Penbugs
Short Stories

கரைகின்ற நொடிகளில்..!!

இடரினில் தளர்ந்து

இமைக்கா நொடியாய்

உதிரம் வடிய நிற்கின்றேன்..!!

என் மனதில் தோன்றும்

சில விஷயங்கள்

என் யூகத்திற்கு ஏற்றார் போல்

நிச்சயம் எப்படியோ நடந்துவிடக்கூடும்

பல நேரங்களில்,

அன்றைக்கு ஒரு நாள்

இலையுதிர் காலத்தின்

நல்ல மாலை மங்கும் வேளையில்

நான் தனியே அந்த தேசிய

நெடுஞ்சாலையில்

என்னுடைய பைக்கில்

வந்து கொண்டிருந்தேன்,

ஏதோ என் உள்மனம் சொன்னது

இன்று ஏதோ சில தடைகள்

நீ வீடு சென்றடையுமுன்

உனக்காக காத்துக்கொண்டு

இருக்கிறது என்று,

சாலையோரம் இருந்த

ஒரு ATM இயந்திரத்திற்கு சென்றேன்,

எனக்கு தேவை 500 ருபாய்,

கார்டினை இயந்திரத்திற்குள்

சொருகி ரகசிய எண்ணை பதிவிட்டு

என்னுடைய பணத்திற்கு

நான் காத்துக்கொண்டிருக்கையில்

“2000 Rs Notes Only Available” – ன்னு Screen ல

Display ஆகுது,

இன்னொரு ATM சென்றேன்

மேலே சொன்ன அதே Process

இப்பொழுது “Unable to Dispense Cash”,

மூன்றாவது முறை இப்போது,

“என் கவனமின்மையால்

“Incorrect Pin”,

நான்காவது முறை

கார்டினை சொருகினேன்,

இந்த முறை “Exceeding the Day Limit”,

இதற்கு முன்னால் இந்த நாளில்

நான் இரண்டு முறை

என்னுடைய ATM – கார்டினை

உபயோகப்படுத்தி இருந்தேன்,

கடைசியில் பணம் எடுத்த பாடில்லை,

மிகுந்த டென்ஷன் மற்றும்

கொஞ்சம் பதைபதைப்புடன்

மேலும் பைக்கினை

மிதமான வேகத்தில் இயக்கினேன்,

பதைபதைப்புடன் ஒரு மனிதன்

இருந்தாலே இடையூறுகளும்

இன்னல்களும் அவன் வழியை தேடி

சென்று அதில் குடில் அமைத்து

தங்கி விடும் என்பதும் நாம் அறிந்ததே,

திடீரென்று சாலை ஓரத்தில்

தான் உண்டு தன் வேலை உண்டு

என்று இலையுதிர் காலத்தின்

இளவெயில் மாலை வேளையில்

இன்று இரவு பெய்யும் என

எதிர்பார்க்கும் மழை வேண்டி

தோகை விரித்தாட தயாராக

இருந்த மயில் சற்றும் யோசிக்காமல்

சாலை ஓரத்தில் இருந்து

பட பட வென்று தோகையை

சற்று விரித்து சாலையில்

வந்து கொண்டிருந்த

என்னை நோக்கி பறந்து வந்தது,

ஒரு நொடி சுதாரிப்பில்

என் பைக்கின் பிரேக்கை

ஒரு சேர அழுத்தி

வண்டியின் சக்கரம் மண்ணில் தேய்ந்து

புழுதி கிளம்பும் அளவிற்கு

கனக்கச்சிதமாக பைக்கினை

என் சாதுரியத்தில் நிறுத்தினேன்,

இதோ இந்த இடையூறுகள் தான்

சற்று நேரத்திற்கு முன்

என் மூளையில் எட்டிய அந்த ஒன்று..?

*

இதோ..!!

என் தந்தை

உச்சத்தில் வைத்து வணங்கும்

ஈசனின் மகனே என்னை

சோதித்து பார்க்கிறான் போல..?

என எனக்கு நானே

பதில் சொல்லிக்கொண்டேன்,

இங்கு என் மூளையில் எட்டிய ஒன்று

நான் யூகித்த வண்ணம்

இங்கு நிகழ்த்தப்பட்டுவிட்டது,

கொஞ்சம் சுய நினைவை

என்னுள் மீட்டிய வண்ணம்

அருகே இருந்த கடைக்கு சென்று

ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி

சற்று முகத்தை கழுவிக்கொண்டு

ஒரு டீ குடித்தேன் இளைப்பாறலுக்காக,

இப்படி சில விஷயங்கள்

என்னால யூகிக்க முடியும்

அது சில நேரத்துல

நான் நினைச்ச மாதிரி சரியா நடக்கும்

இதோ இந்த மயில்

தன் தோகையை பறந்து விரித்து

என் முகம் மீது வருடியது போலவும்

இந்த ATM Machine Incident போலவும்,

சில நாட்கள் சென்றது..!!

