கார்த்திக் டயல் செய்த எண்!

CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
164,936
+6,850 (24h)
Deaths
4,673
+139 (24h)
Recovered
70,102
42.5%
Active
90,161
54.66%

Worldwide

Cases
5,842,050
+57,447 (24h)
Deaths
359,241
+2,304 (24h)
Recovered
2,535,163
43.4%
Active
2,947,646
50.46%
Powered By @Sri

~ ஜெஸ்ஸி..!!

அவ தான் இருக்கா
இன்னும் ஏன் வாழ்க்கையில – ன்னு
கார்த்திக் ஜஸ்ட் ப்ரூவ்ட் இந்த நேரத்துல,

ஒரு முறை கெளதம் ஒரு பேட்டியில்
சொல்லியிருந்தார் மணி சார் இயக்கிய
“அலைபாயுதே” படத்தின் எவனோ
ஒருவன் பாடலின் வரிகளையும்
காட்சியமைப்பையும் வைத்து பல காதல்
கதைகளை எழுதலாம் – ன்னு,

அது மாதிரி இதுவும் அவரோட கம்ஃபர்ட்
இந்த மாதிரியான கதைக்களம், 2010 –
இல் நாம் கொண்டாடிய கார்த்திக் –
ஜெஸ்ஸியை மீண்டும் பத்து வருடங்கள்
கழித்து வெவ்வேறு திசையில்
இருந்தாலும் அந்த நினைவுகள் என்றும்
நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த வண்ணம்
மீண்டும் அதே காதல் உணர்வுடன்
கதையை சொல்ல தொடங்குகிறார்,

குறும்படம் ஆரம்பித்த முதல் காட்சியில்
தான் எழுதியதை அழித்து திருத்தும்
சிம்புவாக தான் நான் என்னை
பார்த்தேன், ஒரு கதை எழுத தொடங்கும்
முன் முதல் அத்தியாயம் சரியான
அஸ்திவாரமாய் அமைய எத்தனை முறை
அடித்தல் திருத்தல் நான் செய்வேன்
என்பதை கெளதம் அங்கே என் மன
ஓட்டத்தில் காட்டியிருந்தார்,

முதல் ஃபிரேமிலேயே என்ன அழ
வைக்காதிங்க கெளதம் சார் – ன்னு
சொல்லணும் போல இருந்துச்சு,

கொஞ்சம் காம்ப்ப்ளீகேட்டட்டான
குறும்பட கதை தான், சில பேர்
சொல்லலாம் கல்யாணம் ஆன ஜெஸ்ஸி
எப்படி தன்னோட பழைய காதலனுக்கு
ஐ லவ் யூ சொல்லலாம்,எப்படி அப்படி
பேசலாம் – ன்னு, Elite Categories – ன்னு,

பட் அங்க ஜெஸ்ஸி எதற்காக
கார்த்திக்கிற்கு ஐ லவ் யூ சொல்கிறாள்
என்பதை கவனித்தால் புரியும், அவன்
மூட் ஸ்விங்கை மாற்றுவதற்காக,
ஜெஸ்ஸி சொல்லும் அந்த
மூன்றெழுத்து மந்திரம் தான்
கார்த்திக்கின் புத்துணர்ச்சி, மேலும்
அவள் தன்னுடைய ட்வின்ஸ் பேபிஸ்க்கு
அடுத்தபடியாக தன் கார்த்திக்கை
ஒரு குழந்தையாகவே பாவிக்கிறாள்,

ஒரு குழந்தை சரியாக தூங்கவில்லை
என்றால் அம்மா ஆராரிரோ பாடி
தூங்கவைப்பதில்லையா அது போல
தான் இங்கும், கார்த்திக் கொஞ்சம்
Down டைமில் இருக்கும்போது
அவனை மோட்டிவேட் செய்து
அவனை சரியான பாதையில்
ஜெஸ்ஸி வழி நடத்தி செல்கிறாள்,

கார்த்திக் – ஜெஸ்ஸி இருவரின்
குரல்கள் சொல்கிறது ஆயிரம்
ஆயிரம் காதல் கதைகளை இன்றும்
நமக்கு, கூடவே ரஹ்மான் என்னும்
இறை பாலன் தன் கருணையான
இசையை தலை கோதி வருடி விடுவது
போல் நம்மை அன்பென்ற மழையில்
நனைய வைக்கிறார்,

கடைசியாக ஃபிரேமில் பார்த்த
கமல் – காதம்பரி காதல் வசனங்கள்
அடுத்து கெளதம் எழுதிக்கொண்டிருக்கும்
நடிகர் சூர்யாவுக்கான கதை,

எது எப்படியோ
கார்த்திக் டயல் செய்த எண்
அவனுக்கு தாய்மை போற்றும்
ஜெஸ்ஸியின் காதலையும்
தன்னம்பிக்கை கொண்ட
வார்த்தைகளையும் பரிசாக தந்தது,

ஜெஸ்ஸி :

நான் வருவேன் உனக்காக

கார்த்திக் :

நீ வருவ எனக்காக

*
அவள் வந்துவிட்டாள்
அவன் எழுத்துக்களில்
அவன் செயல்களில்
அவன் எண்ண ஓட்டத்தில்
அவன் எடுக்கும் சினிமாவில்,

” கார்த்திக் டயல் செய்த எண் “

  • A Short Film by Gautham Vasudev Menon

ThankYouGVMForDisGem ❤