காப்பான்..!

காப்பான் இசை வெளியீட்டில் ரஜினி சார் சொன்னது முதல் படத்தில் சூர்யாவை பார்க்கும்போது என்ன இந்த பையனுக்கு நடிக்க வர்ல , குளோஸ் அப்ல மூஞ்சில எக்ஸ்பிரசன் காட்ட தெரில , டேன்ஸ் வர்லனு நினைச்சேன் ஆனா இப்ப எல்லாத்திலயுமே தன்னுடைய நிலையை உயர்த்திட்டு நான் வியந்து பாக்கிற அளவிற்கு இருக்கிறார் என்பதே போதும் சூரியாவின் வளர்ச்சியை நாம் அறிந்து கொள்ளலாம்…!

தன்னுடைய 22 வருடங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச் சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் என்பதே மிகச் சரியான ஒன்று .

ஏழாம் அறிவு இசை வெளியீட்டு விழாவில் சூர்யா சொன்னது இதற்கு முன் எனக்கு அமைந்த பெரிய படங்கள் அனைத்தும் வேறு நடிகர்கள் நடிக்க இருந்து அவர்கள் மறுக்கவே நான் நடித்தவை ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் என் பணியை சிறப்பாக செய்தேன் அதுதான் என் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று இதுதான் வாழ்க்கையின் ரகசியம் வாய்ப்புகள் அமையும்போது நாம் முழு மனதோடு உழைத்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம் …!

நந்தா , வாரணம் ஆயிரம் , காக்க காக்க , பேரழகன் , ஏழாம் அறிவு , கஜினி , பிதாமகன் , 24 ,அயன் , சிங்கம் , வேல் , ஆறு என ஒவ்வொரு படமும் ஒரு விதமான முயற்சிகள் செய்து தன்னால் இயன்றவரை தமிழ் சினிமாவை உயர்த்தி கொண்டிருக்கிறார் …!

வெறும் சினிமா மட்டுமில்லாமல் அகரம் பவுண்டேஷன் மூலம் பல ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி அறிவை புகட்டி கொண்டிருக்கிறார் கடந்த மாதம் கூட மத்திய அரசின் கல்வி கொள்கை கிராமப்புற மாணவர்களை எவ்வாறு பாதிக்கும் என்ற தன் சமூக பார்வையையும் இந்த உலகிற்கு உணர்த்தியுள்ளார்…!

எவ்ளோ உயரம் என்பது முக்கியமில்லை எவ்ளோ நாம் உயருகிறோம் என்பதே முக்கியம் ….!

வாழ்த்துக்கள் சூர்யா தமிழ் சினிமாவில் இருபத்திரெண்டு ஆண்டுகள்…!