நேரம் இங்கு

சரியாக இரவு 9.30,

இந்தியாவில் இரவு 12.00,

என்னோட டீம் கூட

மாஸ்கோ வந்துருக்கேன்,

8,149,300 கி.மீ காடுகளை மட்டுமே

பரப்பளவாக கொண்ட

ரஷ்யா நாட்டின் மாஸ்கோ சிட்டியில்

தான் என்னுடைய முதல் Onsite

இந்த IT துறையில்,

நான் ஒரு IT கம்பெனில

இப்போ Project Lead – ஆ இருக்கேன்,

எலக்ட்ரானிக் சிட்டியான பெங்களூருல

தான் நான் வேலை பார்க்குறேன்,

என்னோட சொந்த ஊரு பாசமும்

உறவும் நிறைஞ்சு கிடக்கும் மதுரை தான்,

இப்போ இந்த Onsite என்ன தேடி வந்துச்சு,

நான் இங்க இப்போ மாஸ்கோல இருக்கேன்,

*

இங்கு தங்கள் பாதங்களை

நிறைய மனிதர்கள் கழுவுகின்றனர்,

இந்த நதி தான் பிறரின் பாதங்கள் மூலம்

இன்னும் எத்தனை மனிதர்களின்

பாவங்களை சுமந்து கொண்டிருந்தாலும்

இந்த இரவில் மட்டும்

எப்படி நிலை மாறாமல்

எந்த வன்மமும் இன்றி

இங்கு தவழ்ந்து செல்கிறது..?

இந்த மாஸ்கோ நகரத்தின்

மோஸ்க்வா நதியின் ஆற்றங்கரையில்

இந்த இரவு நான் தனிமையில் நிற்கிறேன்,

தண்ணீரின் சலம்பும் ஓசையின்றி

தெளிவான நீரோடையாய்

அந்த இடம் முழுதும் மிகவும்

ஒரு அமைதி சார்ந்த சூழல் நிழலாடியது,

இந்த ராத்திரி நேரத்துல

இந்த ஆற்றங்கரை ஓரத்தில்

ஏன் நான் நின்று

கொண்டு இருக்கிறேன்..?

என் கணிப்பு சரியா இருந்தா

இப்போ இந்த நாள் எனக்கு ஒரு

Incident நடந்தே தீரும்,

ஆனா எனக்கு ஒரு விஷயம் மனசுல

பட்டுச்சுன்னா அது Maybe நடந்துரும்

சில விஷயங்கள் நடக்காமையும் போயிருக்கு, ஆனா இந்த Incident

மனச போட்டு உருட்டுது,

கொஞ்சம் என்னோட

வாழ்க்கை குள்ள Time Travel செஞ்சு

பின்னோக்கி சற்று Rewind செய்து பார்ப்போம்,

“நான் பிஜாய் (Bejoy)”

ரொம்ப அழகானது எங்க குடும்பம்,

என் அப்பா,அம்மா, நான்,என் தாத்தா

(அப்பாவின் அப்பா) இதான்,

என்னோட தாத்தா!

நீ அப்பா மாதிரியா இல்ல

அம்மா மாதிரியா என்று கேட்டால்

சற்றும் யோசிக்காமல்

என் தாத்தா போல் என்பேன்,

பசங்க எல்லோரும் சொல்லுவாங்க

கோபம் மட்டும் பொத்துக்கிட்டு வரும்

இந்த பிஜாய்க்குன்னு,

ஆமா தாத்தா ஒரு Short Temper,

அப்பா ஒரு சிவன் பக்தர்

(ருத்ரதாண்டவம் எடுக்கும் ஈசனை

பற்றி நாம் அறிந்ததே)

அப்படி இருக்கப்போ நான் மட்டும்

விதி விலக்கா என்ன..?

“திருமகன்”

இதான் என்னோட தாத்தா பெயர்,

ரொம்ப அழகான தமிழ் பெயர்,

“திரு” – என்பது நம்மூரில்

மரியாதை நிமித்தமாய்

பெயருக்கு முன்னால்

சேர்த்துக்கொள்ளப்படுகிறது,

பெயருக்கு ஏற்றார் போல்

குணத்திலும் மரியாதை தனம் உள்ளவர்,

அப்பா சக்கரவர்த்தி

அம்மா சாரதா தேவி

காதலிச்சு கல்யாணம் பண்ணவங்க

என்ன தான் நரை பிறந்தாலும் 

இந்த வயசுலயும் ஹனிமூன் போறது

பத்தி பேசுற ஒரு Young Couples,

பசங்க எல்லோரும்

அம்மா செல்லமா இருப்பாங்க,

ஆனா நான் கொஞ்சம் Change,

அப்பா செல்லம்!

