கொலைக்கான காரணம் ஏன்? எப்படி? எதற்காகனு? பல கேள்விக்கு பதில் இந்த படத்துல கடைசில தான் தெரியும்..புரியும்..

படத்த பத்தி சொல்லனும்னா ரொம்பவே அருமையா வசனங்களையும் காட்சிகளையும் நகர்த்திருக்காங்க. ரொம்ப முக்கியமா வீட்டில் உள்ள அனைத்து தாய்மார்களும் ரொம்ப ரொம்ப முக்கியமா கணவர்மார்கலும் பாக்கணும்… வீட்ல பெண்கள விட்டுட்டு போனா அவங்க சந்திக்கிற கஷ்டத்த கணவன் மார்களும்.. வீட்ட விட்டு வெளியே போணா வேலைல கணவர்கள் பட்ர சுமைய மனைவிகளும் இந்த படம் மூலம் கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க…

படத்தின் கதை நாயகனாக #பரத்.. இது இவருக்கு ஒரு நல்ல comeback ha கண்டிப்பா இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ரொம்ப அருமையா Balanced ha போலீசாகவும்.. வீட்டில் கறாரான கணவராகவும் நடிச்சிருக்காரு… இதே மாதிரியான ரோல் பண்ணாருநா கண்டிப்பா இன்னொரு முறை நல்ல மாஸ் ஹீரோவாக வலம் வர வாய்ப்புகள் ஏராளம்…

ஹீரோயின் #ஆன்ஷீட்டல் முதல் படம் போலவே இல்ல ரொம்ப அழகா ரொம்ப ஆடம்பரம் இல்லாம நடிச்சு இருக்காங்க..

சுரேஷ் மேனன் தன்னோட ஆஜானுபாகுவான தோரணைல எல்லாரையும் பயமுறுத்துற மாதிரி வந்து வந்து போராரு.. ஆதவ் கண்ணதாசன் ரொம்ப நாள் ஆப்ரம் திரைல வந்து தனக்கான role ha அருமையா பண்ணிருக்காரு.. சில சில எடத்துல காமெடி லைட்டா work out ஆயிருச்சு..

படத்துல வர இடங்கள் எல்லாமே சென்னைய சுத்தியே தான்.. படம் மெதுவா நகருற மாதிரி இருந்தாலும் அந்த பொறுமைக்கு பதில் கடைசில இருக்கும் அதுதான் படத்தின் மாபெரும் பிளஸ்..

இசை – விஷால் சந்திரசேகர் படத்துக்கு பக்க பலமா அவர் தன்னோட bgm ல நம்மள மிரட்டி சீட்டின் நுனி ல உக்கார வெக்கிராறு.. DOP ல சென்னைய அருமையா சுத்தி சுத்தி காமிச்சு இருக்காரு..

படத்தோட எடிட்டிங் புவனேஷ் அருமையா எது தேவையோ அதுவே தர்மம் அப்டிங்கிர மாதிரி எது கதைக்கு தேவையோ அத மட்டுமே concentrate பன்னி தரமா எடிட் பண்ணிருக்காரு..

பாடல்கள் பல நேரத்துல தொய்வ தந்தாலும் கதைக்கு தேவையானதாக வடிவமைக்க பட்ருக்கு..

இந்த படம்.. இந்த காலக்கட்டத்துக்கு ரொம்ப அவசியமான படம். நாளுக்கு நாள் நம்ம கூட இருக்கரவங்களையே நம்ம மறந்துட்டு நம்ம எதையோ நோக்கி ஓடிக்கிட்டு இருக்கோம்.. அதனால நம்ம எந்த மாதிரியான பாதிப்பை எதிர்கொள்ரோம் அதயும் இதுல தெளிவா காமிச்சிருக்காங்க..

மொத்தத்துல படம் வெங்காயம் மாதிரி தான் உரிக்க உரிக்க ஒவ்வொரு விஷயமா ஒவ்வொரு twist ha ஓபன் ஆய்ட்டே வந்து திடீர்னு ஒரு ஆச்சர்யத்தோட முடியுது..!
படம் முடிச்சிட்டு வெளிய வரும் போது ஒரு நல்ல படம் பாத்து ஒரு மெசேஜ் ஓட வெளிய வந்த திருப்தி இருக்கு. தாராளமாக திரையரங்குகள் ல போயி பாக்கலாம். எல்லா வயதினரும் பார்க்க வேண்டிய படம்.. வாழ்த்துக்கள் காளிதாஸ் படக்குழு.. ரொம்ப அருமையான முயற்சி..

Related posts

Varalaxmi Sarathkumar on casting couch: Despite being a star kid, it happens to me

Penbugs

Sye Raa Teaser: Chiranjeevi brings magic on screens!

Penbugs