அம்மா கொஞ்சம்

கண்டிப்புடன் வளர்க்குற

Strict Officer சாப்பாடு விஷயத்துல கூட

ஆனா ஒரு நாளைக்கு 500 முறை

பிஜாய் பிஜாய் பிஜாய் ன்னு

ஒரே சுப்ரபாதம் தான் எங்க வீட்ல,

ஆனா அன்பு அதிகமா இருக்கும்,

அம்மாக்கு நடிகர் முரளி ரொம்ப பிடிக்கும்,

நான் கொஞ்சம் கருப்பு – முரளியும் கருப்பு,

என் மகன் முரளி போல

கருப்பா இருந்தாலும்

கலையா இருக்கான்னு

வார்த்தைக்கு வார்த்தை

ஒரே புகழ்ச்சி தான்,

இந்த மாதிரி ஒரு மனைவி

நமக்கும் கிடைக்கணும்னு

தோன்றுகிற அளவு

அப்பா மேல அளவில்லா காதல

கொட்டிக்கொட்டி அவரோட

நிழல் போல கூடவே இருப்பாங்க அம்மா,

அப்பறம் அப்பா!

இந்த உடல்

இந்த உயிர்

இந்த மூச்சுக்காற்று

இந்த வாழ்க்கை

இந்த சமுதாயத்தின் புரிதல்

என எல்லாமே எனக்கு கொடுத்தது

எங்க அப்பா தான்,

அப்பா தீவிர சிவன் பக்தர்,

எப்போதும் நெற்றியில்

திருநீர் பட்டை அணிந்திருப்பார்,

அப்பறம் மலரும் நினைவுகள் மாதிரி

வீட்ல எப்பவும் சின்ன பையன் மாதிரி

அம்மா கூட ஒரே Classic Romance தான்,

மனசுக்குள்ள என்னமோ

வாரணம் ஆயிரம் கிருஷ்ணன்னு

நெனப்பு இவருக்கு,

மற்ற அப்பாக்களிடம் இருந்து

என் அப்பா ரொம்பவே தனித்திருப்பார்,

ஆமா என்னோட போக்குல

என்ன விட்ருவார்,

என்னோட ஸ்கூல் காலேஜ்

மார்க்ஸ் எல்லாம் ஆவரேஜ் Category தான்,

அம்மா தான் கொஞ்சம் முன்ன பின்ன

But அப்பா சமாளிச்சுப்பார்

அவனுக்கு ரொம்ப Pressure

கொடுக்க கூடாதுன்னு,

நூற்றில் தொண்ணூறு சதவிகிதம்

எல்லாரோட பெற்றோரும்

தன்னோட பையன் இப்படி படிக்கணும்,

First Rank எடுக்கணும்,

இந்த Extra Curricular Activities

அவனுக்கு இருக்கணும்,

சின்ன வயசுலயே School Syllabus

பத்தாதுன்னு Maths – க்கு ஒரு டியூஷன்

Science – க்கு ஒரு டியூஷன்,

இது போதாதுன்னு

அந்த பசங்களுக்கு விருப்பமே இல்லாத

ஹிந்தி டியூஷன்

(இப்படித்தான் ஒரு மொழி

நம்மிடம் நமக்கே தெரியாமல்

திணிக்கப்படுகிறது)

இப்படி இதுமாதிரி விஷயங்கள்

செஞ்சு செஞ்சு அந்த பசங்கள

மழலை காலத்து சுதந்திரத்தை

அனுபவிக்க விடாம

ஒரு கூட்டுக்குள்ள அடைத்து

வைத்து விடுகிறார்கள்,

முக்கியமாக எல்லா அப்பாவும்

செய்ய தவறிய ஒரு விஷயத்தை

எங்க அப்பா எனக்கு

சொல்லிக்கொடுத்து வளர்த்தார்,

ஒவ்வொரு அப்பாவும்

தன் பிள்ளைகளுக்கு

மூன்று விஷயங்களை

தெளிவு படுத்தினாலே போதுமானது,

1.தன் மரபு மொழியின் பெருமை

என்னோட சின்ன வயசுல இருந்தே

அப்பா எனக்கு நிறைய விஷயம்

சொல்லிக்கொடுப்பார்,

அப்பா க்கு தமிழ் னா உயிர்,

என்ன தான் CBSC Syllabus

சொல்லித்தர ஸ்கூல்ல

என்ன படிக்க வச்சாலும்

அங்க தமிழ் பேசுனா

Fine கட்டணும்னு அப்பாக்கு தெரியும்,

ஆனா நம்ம மொழியை

நம்ம தான் பேசணும்,

நம்ம பேசமா அந்நிய நாட்டுகாரனா

பேசுவான்னு அடிக்கடி

என் பள்ளியை சகட்டு மேனிக்கு சாடுவார்,

ஆனால் வீட்டில் எனக்கு

தமிழ் பற்றிய எல்லா விஷயங்களையும் என் ஆசைக்கிணங்க சொல்லிக்கொடுப்பார்,

குறிப்பாக திருக்குறள், செய்யுள்,

இலக்கணம், அதில் வரும்

மாத்திரைகள் இப்படி பல,

ஒரு ஆயிரம் புத்தகம்

எங்கள் வீட்டில் இருக்கும்,

பொன்னியின் செல்வன்

முழு கதைகளையும்

என்னுடைய பன்னிரெண்டாம்

வகுப்பின் முன்னரே நான் படித்து

முடித்து அதில் ஊறியவன் என்றால்

பார்த்துக்கொள்ளுங்களேன்,

அப்பா கிட்ட இருந்து

அந்த தமிழ் மீதுள்ள ஆர்வம்

எனக்கும் ஒட்டிக்கிச்சு,

2.நம் வீட்டில் நம்முடன் இருக்கும்

பாட்டி தாத்தா போன்ற

தனக்கு முன் உள்ள சங்கதிகள்

பற்றிய தொகுப்பு

எல்லா அப்பாவும்

தன் பிள்ளைகளுக்கு

தன் முந்தைய தலைமுறை பற்றியும்

அவர்கள் வாழ்ந்த முறை பற்றியும்

நிச்சயம் சொல்லி சொல்லியே

தங்கள் பிள்ளைகளை

வளர்க்க வேண்டும் என சொல்லுவார்,

அப்போதான் தங்களுடன்

வீட்டில் இருக்கும் அந்த

தாத்தா பாட்டியிடம்

தன் பிள்ளைகள் அளவுகடந்த

அன்புடன் இருக்கும்,

அந்த அன்பு தான்

கடைசி காலத்தில் அவர்களுக்கு

நம் பிள்ளைகள் மூலம்

கொடுக்கும் சந்தோஷம்

என்றும் சொல்லிக்கொடுப்பார்,

3.சமூக பார்வை பற்றிய தெளிவுரை

இந்த சமூகம் பற்றிய பார்வையும்

அதில் நம்மை எப்படி இணைத்துக்கொண்டு

இந்த சமூகத்துடன்

ஒத்து போய் வாழ்கிறோம் என்றும்

அவ்வப்போது பாடம் எடுப்பார்

போர் அடிக்காமல் சில

எடுத்துக்காட்டுகளுடன்,

அன்றைக்கு ஒரு நாள்

அப்படிதான் அப்பா ஏதோ

கொஞ்சம் அப்செட் நிலைக்கு

தள்ளப்பட்டார்,

காரணம் – அப்பாவின் நண்பர்

ஷங்கர் அங்கிள் வீட்டிற்கு வந்திருந்தார்,

ஏதோ அவர்களுக்குள்

சில விஷயம் பேசிக்கொண்டிருக்கும்

போது எதேர்சையாக

என் பையன் ஆஸ்திரேலியால

இருந்து வந்துருக்கான்டா,

ஆனா என்னோட பேரனுக்கு

தமிழ் பேசவே சரியா தெரியலன்னு

எங்க அப்பா கிட்ட சொல்லிட்டாரு,

சரி தான் இன்னக்கி சக்கரவர்த்தி

ஈசனா மாறி ருத்ர தாண்டவம்

ஆட போறாருன்னு என் மனசுல பட்டுச்சு,

அதே தான் நடந்துச்சு,

உன் பையன்னு இல்ல

எல்லாருமே தங்களோட பிள்ளை

சின்ன பிள்ளையா இருக்கப்போ

A For Apple B For Ball C For Cat – ன்னு

சொல்லிகுடுப்பீங்களே தவிர

யாராவது ஒரு ஆள்

“(அ)றம் செய்ய விரும்பு – (ஆ)றுவது சினம்”

– ன்னு சொல்லிகொடுத்திங்களா..?

அப்படி எதையுமே நம்ம செய்யாம

என் பையன் தமிழ் சரியா பேசல

என் பேரன் தமிழ் பேசலன்னு

சொன்னா சொல்ற உங்கள தான்

First அடிக்கணும்,

இது கூட பரவால்ல

என் பையன் பிஜாய் கிளாஸ்மேட்

ஒரு பையன் எங்க வீட்டுக்கு

வந்துருந்தான், ஏதோ இன்டெர்வியூ

Attend பண்ணுறதுக்கு பிஜாய் கூட

சேர்ந்து Resume ரெடி பண்ணிட்டு

இருந்தான், அவனோட அப்பா Initial

அந்த பையனுக்கு தெரியல

அவங்க அப்பாட்ட போன் பண்ணி

கேட்டான், அப்போதான் தெரிஞ்சு

அவனுக்கு இறந்து போன

அவங்க தாத்தா பெயரே தெரியலன்னு,

இப்படித்தான் மரபு மொழியும்,

நமக்கு முன்னாடி இருக்குற

சங்கதிகள் பற்றிய வரலாறும்

அழிஞ்சு போகுதுன்னு அப்பா

ஷங்கர் அங்கிள் கிட்ட

சொல்லிட்டு இருந்தாரு,

பிறகு ஷங்கர் அங்கிள் கிளம்பிட்டாரு,

ஆனாலும் அப்பா கொஞ்சம்

டென்ஷன் ஆவே இருந்தாரு

அவருக்கு ஏதோ ஒரு மனஅழுத்தம்,

காரணம் தாத்தா பத்தி தான்,

எனக்கு அப்பா எப்படியோ

அப்பாக்கு தாத்தா அப்படி,

அப்பாக்கு தாத்தா தான் எல்லாமே,

தாத்தா ஆசைப்படி எங்க வீட்டுல

ஒரு குட்டி ரூம் இருக்கு

அங்க அவர் ஆசைப்படி

அவர் எப்போதும் Drinks பண்ணுவார்

தனியா உட்கார்ந்து,

ஆமா இந்த Drinks பழக்கம் தான்

அப்பாக்கு பிடிக்காது தாத்தா கிட்ட,

ஆனா அப்போ அப்போ தான்

Drinks பண்ணுவாரு,

மூன்று வருஷம் முன்னாடி

பாட்டி இறப்புக்கு அப்பறம்

இப்போ கொஞ்சம் அதிகமாயிடுச்சு,

அதுலயும் எப்பயுமே

ரொம்ப Costly ஆன “Jack Daniels”

விஸ்கி தான் தாத்தாக்கு ரொம்ப பிரியம்,

எனக்கு என் தாத்தா தான் எல்லாமே

எப்போதுமே நான் வீட்டுல இருக்கப்போ

அவர் மடியில் படுத்துகிட்டு தான்

டிவி பார்ப்பேன்,

தாத்தா – க்கு அப்போ அப்போ

தன்னுடைய முந்நாள் காதலி

ஞாபகம் வரும், அப்போதெல்லாம்

நான் தான் கிளாஸில்

அந்த விஸ்கியை அவருக்கு

ஊற்றி கொடுப்பேன்,

அப்போ நடக்கும் பாருங்க ஒரு கூத்து

தாத்தா கொஞ்சம் நல்லாவே பாடுவாரு,

ஜெமினி கணேஷன் விசிறின்னு சொல்லலாம்,

முந்நாள் காதலி ஞாபகத்தில்

அந்த விஸ்கியை குடித்துக்கொண்டே

“மன்னவனே அழலாமா” பாடலை

பாடி பாடி அந்த இரவு முழுவதும்

ஒரு பாட்டு கச்சேரியே நடத்தி விடுவார்,

அன்றைய இரவு அவரை

என் மடியில் தான் நான் தூங்க வைப்பேன்,

என் தாத்தா ஒரு குழந்தை போல

அழகா தூங்குவாரு,

இது எப்போதும் Asusual தான்,

அன்றைக்கும் அப்படித்தான் தூங்குனாரு

என் மடில படுத்து,

நான் அவருக்கு தட்டி கொடுத்து

தூங்கவச்சுட்டே என்னோட

காதலி “அனுவர்ஷினி” க்கு

மெசேஜ் பண்ணிட்டு இருந்தேன்,

அனு :

என்ன மா சனிக்கிழமை ராத்திரி வேற

ஒரே கச்சேரி தான் போல

இன்னைக்கி வீட்ல,

தாத்தா தூங்கிட்டாரா..?

ஹ்ம்ம், தூங்கிட்டார் அனு,

அப்பறம் நாளைக்கு பிளான் என்ன..? என்ன Send off பண்ணுறதுக்கு

ஏர்போர்ட் வரேல..?

அனு :

நிச்சயமா வருவேன்

இது என்ன கேள்வி மா..?

உன்ன Send off பண்ணுறப்போ

என் மனநிலை எப்படி இருக்கும்னு

தான் யோசிச்சிட்டு இருக்கேன்

ஹே அனு!

On Site trip Just ஒரு மாதம் தான்

நான் அங்க போய் ஸ்வாசிக்குற

மூச்சு காற்றுல கூட

நீ தான் நிறைஞ்சு இருப்ப,

அனு :

என்னமோ சொல்லுற மா

சரி மார்னிங் சீக்கிரம் ரெடி ஆகு,

எல்லாம் கரெக்டா எடுத்து வச்சுக்கோ

இந்த முறையாவது ரொம்ப நாள்

Pending Process – ல இருக்க

நா.முத்துக்குமார் எழுதிய

“அணிலாடும் முன்றில்” புத்தகத்தையும்

ரா.பார்த்திபன் எழுதிய

“கிறுக்கல்கள்” புத்தகத்தையும்

படிச்சு முடி, குட் நைட் பிஜாய்!

அனுவின் உரையாடலை முடிக்க

“Good Night Anu, I Love Yo..?” என்று

அந்த “U” – வை டைப் செய்து

முடிப்பதற்குள் தாத்தாவின் வாயில்

இருந்து கசிந்த ரத்தம்

என் மடியில் சிறு ஓடை போன்று

தவழ்ந்து என் கால்களில் வடிந்தது,

ஒரு பத்து நிமிடம் தொடர்ந்து அவர் எடுத்த வாந்தி முழுவதும் உதிரம் வடிந்தோடியது,

அப்பா..?

அப்பா..?

என்று கத்தினேன்

என்ன செய்வதென்று அறியாமல்,

அம்மாவும் அப்பாவும் ஓடி வந்தார்கள்.

அப்பா, தாத் தாத் தா..? என்று திக்கினேன்,

என் கால்களில் வடிந்த தாத்தாவின் ரத்தம்

அப்பாவின் பாதங்களை நனைக்க

அப்பா தாத்தாவை தூக்கிகொண்டு

காரை நோக்கி சென்றார்,

அப்பா சட்டை முழுவதும் குருதி கரை,

ஹாஸ்பிடலுக்கு தாத்தாவை அழைத்து சென்றார்கள்,

ரத்தம் வடிந்த என் கால்களை

அம்மா சுத்தம் செய்துவிட

நானும் அம்மாவும் ஹாஸ்பிட்டலுக்கு

என்னுடைய பைக்கில் கிளம்பினோம்,

தாத்தா ICU வார்டில் சேர்க்கப்பட்டார்,

இந்த Drinks பழக்கம் வேணாம் வேணாம்

ன்னு சொன்னேனே கேட்டாரா இவரு,

ரொம்ப சீரியஸ்ன்னு

டாக்டர் சொல்லிட்டாங்க 

இப்போ ICU வார்டுல வச்சுருக்காங்கன்னு

அப்பா சொல்லிட்டு இருக்கும்போதே

அவர் கண்ணுல கண்ணீர் தேங்கி நின்னுச்சு, 

நானும் அம்மாவும்

ஆளுக்கொரு ஓரத்துல

அவருக்கு ஆறுதல் கூட

சொல்லமுடியுமா உட்கார்ந்து இருந்தோம்,

எல்லோருமே ரொம்ப

இடிஞ்சு போய்ட்டோம் சொல்லப்போனா,

இந்த பாழாப்போன விஸ்கிய

நான் அவருக்கு இன்னக்கி ராத்திரி

ஊத்தி கொடுக்கலேன்னா

தாத்தா இப்போ ரத்த வாந்தி

எடுத்துருக்கமாட்டாறு என்று

என்னுள் நானே புலம்பி

அழுது கொண்டிருந்தேன்,

பிஜாய் ஒண்ணுமில்ல சரி ஆயிடும்

நாளைக்கு உனக்கு Onsite இருக்குல்ல,

Flight வேற பிடிக்கணும் நீ கிளம்பு

நானும் அம்மாவும் பாத்துப்போம்,

அவர் இன்னும் ஒரு வாரத்துல

எந்திரிச்சு வந்துருவாருடா என்று

அப்பா எனக்கு சமாதானம் சொன்னாலும்

அவர் கண்கள் முழுவதும்

ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது,

இந்த Onsite வேற

என்னோட Future High Position – க்காக

நான் போய் ஆகணும்,

நாங்க போகப்போற இந்த டீம்க்கு

நான் தான் Lead!

தாத்தா ICU – வில்

அப்பா அம்மா மருத்துவமனையில்

Last One Month Work From Home – Base ல

நான் பெங்களூரு ஆபீஸ் போகாம

மதுரைல இருந்து தான்

வேலை பாத்துட்டு இருந்தேன்,

இந்த ராத்திரியே நான்

மதுரைல இருந்து சென்னை கிளம்புறேன்,

நாளைக்கு அங்க இருந்து தான்

எனக்கு மாஸ்கோ Flight,

அனு சென்னை தான்

So அவ வந்துருவா,

சென்னை ரீச் ஆகி Friend ரூம் – ல

Freshup ஆகிட்டு நான் கிளம்பினேன் ஏர்போர்ட்க்கு!

அனு ஏர்போர்ட் வந்திருந்தாள்

நடந்த எல்லாவற்றையும்

அனுவிடம் கூறினேன்,

அவளுக்கு என்னை

வழி அனுப்புவதில் மனமில்லாமல்

வேறு வழியின்றி அனுப்பி வைத்தாள்,

*

ஒரு பக்கம் தாத்தாவின் உடல்நிலை

இன்னொரு பக்கம் அனுவின் மனநிலை

செல்ல மனமின்றி ஒத்தையிலே நான்..?

எல்லா Check in Process – உம் முடிந்து

Flight குள்ளே ஏறி அமர்ந்தேன்

ஒரு வழியாக,

தாத்தாவிற்கு எப்படி இருக்குமோ

என்று மனம் தவிப்பில் அடித்துக்கொண்டது,

என்னுடைய டீம் யாரிடமும்

இந்த விஷயத்தை சொல்லவுமில்லை,

எப்பவும் Flight பயணத்தை ரசிக்கும்

நான் இந்த முறை Uncomfortable ஆக

அமர்ந்திருந்தேன்,

Airhostess தங்கள் Seat பெல்டினை

போட்டுகொண்டு தங்கள்

எலக்ட்ரானிக் Device – களை

Off செய்யும்படி பயணிகளுக்கு

விளக்கம் தந்து கொண்டிருந்தார்,

விமானம் தன் தடத்தில் இருந்து

கிளம்பி வானின் இருளுக்குள் சென்றது,

தாத்தா பற்றிய நினைப்பும்

அப்பா அம்மா வின் நிலையும்

என்னை மிகவும் குறுகிய நிலைக்கு

கொண்டு சென்றது,

மிக நீண்ட பயணம் முடிந்து

மாஸ்கோ வந்தடைந்தோம் ஒரு வழியாக,

எங்களுக்கு புக் செய்யப்பட்டிருந்த

ஹோட்டல் அறைக்கு சென்று

Tired – இல் அயர்ந்து தூங்கினேன்,

திடீரென்று தூக்கத்தில்

எனக்கு தோன்றிய அந்த ஒரு நிகழ்வு,

உயிர் போய் உயிர் வந்தது,

மொத்த தூக்கமும் கலைந்தது,

மருத்துவமனையில்

டாக்டரின் அறைக்கு அப்பாவை

டாக்டர் அழைக்கிறார்,

Mr.Chakkaravarthy Sorry to Say this

சிகிச்சை பலனின்றி உங்க அப்பா..?

என்று டாக்டர்

அப்பாவிடம் சொல்லவரும்போது

கனவு கலைந்து சட்டென

எழுந்து உட்கார்ந்தேன்,

எழுந்து கொஞ்சம் தண்ணீரை

குடித்து விட்டு ஹோட்டலின்

வெளியே வந்தேன்,

ஹோட்டலில் விசாரித்து

அருகே இருந்த

மோஸ்க்வா நதிக்கரை வந்தடைந்தேன்,

அனு கால் செய்தாள்

Reached Safely Anu!

I’ll Catch You Later மா என்று சொல்லி

அவள் அழைப்பை துண்டித்தேன்,

*

இடரினில் தளர்ந்து

இமைக்கா நொடியாய்

உதிரம் வடிய நிற்கின்றேன்..!!

எனக்கு தோன்றிய நிகழ்வுகள்

பெரும்பாலும் நடந்து விடும்

நான் யூகித்தபடி,

இப்பொழுது நேரம்

இங்கு சரியாக இரவு 9.30,

இந்தியாவில் இரவு 12.00,

கையில் அப்பாவிடம் இருந்து

அழைப்பு வந்துவிடுமோ..?

அதில் அப்பா

என்ன சொல்லப்போகிறார்..?

ஒரு வேளை நமக்கு தோன்றிய

நிகழ்வு நடந்து விட்டால்..?

என்று பல கேள்விகளுடன்

மொபைலை பார்த்தவாறு

இந்த நதிக்கரையில்

நின்று கொண்டிருந்தேன்,

தனிமை என்னுள் இருள்

வட்டமாய் என்னை சூழ்ந்தது

நான் ஊற்றி கொடுத்த

விஸ்கியின் நச்சுவால் தான்

தாத்தாவிற்கு இப்படி ஆகிவிட்டது

என்று மனசு கிடந்து அடிச்சுகிச்சு,

இப்போ இந்த நிமிஷம்

உங்க எல்லோருக்கும்

ஒன்னு சொல்லிக்குறேன்

கொஞ்சம் பொறுமையா கேளுங்க,

***

ஏதோ ஒரு காரணத்திற்காக

மது குடிக்கும் பழக்கம் மாறி

இப்போ மது குடிப்பதற்காகவே

சில காரணங்கள் உருவாக்கபடுகின்றன

சந்தோஷமானலும் சரி

துக்கமானாலும் சரி

மனுசனுங்க தேடுறது இந்த மதுவதான்,

இங்க புதுசா

ஒரு உயிர் வந்தாலும் மது தான்

அந்த உயிர் போனாலும் மது தான்

வேலை இருந்தா

உடல் அலுப்புன்னு காரணம் சொல்றோம்

வேலை இல்லைனா

கவலையை மறக்கன்னு

காரணம் சொல்றோம்

அன்றாட தேவையா மாறிடுச்சு

இந்த மது,

மது அருந்துதல் என்பது

தனிமனித விருப்பம்தான் அதுவும் மத்தவங்களை பாதிக்காத வரைக்கும்,

மது குடிப்பது

நம்ம உடல் ஆரோக்கியத்தை

கெடுக்கறதும் மட்டுமில்லாம,

நம்ம குடும்ப ஆரோக்கியத்தையும்

சந்தோஷத்தையும் சேர்த்து கெடுக்குது

அளவுக்கு மீறினால் அமிர்தமும்

நஞ்சுனு சொல்வாங்க

அமிர்தமே அப்டினா அந்த மது

உடல் நலத்திற்கு தீங்கானது

வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடுன்னு

விளம்பரப்படுத்தி விற்பனை செய்யுற

மதுல எந்த அளவுக்கு நஞ்சு இருக்கும்..?

எதாவது நண்பர்கள்

இல்ல திருமணவிழா

பிறந்தநாள் விழானா

அங்கேயும் நண்பர்களுக்கு

கொடுக்கப்படுவதும்,

நண்பர்கள் கேட்கப்படுவதும்

இந்த மது தான்,

மத்தவங்கள சந்தோஷபடுத்தவும்

நாம சந்தோஷமா இருக்கவும்

மது மட்டுமே வழி இல்ல!!

தினமும் தொலைக்காட்சிலயோ,

செய்திதாள்களிலயோ

அதிக மது பயன்பாட்டினால்

கேன்சர் நோய் வந்து ஒருவர் இறந்தார்,

மது குடித்து வாகனம் ஓட்டியவர்

எதிரே வந்த வாகனம் மீது மோதி

பலினு செய்திகள் வராத நாள் இல்லை

இது இறந்த நபரோட உறவினர்கள்

நண்பர்கள் தவிர மற்றவர்களுக்கு

வெறும் ஒரு செய்திதான்

ஆனா அந்த குடும்பத்துக்கு

மிகப்பெரிய இழப்பு,

இறந்த அந்த நபரே கதினு இருந்த

அந்த குடும்பத்தோட நிலைமை..?

இந்த கேடுகெட்ட மதுவால

எத்தனை குடும்பம்

சிதைஞ்சு போயிருக்கும்..?

எத்தனை அப்பாவி உயிர்களை

காவு வாங்கியிருக்கும்..?

மது குடிக்கிறவங்கள

மட்டுமில்லாம அவங்கள

சுத்தி இருக்கறவங்களையும் பாதிக்குது,

தன்னிடமிருந்தும்

பிரச்சனைகளிலிருந்தும்

தப்பிக்க போதையில் குதிப்பது

பல்லிக்கு பயந்து பாம்பை

மிதிக்கிறமாறி ஆபத்தானது

பிரச்சனைகளை வரவேற்கவும்,

வழியனுப்பவும் பழகிகொள்ள வேண்டும்

பிரச்சனை இல்லாத வாழ்க்கை

அர்ச்சனை இல்லாத கோயில் மாதிரி,

இப்போது விளைவு!

இன்று அதிக மது பயன்பாட்டினால்

என் தாத்தா ICU – வில்..?..!!

இப்போது என் அப்பாவிடம் இருந்து

நான் கனவில் கடந்த நிகழ்வு குறித்து

அழைப்பு வருமோ வராதோ

எனக்கு தெரியவில்லை,

ஆனா என் தாத்தா வோட

இந்த நிலைமை நாளைக்கு

உங்க குடும்பத்துல ஒருத்தருக்கு

வராம இருக்க உங்களுக்கு

குடி பழக்கம் என்பது இருந்தால்

கொஞ்சம் கொஞ்சமாக

முடிந்த வரை அதை விட்டு

வெளியே வந்து Complete – ஆக நிறுத்துங்கள்,

ஹோட்டல் அறையில இருந்து

கிளம்புறப்போ என்னோட Bag – ல

பார்த்தேன், அப்பா என் Bag – ல

கொஞ்சம் திருநீர வச்சு விட்ருந்தாங்க,

நான் இதுவரை கடவுள் வழிபாட்டில்

பெரிதாக என்னை ஈடுபடுத்தி

கொண்டதில்லை, இருந்தாலும் அப்பாவின் நம்பிக்கை கடவுளான 

அந்த சிவனிடம் பிரார்த்தனை செய்து,

நான் இந்த நதிக்கரைக்கு வரும் முன்னே

என் மனதில் இருந்து உருகி மனமுருகி வணங்கி அப்பா வைத்துவிட்ட திருநீரை

நெற்றியில் வைத்து விட்டு வந்தேன்,

இப்போது மழை வந்தது!

நெற்றியில் நான் தீட்டியிருந்த

திருநீர் என் கண்களின் வழியே

வடிந்தது கண்ணீருடன் சேர்ந்து,

நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கும்

என்பதில் அப்பா நம்பிக்கை கொண்டவர்,

என் மனதுக்குள்

நான் என் வழிபாடை

தொடர்ந்து கொண்டிருதேன்

அப்பா பாடும் மந்திரத்தின் மூலம்,

***

ஈசன் அடிபோற்றி

எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி

சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

***

குறள்:926

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

குறள் விளக்கம்:

உறங்கினவர்,

இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர்,

அவ்வாறே கள்ளுண்பவரும்

அறிவு மயங்குதலால்

நஞ்சு உண்பவரே ஆவர்.

~ மதுவை தவிர்ப்போம்..!!

Thanks, Note :

Some Ideologies: @Karthick_Netha

துணை எழுத்து: @Shan_Gopal

Lord Shiva Poem: @Anjali_Raga_Jammy